ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் கணினியில் வைரஸ் உள்ளதா? எளிதாக கணினியை ஸ்கேன் செய்யலாம்!

உங்கள் கணினியில் வைரஸ் உள்ளதா? எளிதாக கணினியை ஸ்கேன் செய்யலாம்!

மாதிரி படம்

மாதிரி படம்

"விண்டோஸ் பாதுகாப்பு" சென்று, அதில் "வைரஸ் & அச்சுறுத்தல் பாதுகாப்பு" என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நாம் அன்றாடம் உபயோகிக்கும் கணினியை பாதுகாப்பாக வைத்து இருக்கிறோமா? நம்மில் பெரும்பாலானோருக்கு இதற்கு பதில் இல்லை. கணினியை அடிக்கடி ஸ்கேன் செய்வது மூலம் நம் கணினியின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். ’ஒருவேளை நம் கணினி மால்வேர் போன்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்டு இருப்பின், அதன் செயல்பாட்டு திறன் மெல்ல மெல்ல குறையும்.இதனால் ஒரு கட்டத்தில் கணினியை இயங்காமல் போவதற்கு கூட வாய்ப்பு உண்டு’ என்பதால் அடிக்கடி செக் செய்ய வேண்டியது அவசியம்.

பணம் கட்டி ஆன்டிவைரஸ் மென்பொருளை வாங்கி, பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றன. ஆனால் எந்தவொரு பணமும் கட்டாமல், நீங்கள் உங்களது கணினியில் உள்ள வைரஸ்களை ஸ்கேன் செய்து பார்க்க முடியும். அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று இங்கு காண்போம்.

உங்கள் லேப்டாப் அல்லது கணினியில் ‘விண்டோஸ் செக்யூரிட்டி’(Windows Security) என்ற வசதி உள்ளது, நீங்கள் பணம் செலுத்தி பெறும் மென்பொருளை போலவே, இந்த மென்பொருளும் செயல்படும். உங்களது கணினியின் ஸ்டார்ட் மெனுவில் "விண்டோஸ் டிஃபென்டர்" என்று தேடினால் உங்களுக்கு பாப் அப் தோன்றும்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த மென்பொருளை சிறப்பானதாக செயல்பாடாது என்று குறிப்பிடுகிறார்கள். காரணம் இது பணம் செலுத்தி வாங்கும் மென்பொருளை ஒப்பீடு செய்து பார்க்கும் போது அந்த அளவுக்கு செயல்பட முடியாது என்கின்றனர்.

Also read... ஒன்பிளஸ் 9 ஆர்டி முதல் ஆப்பிள் வாட்சுகள் வரை - இந்த வார முக்கிய ‘டெக்’ சம்பவங்கள்!

இருப்பினும், இது அவாஸ்ட் மற்றும் காஸ்பர்ஸ்கை போன்ற மென்பொருள்களுடன் போட்டியிடும் வகையில் சிறப்பாக செயல்படுகிறது. 99.7 சதவிகித அச்சுறுத்தல்களை இந்த மென்பொருள் மூலம் தடுக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

உங்கள் கணினி/லேப்டாப்பின் திரையின் இடது கீழ்ப்பகுதியில் உள்ள தொடக்க மெனு தேடலில், ‘விண்டோஸ் பாதுகாப்பு’ (Windows Security) என்று டைப் செய்ய வேண்டும் அல்லது "அமைப்புகள்" (Settings), பின்னர் "தனியுரிமை மற்றும் பாதுகாப்பு" மற்றும் "விண்டோஸ் பாதுகாப்பு" என்பதற்கு செல்லலாம்.

"விண்டோஸ் பாதுகாப்பு" சென்று, அதில் "வைரஸ் & அச்சுறுத்தல் பாதுகாப்பு" என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில் Quick Scan என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். நீங்கள் விரிவாக ஸ்கேன் செய்ய விரும்பினால் Full Scan என்பதை தேர்வு செய்யுங்கள். அது அதிக நேரத்தை எடுக்கும். ஆனால் உங்களது கணினியில் ஏதேனும் தீங்கிழைக்கும் தரவு இருந்தால் அதனை இந்த மென்பொருள் உடனே நீக்கி விடும்.மேற்கண்ட எளிய முறைகளை செய்வதன் மூலம் உங்களது கணினியை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் நாம் அடிக்கடி ஸ்கேன் செய்வது மூலம் கணினியின் சிறப்பான செயல்பாட்டை பெற முடியும். விண்டோஸ் 11 ஓஎஸ் உட்பட அனைத்து வெர்சன்களிலும் இந்த அம்சம் உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Computer