• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • உங்கள் போனில் இருந்தே பிடிஎஃப்-யில் கையெழுத்து போடலாம் - இதோ அதற்கான வழி!

உங்கள் போனில் இருந்தே பிடிஎஃப்-யில் கையெழுத்து போடலாம் - இதோ அதற்கான வழி!

PDF Fikes

PDF Fikes

முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அடோப் அக்ரோபேட் ரீடர் ஆப்-பை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

  • Share this:
நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு இன்று பல்வேறு விதமான ஆப்ஸ்கள் உருவாகி வருகின்றன. இந்த ஆப்ஸ்கள் அனைத்தும் ஒரே ஒரு துறைக்கு மட்டும் வடிவமைப்பு செய்யப்படுவதில்லை. எல்லாவித துறையினரும் பயன்படுத்தும் வகையில் இந்த ஆப்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான ஆப்ஸ்கள், பலவித பாடங்களை கொண்ட கல்வி சம்பந்தமான ஆப்ஸ்கள், தேவையானவற்றை எளிதில் பகிர்ந்து கொள்ள உதவும் ஆப்ஸ்கள், அலுவலக தேவைக்கான ஆப்ஸ்கள், படங்களை பார்ப்பதற்கான ஆப்ஸ்கள் என வெவ்வேறு வகையான ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரில் அன்றாடம் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இவற்றில் அலுவலக தேவைகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் உதவக் கூடிய பல ஆப்ஸ்கள் உள்ளன. அந்த வகையில் பிடிஎஃப் ஃபைல்களை பயன்படுத்தும் ஆப்ஸ்கள் மிகவும் முக்கியமானவை. இதை எளிதில் உங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த எண்ணற்ற ஆப்ஸ்கள் உள்ளன. முன்பெல்லாம் இந்த பிடிஎஃப் ஃபைல்களில் கையெழுத்திட கணினியின் தேவை மிக முக்கியமானது.

ஆனால் ஒரு சில ஆப்ஸ்கள் அறிமுகமான பிறகு அவற்றின் உதவியுடன் எளிதாக உங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கையெழுத்திடலாம். இதற்கு உங்கள் மொபைலில் அடோப் அக்ரோபேட் ரீடர் ஆப் (Adobe Acrobat Reader) இருந்தால் போதும். இதை பற்றிய தெளிவான வழிமுறையை இனி அறிந்து கொள்ளலாம்.

Also read:  தொழிலதிபர் வீட்டில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ரூ.2 கோடியை கொள்ளையடித்த வீட்டு வேலைக்காரர்கள்…

முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அடோப் அக்ரோபேட் ரீடர் ஆப்-பை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். பிறகு அதில் சைன்-இன் ஆவதற்கு உங்களின் இமெயிலை தந்து புது அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். இதை முடித்த பிறகு, அந்த பக்கத்தின் கீழ் பகுதியில் "Files" என்கிற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்த பின் உங்களின் எல்லா பிடிஎஃப் ஃபைல்களையும் இங்கு காண முடியும். இந்த ஃபைல்களை உங்களின் ஜிமெயில், கூகுள் டிரைவ், ஒன் டிரைவ், ட்ராப்பாக்ஸ் போன்றவற்றின் மூலமும் பார்க்கலாம். இதில் உங்களுக்கு தேவையான ஃபைலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, இதிலுள்ள “Edit” என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு பலவித ஆப்ஷன்கள் ஸ்கிரீனில் தோன்றும். அவற்றில் “Fill & Sign” என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து உங்களுக்கான கையெழுத்தை உருவாக்க வேண்டும்.

Also read: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்த 22 மாநிலங்கள்.. வரியை குறைக்காத மாநிலங்கள் எவை?

இதற்கு கையெழுத்து போன்று தரப்பட்டுள்ள ஐக்கானை கிளிக் செய்ய வேண்டும். உங்களின் கையெழுத்தை நீங்கள் நேரடியாக ஸ்கிரீனில் வரையலாம் அல்லது டிஜிட்டல் கையெழுத்தை உருவாக்கி கொள்ளலாம். மேலும் உங்களின் கையெழுத்தில் மாற்றம் செய்ய விரும்பினால், அந்த குறிப்பிட்ட பெட்டிக்குள் வரையலாம். அல்லது உங்கள் மொபைல் கேமிரா பயன்படுத்தி டிஜிட்டல் கையெழுத்தை போட்டோ எடுக்கலாம். பிறகு "done" என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் பிடிஎஃப் ஃபைலுக்கு சென்று, கையெழுத்திடும் பகுதியை கிளிக் செய்யுங்கள். கையெழுத்தை சரியான இடத்தில் வைக்க அட்ஜஸ்ட்டபிள் பாக்ஸ் ஒன்று தோன்றும். வேண்டுமென்றால் அதை பயன்படுத்தி கொள்ளலாம். இது முடிந்ததும், “ok” பட்டனை கிளிக் செய்திடவும். அடுத்த முறை பிடிஎஃப் ஃபைலில் கைழுத்திட "Edit" ஆப்ஷனை கிளிக் "Fill & Sign" என்பதை தேர்வு செய்தால் மட்டும் போதும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: