Home /News /technology /

சட்டென்று காலியாகும் ஐபோன் பேட்டரியை சரி செய்ய உதவும் 5 ஈஸியான வழிகள்

சட்டென்று காலியாகும் ஐபோன் பேட்டரியை சரி செய்ய உதவும் 5 ஈஸியான வழிகள்

ஐபோன் பேட்டரி

ஐபோன் பேட்டரி

iPhone battery : உங்கள் ஐபோனின் பிரைட்னெஸ் அதிகபட்சமாக செட் செய்யப்பட்டால், அதை பார்க்க, பயன்படுத்த நன்றாக இருக்கலாம், ஆனால் அது பேட்டரியை மிகவும் வேகமாக காலியாக்கும்.

லேட்டஸ்ட் ஆப்பிள் ஐபோன் மாடல்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவை, சிறப்பானவை என்பதற்கு விளக்கமே தேவை இல்லை. சமீபத்திய ஐபோன்கள் 120ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே அல்லது 5ஜி ஆதரவு போன்ற அம்சங்களை கொண்டுள்ளன. இருப்பினும் கூட, ஐபோன்களின் பேட்டரி விரைவாக காலியாகும் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை.

தேவையே இல்லாமல் உங்கள் ஐபோன் பேட்டரியை குறைக்கும் பல ஆப்கள் உள்ளன. உதாரணமாக - ஐபோன் 13 ப்ரோ மாடல்; இதற்கு அடிக்கடி பேட்டரி சார்ஜ் தேவைப்படுகிறது. இந்த சிக்கல் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இதை சரி செய்ய பல வழிகளும் உள்ளன, அதாவது உங்கள் ஐபோனின் பேட்டரி செயல்திறனை மேம்படுத்த பல வழிகள் உள்ளன.

ஐபோனில் உள்ள 'ஆட்டோ-பிரைட்னெஸ்' அம்சத்தை 'ஆன்' செய்யவும் : 

உங்கள் ஐபோனின் பிரைட்னெஸ் அதிகபட்சமாக செட் செய்யப்பட்டால், அதை பார்க்க, பயன்படுத்த நன்றாக இருக்கலாம், ஆனால் அது பேட்டரியை மிகவும் வேகமாக காலியாக்கும். உங்கள் போனின் டிஸ்பிளே எவ்வளவு பிரகாசமாக இருக்கிறதோ, அவ்வளவு வேகமாக உங்கள் ஐபோனின் பேட்டரி தீரும். இந்த இடத்தில் தான் நீங்கள் ஆப்பிளின் ஆட்டோ-பிரைட்னெஸ் அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். இது உங்களின் சுற்றுப்புற ஒளி நிலைமைகளுக்கு ஏற்ப, டிஸ்பிளேவிற்கு தேவையான பிரைட்னெஸை தானாகவே செட் செய்து கொள்ளும், இது ஐபோன் பேட்டரியின் ஆயுளை கணிசமாக நீட்டிக்க உதவும்.

இதையும் படிங்க..  டிரிபிள் கேமரா செட்டப்புடன் இந்தியாவில் அறிமுகமான Vivo Y75.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

'பேட்டரி-ட்ரெய்னிங்' ஆப்களை 'க்ளோஸ்' செய்யவும் : 

ஒரு ஐபோன், அதன் பேட்டரியை வேகமாக காலி செய்யும் பல பில்ட்-இன் ஆப்களை கொண்டுள்ளது. செட்டிங்ஸ்-இல் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட ஆப்களை க்ளோஸ் செய்யலாம் அல்லது டெலிட் செய்யலாம். செட்டிங்ஸ் > பேட்டரி > லாஸ்ட் 10 டேஸ் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். இது ஐபோனில் உள்ள ஆப்கள், எந்த அளவில் உங்கள் பேட்டரி உட்கொண்டுள்ளது என்கிற விவரங்களை காட்டும். அதில் அதிக அளவில் பேட்டரியை தீர்க்கும் ஆப்களை க்ளோஸ் செய்யவும். அதில் உங்களுக்குப் பயன்படாத ஆப்கள் இருந்தால் அதை டெலிட் செய்து விடவும்.

லோ பவர் மோட்-ஐ இயக்கவும் : 

ஐபோனில் லோ பவர் மோட்-ஐ இயக்குவது பேட்டரி ஆயுளை அதிகரிக்க உதவும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். இந்த அம்சம் இமெயில் வருவதை, பேக்கிரவுண்ட் ஆப் செயல்பாடுகளை ஆட்டோ அப்டேட்டை சிங்கிள் கிளிக்கில் நிறுத்தி வைக்கிறது. செட்டிங்ஸ் சென்று லோ பவர் மோட்-ஐ நீங்கள் இயக்கலாம். ஒருவேளை கண்ட்ரோல் சென்டரில் இந்த அம்சம் இல்லை என்றால், செட்டிங்ஸ் > கண்ட்ரோல் சென்டர் > கஸ்டமைஸ் கண்ட்ரோல்ஸ் > லோ பவர் மோட் சென்று அதன் அருகில் உள்ள '+' குறியீட்டை கிளிக் செய்து 'ஆட்' செய்யலாம்.
.
சஃபாரி டேப்களை ஆட்டோ-க்ளோஸ் செய்யவும் : 

ஐபோனின் பேட்டரி செயல்திறனை அதிகரிக்க மற்றொரு வழி, சஃபாரி டேப்களை ஆட்டோ-க்ளோஸ் செய்வது. இதை ஆக்டிவேட் செய்தல் நீங்கள் டேப்களை கைமுறையாக மூட வேண்டியிருக்காது. ஒருகட்டத்தில் இது உங்கள் ஐபோனின் பேட்டரியை நீட்டிக்க உதவும். இந்த அம்சத்தை இயக்க, செட்டிங்ஸ் > சஃபாரி > க்ளோஸ் டேப்ஸ் என்பதை கிளிக் செய்து பின் தேவையான கால அவகாசத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

சார்ஜ் செய்யும் போது பயன்படுத்த வேண்டாம் : 

இது ஐபோனுக்கு மட்டுமல்ல, அனைத்து போன்களுக்குமான பேட்டரி ஆயுளை நீடிக்க உதவும் ஒரு வழிமுறை ஆகும். ஐபோன் சார்ஜருடன் இணைக்கப்பட்டிருக்கும் போது அதைப் பயன்படுத்துவது, போன் பேட்டரிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இது பேட்டரி ஆயுளைக் குறைப்பது மட்டுமல்லாமல் சார்ஜ் சைக்கிளையும் சீர்குலைக்கும். எனவே, இதை தவிர்ப்பது நல்லது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: IPhone

அடுத்த செய்தி