• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ட்விட்டர் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி? - ஈஸியான டிப்ஸ்!

ட்விட்டர் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி? - ஈஸியான டிப்ஸ்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

உங்கள் ஆண்ட்ராய்டு ( Android) மொபைலில் ‘டவுன்லோட் ட்விட்டர் வீடியோ’ ( Download Twitter video ) ஆப்-பை டவுன்லோடு செய்ய வேண்டும்.

  • Share this:
சோசியல் மீடியாக்களின் வரவால், எந்த அளவுக்கு மொபைல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ அதே அளவுக்கு மொபைல் செயலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் உள்ள வீடியோக்களை பதிவிறக்கம் அதாவது டவுன்லோட், செய்வது பெரிய காரியமாக இருக்கிறது. சில செயலிகளில் வீடியோ பதிவு செய்து, அதை பின்னர் பார்க்கும் வசதி இருக்கிறது.

பெரும்பாலான செயலிகளில் இவ்வசதி இல்லை. ட்விட்டரிலும் அதே போல், வீடியோ சேமிக்கும் வசதி கிடையாது. இதில் நாம் ட்விட்டரில் உள்ள வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு மொபைல் யூசர்களுக்கு...

* உங்கள் ஆண்ட்ராய்டு ( Android) மொபைலில் ‘டவுன்லோட் ட்விட்டர் வீடியோ’ ( Download Twitter video ) ஆப்-பை டவுன்லோடு செய்ய வேண்டும்.

* ஆப்பை இன்ஸ்டால் செய்த பின், நீங்கள் விரும்பிய வீடியோ அல்லது GIF-ஐ ட்விட்டரில் சென்று தேர்ந்தெடுக்கவும். நீங்கள் வீடியோவைக் கண்டறிந்ததும், Share என்ற ஐகானைத் கிளிக் செய்து, அந்த ட்வீட்டை பகிரவும்.

* பிறகு ட்விட்டர் செயலியில், இருந்து வெளியேறவும். நீங்கள் copy செய்த லிங்கை, இந்த செயலியில் திரையின் மேற்புறத்தில் உள்ள இடத்தில் copy செய்ய வேண்டும்.

Also read... தவறுதலாக டெலிட் செய்த பைல்களை கூகுள் டிரைவில் இருந்து மீட்டெடுப்பது எப்படி?

* இப்போது உங்களது வீடியோ டவுன்லோடு செய்வதற்கான ஐகான் கீழே தோன்றும், அதனை க்ளிக் செய்து டவுன்லோடு செய்ய வேண்டும். அல்லது நீங்கள் ஒரு ட்வீட்டைப் இந்த ஆப்-பிற்கு பகிர்ந்தால், அந்த வீடியோக்கான ஐகான் வரும். வழக்கம் போல் அதனை க்ளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

* டவுன்லோடு செய்த வீடியோவை உங்கள் கேலரியில் சேமிக்கலாம் அல்லது கிளவுட் ஸ்டோரேஜில் (Cloud Storage) பதிவேற்றலாம்.

இதுவே நீங்கள் ஐபோன் யூசராக இருந்தால் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.,

ஆண்ட்ராய்டு போல அல்லாமல் இது கொஞ்சம் பெரிய செயல்முறை ஆகும்.

* உங்கள் ஐபோனில் வீடியோவைப் டவுன்லோடு செய்ய, நீங்கள் முதலில் ரீடில் அல்லது மை மீடியா ஆப்-பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

& உங்கள் ஸ்மார்ட்போனில் ட்விட்டர் செயலியை திறந்து நீங்கள் சேமிக்க விரும்பும் வீடியோ அடங்கிய ட்வீட்டுக்குச் செல்லவும். share என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். பின்னர் ட்வீட் இணைப்பை நகலெடு என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்போது, ​​உங்கள் ஐபோனில், மை மீடியா அல்லது ரீடில் செயலியைத் தொடங்கவும்.

* கீழ் வலது மூலையில் ஒரு உலாவி ஐகான் தோன்றும். அதனை தேர்வு செய்யவும். பின்னர் பிரௌசரில் www.twittervideodownloader.com என டைப் செய்து இணையதளத்தை திறக்கவும். நகலெடுக்கப்பட்ட URL இணைப்பை அங்குள்ள பெட்டியில் பேஸ்ட் செய்யவும். பிறகு டவுன்லோடு என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

* நீங்கள் ஒரு பதிவிறக்க இணைப்பைத் தட்டும்போது, ​​ஒரு மெனு தோன்றும். கோப்பைப் பதிவிறக்கு என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறகு நீங்கள் சேமித்த வீடியோவுக்கு ஒரு பெயரைக் கொடுங்கள்.

* நீங்கள் சேமித்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்றால் மீடியா என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வீடியோ உங்களது கேலரியில் சேமிப்பில் இருப்பதை காணலாம்.

மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி ட்விட்டரில் இருந்து வீடியோக்களை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: