வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ மூன்றாம் தரப்பு செயலிகள் ஏதுமில்லாமலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

news18
Updated: May 19, 2019, 7:32 PM IST
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி?
வாட்ஸ்ஆப்
news18
Updated: May 19, 2019, 7:32 PM IST
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை 20 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பலரும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு அவற்றை எப்படி பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி என்று தெரியாது.

இங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

1) வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சேவர் (WhatsApp Status Saver)




- உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சேவர் செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
- பின்னர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பக்கத்திற்குச் சென்று யாருடைய ஸ்டேட்டஸ் வேண்டுமோ அவர்களது எண்ணைத் தட்டவும். அவர்களது ஸ்டேட்டஸை பார்த்த பிறகு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சேவர் செயலியை திறக்கவும்.
- புகைப்படம் அல்லது வீடிடோ வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இரண்டில் எது வேண்டும் என்று தேர்வு செய்யவும்.

Loading...

- நீங்கள் முன்பு பார்த்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் அங்கு பட்டியலிடப்படும். எந்த ஸ்டேட்டஸ் வேண்டுமோ அதை தேர்வு செய்து டவுன்லோட் என்பதைத் தட்டவும். உடனே உங்களுக்குத் தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிறக்கம் செய்யப்படும்.

2) மூன்றாம் தரப்பு செயலிகள் ஏதுமில்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?


வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ மூன்றாம் தரப்பு செயலிகள் ஏதுமில்லாமலும் பதிவிறக்கம் செய்ய முடியும். அது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஃபைல் மேனேஜர் செயலியைத் திறக்கவும்.
- ஃபைல் மேனேஜரில் உட்புற சேமிப்பகத்தைத் தேர்வு செய்து, செட்டிங்ஸ் செல்க.
- செட்டிங்ஸில் 'Show Hidden Files’ என்பதை எனேபிள் செய்க.
- அடுத்து உட்புற சேமிப்பகத்தில் உள்ள வாட்ஸ்அப் ஃபோல்டரை திறக்கவும்.
- வாட்ஸ்அப் ஃபொல்டரில் உள்ள மீடியா என்ற ஃபோல்டரை திறக்கவும்.
- மீடியா ஃபோல்டரில் ‘Statuses’ என்ற ஃபோல்டர் இருக்கும். அதில் நீங்கள் இதுவரை பார்த்த அனைத்து ஸ்டேட்டஸ்களும் இருக்கும். அதை தேர்வு செய்து, காப்பி செய்து வேண்டும் இடத்தில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.

மேலும் பார்க்க:
First published: May 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...