Home /News /technology /

உங்கள் மொபைலின் செயல்திறனை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை

உங்கள் மொபைலின் செயல்திறனை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை

மொபைல் போன்

மொபைல் போன்

Android apps : திரைபின்னணியில் இயங்கும் ஆண்டிராய்ட் செயலிகளை முறையாக க்ளோஸ் செய்வது எப்படி தெரியுமா?

உங்களுடைய நவீன ஸ்மார்ட்போன்களில், ஆண்டிராய்ட் செயலிகளை நீங்கள் க்ளோஸ் செய்யும்போது, அவற்றின் செயல்பாடு உண்மையிலேயே நிறுத்தப்படாது என்பது உங்களுக்கு தெரியுமா? மாறாக, அந்த செயலிகள் திரைபின்னணியில் (பேக்ரவுண்ட்) செயல்பட்டுக் கொண்டு, உங்கள் போனின் பேட்டரி மற்றும் இதர வளங்களை உறிஞ்சிக் கொண்டிருக்கும்.

செயலிகளை நீங்கள் மீண்டும் பயன்படுத்த நினைக்கும்போது, இதுபோல திரைபின்னணியில் அவை இயங்கிக் கொண்டிருந்தால் பயனுள்ளதாக அமையும் என்பது உண்மைதான். ஆனால், கைப்பேசிகளின் செயல்திறன் வேகத்தை அவை குறைத்துவிடும். கணினிகளில் விண்டோஸ் திரையை மினிமைஸ் செய்து வைப்பதைப் போலத்தான் இதுவும் செயல்படுகிறது.

திரைபின்னணியில் இயங்கும் ஆண்டிராய்ட் செயலிகள் சில உங்கள் போனின் செயல்திறனை குறைத்து, பேட்டரியை உறிஞ்சி உங்களுக்கு மன அழுத்தத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நேரத்தையும் வீணடிக்கிறது. இதுபோல, திரைபின்னணி செயலிகளால் சில சமயம் உங்கள் ஸ்மார்ட்போன்கள் இயக்கத்தை கூட நிறுத்திக் கொள்ளும். ஆகவே, நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் சமயங்களில் செயலிகளை மூடிவிடுவதே இதற்கு சரியான தீர்வாக அமையும். எல்லாம் சரிதான், ஆண்டிராய்ட் செயலிகளை முறையாக க்ளோஸ் செய்வது எப்படி தெரியுமா?

ஆண்டிராய்ட் ஹோம் ஸ்கீரின்-இல் இருந்து க்ளோஸ் செய்யும் வசதி : 

உங்கள் ஸ்மார்ட்போன் திரைபின்னணியில் இயங்கும் அனைத்து செயலிகளையும் ஒரே சமயத்தில் மூடுவதற்கான வசதி உங்கள் ஹோம் ஸ்க்ரீன் பக்கத்தில் மட்டுமே உள்ளது. தொடுதிரையின் மையப் பகுதி வரையிலும் நீங்கள் ‘ஸ்வைப்’ செய்வதன் மூலமாக, அண்மையில் பயன்படுத்திய அனைத்து செயலிகளின் சுருக்க வடிவங்களை அது காட்டும். அப்போது, ‘குளோஸ் ஆல்’ என்ற வசதியை கிளிக் செய்வதன் மூலமாக அனைத்து செயலிகளையும் மூடிவிடலாம்.

ALSO READ |  உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடித்து லாக் செய்து, தரவுகளை நீக்குவது எப்படி?

இதேபோல தனிப்பட்ட செயலியையும் நீங்கள் ஸ்வைப் செய்து மூடலாம். சில ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற ஸ்வைப் வசதி இருக்காது. அப்போது, ஹோம் ஸ்க்ரீன் பக்கத்தில் உள்ள சிறு பெட்டியை டாப் செய்வதன் மூலமாக, பின்னணியில் உள்ள அனைத்து செயலிகளையும் பார்த்து, ஒரே மூச்சில் அவற்றை மூடி விடலாம்.

சில சமயம், ஒரு சில செயலிகள் செயல்படாமல், உங்களை எரிச்சல் அடைய வைக்கும். அதுபோன்ற சமயங்கள் ‘ஃபோர்ஸ் ஸ்டாப்’ என்ற வசதியை பயன்படுத்தி அதை முடிவுக்கு கொண்டு வரலாம். இதைச் செய்வதால், சில நேரங்களில் குறிப்பிட்ட அந்த செயலியின் செயல்பாடு பாதிக்கப்படலாம். அப்போது, நீங்கள் அதை அன்-இன்ஸ்டால் செய்து, மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். எனினும், ஃபோர்ஸ் ஸ்டாப் செய்வதற்கான வழிமுறைகள் இதோ…

ALSO READ |  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3, கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மீது "வேற லெவல்" ஆபர் அறிவிப்பு!

ஆண்டிராய்ட் செயலிகளை ஃபோர்ஸ் ஸ்டாப் செய்வது எப்படி?

* ஒரு செயலியை டாப் செய்து, அழுத்திப் பிடிக்க வேண்டும்.
* இதன் மூலமாக, அன்-இன்ஸ்டால், ரிமூவ் மற்றும் ஆப் இன்ஃபோ போன்ற வசதிகளை கொண்ட பாப்-அப் மெனு ஒன்றும் தோன்றும். ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இது வேறுபடலாம்.  இதில் நீங்கள் ஆப் இன்ஃபோ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
* இதில், செயலிகளின் விவரங்களை காட்டும். அதில், நீங்கள் ஃபோர்ஸ் ஸ்டாப் என்ற வசதியை தேர்வு செய்யலாம்.
* ஆனால், இந்த வழிமுறையில் ஃபோர்ஸ் ஸ்டாப் செய்ய உங்கள் ஸ்மார்ட்போன் அனுமதிக்கவில்லை என்றால், பிறகு செட்டிங்க்ஸில் செல்லலாம்.
* இதில் ஆப் மேனேஜர் அல்லது ஆப்ஸ் அண்ட் நோட்டிபிகேஷன் என்பதை தேர்வு செய்யவும்
* இங்கு உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து செயலிகளையும் காட்டும். இல்லை என்றால், ஷோ ஆல் ஆப்ஸ் என்ற வசதியை பயன்படுத்தவும்’
* இப்போது நீங்கள் மூட வேண்டிய செயலி எதுவென கண்டறிந்து, ஃபோர்ஸ் ஸ்டாப் என கொடுக்கலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Android, Mobile phone, Smart Phone

அடுத்த செய்தி