கடந்த ஆண்டு, கூகுள் அதன் ஸ்டோரேஜ் மற்றும் டிரைவ் அம்சத்தில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தது. கூகுள் நிறுவனம் தனது கிளவுட் ஸ்டோரேஜ் சேவையான கூகுள் டிரைவில் நீக்கப்பட்ட பைல்கள் 30 நாட்கள் வரை சேமித்து வைக்கப்படும் என்றும் அதன் பிறகு அந்த நீக்கப்பட்ட பைல்கள் நிரந்தரமாகவே டிரைவில் இருந்து டெலிட் செய்யப்படும். இதன் பொருள் டெலிட் செய்யப்படும் பைல்கள் தானாகவே ட்ரைவில் இருந்து அகற்றப்படும் என்பதாகும்.
எனினும் சில நேரங்களில் நமது முக்கியமான பைல்களை தவறுதலாக டெலிட் செய்ய நேரிடும். அதனை கவனிக்காத பட்சத்தில் 30 நாட்களில் தானாகவே அழிந்துவிடும். உங்கள்
கூகுள் டிரைவிலிருந்து ஒரு முக்கியமான பைல்லை நீங்கள் நீக்கியிருந்தால் அதை எப்படி மீட்டெடுக்கலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
ஸ்மார்ட்போனில் மீட்டெடுக்க செய்ய வேண்டியது :
* உங்கள் ஸ்மார்ட்போனில் Google Drive app-ற்கு செல்லவும். மேல் இடதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால் ஒரு புதிய மெனுவை காண்பீர்கள்.
* இப்போது ‘Bin' என்பதை கிளிக் செய்தால் நீங்கள் சமீபத்தில் டெலிட் செய்த பைல்களை காண்பீர்கள். அது காலியாக இருந்தால், நீங்கள் தேடும் பைல் நிரந்தரமாக டெலிட் ஆகியிருக்கும் அல்லது 30 நாட்களுக்கு மேல் இருக்கலாம். உங்கள் இணைய இணைப்பு சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்வதும் நல்லது.
* உங்கள் ட்ராஷ் பின்னில் ஏதேனும் பைல் இருந்தால் பைலின் வலதுபுறத்தில் உள்ள மூன்று-புள்ளி மெனுவை கிளிக் செய்ய வேண்டும், இப்போது தோன்றும் திரையில் ‘Restore' என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
* இப்போது "item has been restored" என தோன்றினால் உங்கள் பைல் மீண்டும் சேமிக்கப்பட்டது என தெரிந்து கொள்ளலாம். இப்போது உங்கள் பைல் ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் சேமிக்கப்படும்.
Also read... வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!
* நீங்கள் தவறான பைலை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்றால், undo என்பதை தேர்ந்தெடுத்து அதனை ட்ராஷில் இருக்குமாறு செய்யலாம்.
கணினி/லேப்டாப்பில் மீட்டெடுக்க செய்ய வேண்டியது :
* உங்கள் டெஸ்க்டாப் கணினியில் ப்ரோவுஸரை திறந்து drive.google.com-க்கு செல்லவும். அல்லது உங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்த நேரடியாக லாகின் செய்யவும்.
* நீங்கள் லாகின் செய்தவுடன் ‘My Drive’ என்பதை திறந்து இடது பக்கத்தில் உள்ள ‘Trash’ என்பதை கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளவும்.
* இப்போது தோன்றும் திரையில் கடந்த 30 நாட்களில் நீக்கப்பட்ட பைல்களின் பட்டியலைக் காண்பீர்கள். அதில் உங்களுக்குத் தேவையான பைல்லை கண்டுபிடித்து அதை கிளிக் செய்யவும். பின்னர் திரையின் மேல் வலதுபுறத்தில் உள்ள ‘Trash for My Drive’ என்பதை கிளிக் செய்தால் இரண்டு ஐகான்கள் தோன்றும்.
* அதில் ‘Restore from Trash' என்பதை கிளிக் செய்தால் உங்கள் பைல் மீண்டும் சேமிக்கப்படும்.
* இப்போது டெலிட் செய்வதற்கு முன்னர் உங்கள் பைல் எங்கு இருந்ததோ அங்கு மீண்டும் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்கள் தேடும் பைல்லை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், 'search'கருவியை பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.