Home /News /technology /

ஸ்மார்ட் வாட்ச் இல்லாமல் Android மற்றும் iOS-ல் ஹார்ட் ரேட்டை அளவிடுவது எப்படி!

ஸ்மார்ட் வாட்ச் இல்லாமல் Android மற்றும் iOS-ல் ஹார்ட் ரேட்டை அளவிடுவது எப்படி!

மாதிரி படம்

மாதிரி படம்

கூகுள் ஃபிட் App-ஆனது விரலின் நிற மாற்றத்தைக் கண்டறிந்து ரீடிங்க்ஸ்களை வழங்குகிறது. அப்சர்வேஷன்களை கூகுள் ஃபிட் ஆப்ஸிலும் சேவ் செய்ய முடியும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
சில ஆண்ட்ராய்டு யூஸர்கள் தங்கள் ஸ்மார்ட் ஃபோனின் கேமராவை பயன்படுத்தி இதய துடிப்பை (heart rate) அளவிட அனுமதிக்கும் அம்சத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் அறிமுகப்படுத்தியது. இதனிடையே கடந்த மாதம் தனது கூகுள் ஃபிட் (Google Fit) அம்சத்தை விரிவுபடுத்துவதாக நிறுவனம் அறிவித்தது. ஹார்ட் ரேட் என்பது பொதுவாக 1 நிமிடத்திற்குள் இதயம் எத்தனை முறை துடிக்கிறது என்பதை குறிப்பதாகும். இப்போது கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் iOS டிவைஸ்களிலும் இந்த அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தற்போது ஐபோன் யூஸர்கள் தங்கள் சுவாசம் மற்றும் இதய துடிப்புகளை ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சின் தேவையில்லாமல் அளவிட முடியும்.

கூகுள் ஃபிட் அம்சம் ஸ்மார்ட் ஃபோனின் கேமரா மற்றும் ஃபிளாஷ் மூலம் இதயத்தை கண்காணிக்கிறது. இப்போது கூகுள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன்களுக்காவும் கூகுள் ஃபிட் அம்சத்தையும் வெளியிட தொடங்கியுள்ள நிலையில், பல ஸ்மார்ட் ஃபோன்களில் ஹார்ட் ரேட்டை அளவிட பிரத்யேக சென்சார்கள் இல்லை. இந்நிலையில் யூஸர்கள் தங்கள்து டிவைஸின் பின்பக்க கேமராவில் விரலை வைத்து ட்ராக் செய்ய முடியும். இந்த புதிய அம்சம் யூஸர்கள் பின்புற கேமரா லென்ஸின் மீது விரலை வைத்து சிறிது அழுத்தத்தை பயன்படுத்த அனுமதிக்கும். தவிர விரலை சரியான இடத்தில் வைக்க யூஸர்களுக்கு ஃபோன் வழிகாட்டுகிறது, மேலும் சிறந்த வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்து இந்த செயல்பாட்டை மேற்கொள்ளவும் இது அறிவுறுத்துகிறது.

கூகுள் ஃபிட் App-ஆனது விரலின் நிற மாற்றத்தைக் கண்டறிந்து ரீடிங்க்ஸ்களை வழங்குகிறது. அப்சர்வேஷன்களை கூகுள் ஃபிட் ஆப்ஸிலும் சேவ் செய்ய முடியும். எந்தவொரு நோய் அல்லது நிலையையும் கண்டறிதல், குணப்படுத்த, தணிக்க, தடுக்க அல்லது சிகிச்சையளிப்பதற்காக கண்காணிப்பு நோக்கத்தில் கூகுள் ஃபிட் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று Google தனது blog-ல் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்த அம்சம் இன்டர்நெட் கனக்ஷன் இல்லாமல் ஆஃப்லைனிலும் இயங்குகிறது. கீழ்வரும் படிகளை பின்பற்றி கேமரா மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட் ஃபோன்களில் ஹார்ட் ரேட்டை கண்காணிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்..

* உங்கள் Android அல்லது iOS ஸ்மார்ட் ஃபோனில் Google Fit App-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்

Also read... உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்...!

* உங்கள் டிவைஸ் இந்த அம்சத்தைப் பெற்றிருந்தால், ஹோம் பேஜில் 'Check your heart rate' என்ற ஆப்ஷனை பார்க்க முடியும். அதை Tap செய்ய வேண்டும்.

* இப்போது ஸ்மார்ட் ஃபோனின் பின்புற கேமரா லென்ஸின் மேல் உங்கள் விரல் நுனியை வைக்கவும். நீங்கள் நன்கு வெளிச்சமான பகுதியில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை என்றால் ஃபிளாஷ் லைட்டை ஆன் செய்து கொள்ளுங்கள்.

* கூகுள் ஃபிட் ஆப் உங்கள் ஹார்ட் ரேட்டை அளவிடத் தொடங்கியது, ஸ்கிரீனில் Detecting the pulse in your fingertip என்று ஒரு மெசேஜை காணலாம். உங்கள் கையை அசைக்காமல் வைத்து லேசாக விரல் நுனியை அழுத்தவும்.

Also read... புத்தாண்டை தனது க்யூட்டான டூடுலுடன் கொண்டாடும் கூகுள்...!

* இந்த App உங்கள் ஹார்ட் ரேட்டை அளவிடுவதற்கு கிட்டத்தட்ட 30 வினாடிகள் எடுத்து கொள்ளும். அது முடிந்ததும், புதிய விண்டோவில் உங்கள் ஹார்ட் ரேட்டைபார்க்க முடியும்.

* உங்கள் ஹார்ட் ரேட் மெஷர்மென்ட்டை சேமிக்க விரும்பினால், ஸ்கிரீனில் உள்ள ‘Save measurement’ பட்டனை பயன்படுத்துங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Android, Heart health, IOS

அடுத்த செய்தி