ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் 4 வழிகள்

உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் 4 வழிகள்

 கூகுள்

கூகுள்

Google secure | உங்கள் பெயர், பிறந்த தேதி, பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் பெயர்களை உங்கள் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்த வேண்டாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கோடிக்கணக்கான மக்களால் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள், அவர்களது வாழ்க்கையில் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது எனலாம். இன்டர்நெட்டை பயன்படுத்துவதில் துவங்கி இமெயில் சர்விஸ், புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனில் sign-in செய்வது வரை பல மேம்பட்ட அம்சங்களை பயன்படுத்த கூகுளை நாம் பெரிதும் சார்ந்திருக்கிறோம்.

  தவிர கிரெடிட்/டெபிட் கார்டு, மொபைல் நம்பர் போன்ற தனிப்பட்ட, தொழில்முறை மற்றும் நிதி விவரங்கள் உட்பட முக்கியமான தகவல்களை நமது கூகுள் அக்கவுண்ட் கொண்டுள்ளது. இப்படி நமது தரவுகளின் புதையலாக இருக்கும் கூகுள், ஹேக்கர்களின் பிரதான இலக்காக இருப்பதில் ஆச்சர்யமில்லை. பல சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும் பலர் தங்களது அக்கவுண்ட்டை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டுவதும் ஹேக்கர்களுக்கு வசதியாக போய்விடுகிறது.

  உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை பாதுகாக்க நீங்கள் பின்பற்ற வேண்டியவை...

  பாஸ்வேர்ட்களை ட்ராக் செய்யுங்கள்:

  உங்கள் பெயர், பிறந்த தேதி, பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் பெயர்களை உங்கள் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்த வேண்டாம். ஹேக்கர்ஸ் உங்கள் பாஸ்வேர்ட்களை யூகிக்க முடியாத அளவிற்கு கடினமாக மற்றும் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட்களை வைக்க வேண்டும். அதே போல உங்களிடம் பல டிஜிட்டல் அக்கவுண்ட்ஸ் இருக்கும் போது,

  அவற்றின் பாஸ்வேர்ட்களை ட்ராக் செய்வது சற்று கடினமாக இருக்கும். எனினும் கூகுளை பொறுத்த வரை பாஸ்வேர்ட் செக்யூரிட்டி செக்கப் மூலம் நீங்கள் இதை எளிதாக செய்யலாம். உங்களது saved passwords-களை check your passwords மூலம் சரிபார்க்கலாம். ஒருவேளை உங்கள் பாஸ்வேர்ட்டிற்கு ஆபத்து என்றால் "உங்கள் பாஸ்வேர்ட் சில தரவு மீறலில் கண்டறியப்பட்டது. உங்கள் அக்கவுண்ட்டை பாதுகாக்க, இந்த பாஸ்வேர்ட்களை இப்போது மாற்ற வேண்டும். சமீபத்திய மாற்றங்கள் இங்கு தோன்றுவதற்கு நேரம் ஆகலாம்" என்ற பாப்அப் தோன்றும்.

  சேஃப் பிரவுசிங்கை எனேபிள் செய்யவும்:

  ஆபத்தான வெப்சைட்களை அணுகுவதில் இருந்து யூஸர்களை பாதுகாக்க மேம்பட்ட அம்சமான safe browsing ஆப்ஷனை கூகுள் கொண்டுள்ளது. யூஸர்கள் ஆபத்தான வெப்சைட்களை விசிட் செய்யும் போது அல்லது ஆபத்தான ஃபைல்களை டவுன்லோட் செய்ய முயற்சிக்கும் போது எச்சரிக்கைகளை காட்டுவதன் மூலம், யூஸர்களின் அக்கவுண்ட்ஸ் மற்றும் டிவைஸ்களை பாதுகாக்க உதவுகிறது. மேலும் இந்த அம்சம் யூஸர்களின் பாஸ்வேர்ட்ஸ் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் எச்சரிக்கிறது.

  புதிய அக்கவுண்ட் sign-in அலெர்ட்ஸ்:

  யூஸர்கள் சில நேரங்களில் தங்கள் சொந்த டிவைஸ்கள் அல்லாமல் வேறு டிவைஸ்களில் தங்களது கூகுள் அக்கவுண்ட்டை பயன்படுத்த நேரிடுகிறது. குறிப்பிட்ட யூஸர் தனது அக்கவுண்ட்டை வேறு டிவைஸில் அக்சஸ் செய்ய முறிச்சித்தால் கூட அவரது சொந்த டிவைஸிற்கு கூகுள் புதிய sign-in alert-ஐ அனுப்புகிறது. அவர் தான் குறிப்பிட்ட அக்கவுண்ட்டை அக்சஸ் செய்கிறார் என்பதை உறுதிப்படுத்திய பிறகே sign-in ஆகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களின் கூகுள் அக்கவுண்ட் எங்கிருந்து அக்சஸ் செய்யப்பட்டது என்பதை யூஸர்கள் கண்காணிக்க உதவும்.

  Read More: குறைந்த விலையில் நெட்பிளிக்ஸின் புதிய “Basic with ads” பிளான்! இந்தியாவிற்கு எப்போது கிடைக்கும்?

  கூகுள் செக்யூரிட்டி செக்கப்:

  உங்கள் கூகுள் அக்கவுண்ட் பாதுகாப்பாக மற்றும் பிரைவசியாக இருப்பதை உறுதிசெய்ய, Security checkup ஆப்ஷனை வழங்குகிறது.மேலும் உங்கள் கூகுள் அக்கவுண்டில் உள்நுழைய பயன்படுத்தப்பட்ட டிவைஸ்களின் பட்டியலை வழங்குகிறது. நீண்ட நாட்களாக நீங்கள் பயன்படுத்தாத டிவைஸ்களை கண்டால், அதிலிருந்து உங்கள் அக்கவுண்டிற்கான அக்ஸஸை அகற்றுமாறும் கூகுள் கேட்கும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Google, Google News