வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் அதனை பார்ப்பது எப்படி?

வாட்ஸ் அப்

ஒருவர் நமக்கும் அனுப்பும் மெசேஜை படித்துவிட்டோமா? இல்லையா? என்பதை அவருடைய வாட்ஸ் அப் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும்.

  • Share this:
அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய மெசேஜ் செயலியான வாட்ஸ்அப்பில் பல்வேறு எளிமையான ஆப்சன்கள் உள்ளன. அதனை எப்படி பயன்படுத்துவதென்று பலருக்கும் தெரிவதில்லை. உதாராணமாக கூறவேண்டும் என்றால், ஒருவர் நமக்கும் அனுப்பும் மெசேஜை படித்துவிட்டோமா? இல்லையா? என்பதை அவருடைய வாட்ஸ் அப் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும். ஒருவேளை மெசேஜ் படித்து அவருக்கு உரிய பதில் அனுப்ப வில்லை என்றால் இருவருக்கும் இடையில் தர்ம சங்கடமான நிலை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

இத்தகைய சூழல்களை தவிர்க்கவும், நமக்கு ரிசீவ்வான மெசேஜ்ஜை அனுப்பியவருக்கு தெரியாமல் படிக்கவும் சில வழிகள் உள்ளன. இந்த ஆப்சன்களைப் பயன்படுத்தி சில மணி நேரங்கள் எடுத்துக்கொண்டு பிறகு உரிய பதிலை அவருக்கு அனுப்ப முடியும். அப்போது, நீங்கள் எப்போது மெசேஜ் படித்தீர்கள் என்ற விவரம் அவருக்கு தெரியாது. அதற்கு உங்கள் வாட்ஸ் அப் செட்டிங்ஸிற்கு சென்று read receipts அல்லது blue ticks ஆப்சன்களை ஆஃப் செய்ய வேண்டும். இது எளிமையான செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்யும்போது, மெசேஜை நாம் படித்தாலும், எப்போதும் படித்தோம் என்ற விவரம் அவருக்கு காட்டாது. read receipts -ஐ நீங்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்றால் Accounts > Privacy> Turn off என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

Also Read : வாட்ஸ் அப்பில் இப்படியொரு அம்சம் இருக்கா? இனி யார் தொந்தரவும் இருக்காது

இந்த வழிகள் இல்லாமலும் இன்னும் சில வழிகள் இருக்கின்றன. வாட்ஸ் அப் மெசேஜை ஓபன் செய்வதற்கு முன்பாக, உங்கள் செல்போனில் செட்டிங்ஸூக்கு சென்று ஏரோஃபிளேன் மோடை (Airplane Mode)-ஐ ஆக்டிவேட் செய்து விடுங்கள். பின்னர் வாட்ஸ்ப் மெசேஜை ஓபன் செய்து படித்துவிட்டு மீண்டும் ஏரோஃபிளேன் மோடை ஆன் செய்தீர்கள் என்றாலும், நீங்கள் மெசேஜை படிக்கவில்லை என்றே திரையில் காண்பிக்கும். இதற்கடுத்தபடியாக, லாஸ்ட் சீன் (Last Seen) என்ற ஆப்சனை ஆப் செய்து வைக்க வேண்டும்.

அதாவது, Go to Settings > Click on Account > Select Privacy என்ற வழிமுறையைப் பின்பற்றி இதனை ஆக்டிவேட் செய்யுங்கள்.
உங்கள் தொடர்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் எப்போது மெசேஜ் படிக்கிறீர்கள் என்ற விவரம் தெரியாது. வாட்ஸ் ஆப்பில் இருக்கும் “unread” வசதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட மெசேஜை, நீண்ட நேரம் கழித்து படித்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒருவேளை நீங்கள் மெசேஜை படித்துவிட்டு unread செய்திருந்தால், மெசேஜ் அனுப்பியவருக்கு, நீங்கள் மெசேஜ் படித்துவிட்டீர்கள் என்பதைக் காட்டிவிடும். மேற்கூறிய டிரிக்ஸூகளைப் பயன்படுத்தி, மெசேஜ்களை அனுப்பியவருக்கு தெரியாமல் படித்துக் கொள்ளலாம்.

Also Read : அனுப்புற படத்தை பார்த்தா மட்டும் போதும்... வாட்ஸ் அப் புது அப்டேட்

தற்போது ஆன்டிராய்டு to iOS ஸ்மார்ட்போன்களுக்கு சாட் ஹிஸ்டிரியை முழுமையாக டிரான்ஸ்பர் செய்ய முடியாது. ஆன்டிராய்டு போனில் இருந்து ஆன்டிராய்டு போனுக்கு மட்டுமே சாட் ஹிஸ்டிரியை மாற்றிக்கொள்ள முடியும். iOS-லிருந்து iOS-க்கு மாற்றிக்கொள்ளலாம். இந்நிலையில், iOS-லிருந்து ஆன்டிராய்டுக்கும், ஆன்டிராய்டில் இருந்து iOS-க்கும் சாட் ஹிஸ்டிரியை டிரான்ஸ்பர் செய்யும் வசதியை வாட்ஸ் அப் உருவாக்கி வருகிறது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இப்போது, கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் Data Restore Tool செயலியைப் பயன்படுத்தி சாட் ஹிஸ்டிரியை டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். 1.0.382048734 என்ற பிளே ஸ்டோர் வெர்சனை பயன்படுத்துபவர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் ஹிஸ்டிரியை ஐபோனில் இருந்து ஆன்டிராய்டுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: