ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி செம ஈசி.. Paytmல் சூப்பர் அப்டேட்.! மற்ற UPI பயனர்களுக்கு பணம் அனுப்ப புது வசதி!

இனி செம ஈசி.. Paytmல் சூப்பர் அப்டேட்.! மற்ற UPI பயனர்களுக்கு பணம் அனுப்ப புது வசதி!

paytm

paytm

Paytm இல் இருந்து GPay, PhonePe மற்றும் இது போன்ற பல மூன்றாம் தரப்பு UPI பயனர்களுக்கு நேரடியாக உங்கள் Paytm- வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைப் பெறவும் அனுப்பவும் அனுமதிக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • CHENNAI |

  Paytm இலிருந்து மற்ற UPI பயனர்களுக்கு பணம் அனுப்பும் புதிய அம்சத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  தற்போது வரை Paytm கணக்கில் இருந்து இருந்து மற்றொரு Paytm கணக்கிற்கு வெறும் தொலைபேசி எண் இருந்தாலே பணம் அனுப்பிவிடலாம். ஆனால் Paytm கணக்கு இல்லாதவர்களுக்கும் மற்ற UPI கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எப்படி பணம் செலுத்துவது என்ற கேள்வி எழுந்து வந்தது. இதுவரை Paytm கணக்கு இல்லாதவர்களுக்கு அவர்களது வாங்கி கணக்கை பணம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டு வந்தது.

  அதை மற்ற UPI கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக பணம் அனுப்பும் வசதி இப்பொது வழங்கப்படுகிறது. அதற்காக புதிய ஒரு அம்சம் Paytm செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : செவ்வாய் கிரகம் டூ பூமி.. மண் மாதிரிகளை பக்காவாக பார்சல் செய்யும் நாசா.. வீடியோ!

  இதன் மூலம், Paytm இல் இருந்து GPay, PhonePe மற்றும் இது போன்ற பல மூன்றாம் தரப்பு UPI பயனர்களுக்கு நேரடியாக உங்கள் Paytm- வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைப் பெறவும் அனுப்பவும் அனுமதிக்கிறது. இந்த புதிய அம்சம், வெவ்வேறு ஆப்கள் பயன்பாட்டின் எந்தத் தொந்தரவும் இல்லாமல் UPI கட்டணங்களை விரைவாகவும் எளிதாகவும் செய்ய உதவும்.

  Paytm இலிருந்து GPay மற்றும் PhonePe போன்ற பிற UPI ஆப்ஸுக்கு பணம் அனுப்புவது எப்படி என்று சொல்கிறோம்..

  • முதலில் உங்கள் Paytm ஆப்பை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கவும்.
  • Paytmஐத் திறந்து, UPI பணப் பரிமாற்றப் பிரிவின் கீழ் "UPI ஆப்ஸுக்கு" என்பதைத் தட்டவும்
  • இப்போது மற்ற UPI கணக்கு ஐடியை உள்ளிடவும்
  • அப்படி 1 கணக்கு இருந்தால் அது அங்கீகரிக்கப்பட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லும்.

  • நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்
  • பணப் பரிமாற்றத்தைத் தொடங்க இப்போது பணம் செலுத்து என்பதைத் தட்டவும்
  • பின்னர் உங்கள் Paytm பின்னை உள்ளிடவும்
  • இப்போது நீங்கள் விரும்பிய UPI கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டிருக்கும்.

  பெறுநரிடம் Paytm கணக்கு இல்லையெனில், அவர்களின் PhonePe அல்லது GPay கணக்குகளுக்கு நீங்கள் பணத்தை அனுப்ப விரும்பினால், இந்த முறை செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Paytm, UPI