முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வாட்ஸ் அப்பில் நோட்டிபிகேசன் தொல்லை தாங்கலையா... உங்களுக்குதான் இந்த பதிவு

வாட்ஸ் அப்பில் நோட்டிபிகேசன் தொல்லை தாங்கலையா... உங்களுக்குதான் இந்த பதிவு

மாதிரி படம்

மாதிரி படம்

தனிப்பட்ட மொபைல் அனுபவங்களைப் பொறுத்து, ஒட்டுமொத்த வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்கள் அனுபவங்கள் வேறுபடலாம். செயலியை நீங்கள் மொபைலிலிருந்து அன்-இன்ஸ்டால் செய்யாமல், வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்களை எளிதான முறையில் நிர்வகிக்கும் வழிகள் இங்கே.

வாட்ஸ்அப் செயலியை நிர்வகிப்பதில், ஆண்டிராய்டு மற்றும் iOS சாதனங்கள் ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இவற்றில், வாட்ஸ்அப் ஆப்பில் நீங்கள் பெறும் நோட்டிபிகேஷன்களும் அடங்கும். உலகளவில் மிகவும் பிரபலமான செயலியாக இருந்து வரும் வாட்ஸ்அப், இந்தியாவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் யூசர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், நீங்கள் இந்த செயலியில் செய்தியைப் பெறாமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில், பணிகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என்று இரண்டு தரப்பினருக்குமே, வாட்ஸ்அப் பயனுள்ள கருவியாக செயல்படுகிறது. சக ஊழியர்களை தனித்தனியாக chat வழியே உரையாடலாம் அல்லது குரூப் சாட்டை நிர்வகித்து, கண்காணிக்கவும் வாட்ஸ்அப் உதவியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, உங்கள் போனில் தொடர்ச்சியான செய்தி அறிவிப்புகளால் நீங்கள் சோர்வடைந்தால், செயலியின் செட்டிங்கை மாற்றுவதன் மூலம் வாட்ஸ்அப் ஆப்பின் நோட்டிபிகேஷன்களை எளிதாக நிர்வகிக்கலாம். Android மற்றும் iOS தொலைபேசிகள் இரண்டும் நோட்டிபிகேஷன்களை கட்டுப்படுத்த ஒரே மாதிரியான முறைகளைக் கொண்டுள்ளன.

இருப்பினும், தனிப்பட்ட மொபைல் அனுபவங்களைப் பொறுத்து, ஒட்டுமொத்த வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்கள் அனுபவங்கள் வேறுபடலாம். செயலியை நீங்கள் மொபைலிலிருந்து அன்-இன்ஸ்டால் செய்யாமல், வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்களை எளிதான முறையில் நிர்வகிக்கும் வழிகள் இங்கே.

இதன் முதல் படியாக, நீங்கள் வாட்ஸ்அப் அறிவிப்புகளை முற்றிலுமாக முடக்கினால், சக ஊழியர்கள், குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடமிருந்து முக்கியமான செய்திகளை இழக்க நேரிடும். எப்படி இருந்தாலும், வாட்ஸ்அப்பிற்குச் சென்று Android யூசர்கள் Settings > Notifications > பின்பற்றி நோட்டிபிகேஷன்களை முடக்க வேண்டும். அதில் தனிப்பட்ட மெசேஜ் மற்றும் குரூப் மெசேஜ் என தனித்தனி அமைப்புகள் இருக்கும், அதில் உங்களுக்கு தேவையான விஷயங்களை நீங்கள் மாற்றி கொள்ளலாம். அல்லது நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரின் நோட்டிபிகேஷனை மட்டும் முடக்க விரும்பினால், அவரின் சாட் பக்கத்தை திறந்து வலதுபக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால் மியூட் நோட்டிபிகேஷன் (mute notification) என்ற ஆப்சன் இருக்கும் அதனை தேர்ந்தெடுத்து எளிதாக முடக்காலம்.

Also read... ரூ.399-க்கு ரிலையன்ஸ் ஜியோ ஃபைபரின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்!

இணைய பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்.. Vi, ஏர்டெல் நெட்வொர்க்குகளின் வேகம் என்ன?

iOS யூசர்கள் ஐபோனின் வாட்ஸ்அப்பிற்குச் சென்று Settings > Notifications > Allow Notifications (toggled off) பின்பற்றி அறிவிப்பை முடக்கலாம்.

அதேநேரத்தில் லாக் ஸ்க்ரீன் நோட்டிபிகேஷன், நோட்டிபிகேஷன் சென்டர் மற்றும் பேனர்கள் போன்ற அமைப்புகளையும் யூசர்கள் நிர்வகிக்கலாம். வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் முழுமையாக முடக்காமல் ஒலி அல்லது பேட்ஜ்களை மட்டுமே முடக்கும் விருப்பமும் உள்ளது.

மறுபுறம், வாட்ஸ்அப் செயலி, இன்பில்டாக ஷோ நோட்டிபிகேஷன்ஸ் மற்றும் சவுண்ட்ஸ் போன்ற அறிவிப்பு அமைப்புகளை வழங்குகிறது. இங்கே, யூசர்கள் குழு சாட் அறிவிப்புகளையும், அதே விருப்பங்களுடன் நிர்வகிக்கலாம்.

மெசேஜ் அறிவிப்புகளுக்கு, செய்தியின் முன்னோட்டத்தைக் காண்பிக்கும் வகையில் ஷோ ப்ரீவியூ (show preview) என்பதை யூசர்கள் தேர்வு செய்யலாம். செயலியின் செட்டிங் வைப்ரேஷன் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை நிர்வகிப்பதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது. அறிவிப்புகளை முழுவதுமாகத் தடுக்க விரும்பாத யூசர்கள், தனிப்பட்ட அல்லது குழு சாட்களை முடக்குவதை மட்டும் பரிசீலிக்கலாம். இதிலே, எட்டு மணிநேரம், ஒரு வாரம் அல்லது எப்போதும் (always), என்று மூன்று விருப்பங்களில் நோட்டிபிகேஷன்களை நிறுத்தும் விருப்பங்கள் உள்ளது. இதற்கு முன்பு, 'எப்போதும்' நோட்டிபிகேஷன்களை முடக்க வேண்டும் என்ற விருப்பத்தை வழங்குவதற்குப் பதிலாக, ஒரு வருடத்திற்கு அறிவிப்புகளை முடக்கும் விருப்பத்தை யூசர்களுக்கு வழங்கியிருந்தது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: WhatsApp, Whatsapp Update