பேஸ்புக் உங்களின் நடவடிக்கைகளை ட்ராக் செய்கிறதா? நீங்கள் கண்காணிக்கப்படுவதை தடுக்கும் வழிமுறைகள்!

பேஸ்புக் உங்களின் நடவடிக்கைகளை ட்ராக் செய்கிறதா? நீங்கள் கண்காணிக்கப்படுவதை தடுக்கும் வழிமுறைகள்!

ஃபேஸ்புக்

யூசர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஆஃப்கள் மற்றும் பிற வலைத்தளங்களை பேஸ்புக் கண்காணிப்பில் இருந்து முடக்க விரும்பினால், "ஆஃப்-பேஸ்புக் ஆக்டிவிட்டி" என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பேஸ்புக் சமீபத்தில் அடிப்படை செயல்பாட்டிற்கு தேவைப்படுவதை விட நிறைய யூசர் தரவை அணுகுவதால் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் சமீபத்தில் அறிவித்த பிரைவசி பாலிசி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. காரணம் யூசர்களின் அனைத்து விதமான தகவலைகளையும் அணுகுவது மட்டுமல்லாமல் அதனை நிறுவனத்திற்கு சொந்தமான மற்ற செயலிகளுக்கும் பகிரும் என்பது தான். இதேபோல, பேஸ்புக் கடந்த சில காலமாகவே யூசர்களின் நடவடிக்கைகளை ட்ராக் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. 

ஒரு யூசர் தனது மொபைலில் கூகுள் க்ரோம்  மூலமாகவோ அல்லது பிளிப்கார்ட், அமேசான் போன்ற செயலியில் தேடும் ஒரு விஷயத்தை பேஸ்புக் அதன் வலைதள பக்கத்தில் அவர்களுக்கு பரிந்துரைத்து வருகிறது. இது குறித்து பேஸ்புக் தெரிவித்தாவது, “வணிகங்கள் மற்றும் நிறுவனங்களின் செயலிகள் மற்றும் வலைத்தளங்களைப் பார்வையிடுவது போன்ற அவர்களுடனான உங்கள் தொடர்புகளைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை இந்த அம்சம் கண்காணிக்கும்.” என தெரிவித்துள்ளது. இந்த தகவலை பேஸ்புக் தனது பயனர்களை புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு அறிமுகப்படுத்தவும், மேலும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்புடைய விளம்பரங்களைக் காண்பிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக் என்ன தரவுகளை சேகரிக்கிறது?

உங்கள் மொபைலில் ஏதேனும் செயலியில் உள்நுழைந்து, ஒரு பொருளைத் தேடுவது, விருப்பப்பட்டியலில் நீங்கள் சேர்க்கும் பொருட்களின் விவரங்கள், பர்ச்சேஸ் அல்லது நன்கொடை செய்வது போன்ற அனைத்து விஷயங்களும் பேஸ்புக்-க்கு தெரியும். உதாரணத்திற்கு, விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் ஒரு ஆன்லைன் வங்கி செயலி அல்லது MakeMyTrip செயலியை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் உங்களின் உங்கள் எல்லா செயல்பாடுகளையும்  பேஸ்புக் கண்காணிக்கும் மற்றும் அதற்கேற்ப விளம்பரங்களை உங்கள் பேஸ்புக் வலைப்பக்கத்தில் இலக்காக வைக்கும். பேஸ்புக்கில், உங்கள் பர்ச்சேஸ் ஹிஸ்டரி, தொடர்புகள், சர்ச் ஹிஸ்டரி, விளம்பரங்கள் அல்லது நீங்கள் தொடர்பு கொள்ளும் தயாரிப்புகள், துல்லியமான இடம், முகவரி மற்றும் பல தரவுகளை இது சேகரிக்கிறது. அந்த வகையில் உங்கள் அன்றாட நடவடிக்கைகளை பேஸ்புக் கண்காணிப்பதில் இருந்து தடை செய்ய வேண்டுமானால் அதற்கு சில வழிகள் உள்ளன.

பேஸ்புக் கண்காணிப்பை முடக்குவது எப்படி?

* உங்கள் தொலைபேசியிலிருந்து, ‘செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி' என்ற ஆப்சனுக்கு செல்லவும். பின்னர், அதில் “செட்டிங்ஸ்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* அதில், “Your Facebook Information” என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

* அதில் "Off-Facebook Activity” என்பதைத் தேர்தடுப்பதன் மூலம் பேஸ்புக் கண்காணிப்பை முடக்கலாம்.

* மேலும் இந்த விருப்பம் குறைந்த காலத்திற்கு மட்டுமே செயலில் இருக்கும். எதிர்காலத்தில் உங்கள் தரவுகள் கண்காணிக்கப்படுவதை தடுக்க விரும்பினால் செட்டிங்ஸில் இருக்கும் more option என்ற விருப்பத்திற்கு செல்ல வேண்டும்.

* அதில் "Manage Future Activity" என்பதைத் தட்டவும். அதில் மேனேஜ் பியூச்சர் ஆக்டிவிட்டி-க்கு அருகில் உள்ள பட்டனை ஆப் செய்ய வேண்டும்.

* ஏற்கனவே சேமிக்கப்பட்ட வரலாற்றை அழிக்க விரும்பினால், “ஆஃப்-பேஸ்புக் ஆக்டிவிட்டி"-க்கு மீண்டும் சென்று “Clear History" என்பதைத் கிளிக் செய்ய வேண்டும்.

Also read... பேஸ்புக்கில் பரவும் அவதூறு கருத்துக்களை தவிர்க்க புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

யூசர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஆஃப்கள் மற்றும் பிற வலைத்தளங்களை பேஸ்புக் கண்காணிப்பில் இருந்து முடக்க விரும்பினால், "ஆஃப்-பேஸ்புக் ஆக்டிவிட்டி" என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளலாம். இருப்பினும், பேஸ்புக்கால் உங்கள் தரவில் சிலவற்றைப் பெற முடியும். உங்கள் செயல்பாடுகளை கண்காணிக்க பேஸ்புக் நிறுவனத்தின் கருவிகளைப் 3ம் தரப்பு ஆஃப்கள் மட்டும் வலைத்தளங்கள் பயன்படுத்துவதால், உங்கள் தரவுகள் பேஸ்புக் நிறுவனத்தால் பெற முடியும். இருப்பினும், யூசர்களின் உடல்நலம் அல்லது நிதித் தரவைப் பகிர்ந்து கொள்ள மூன்றாம் தரப்பினரை ஒருபோதும் கேட்க மாட்டோம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: