ஒரு நல்ல ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர் ஒருபோதும் மலிவான விலையில் கிடைப்பதில்லை. மேலும் அதை தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும் என்பதால், ஆன்டி-வைரஸிற்காக நாம் செய்யும் செலவு, ஒருபோதும் ஓயாது. எனவே தான் நம்மில் பலரும் எந்த வகையான ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேரையும் பயன்படுத்தவதில்லை. ஆனால் நினைவில் இருக்கட்டும், ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர் இல்லாத ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் (பிசி) அல்லது லேப்டாப் ஆனது வைரஸ்களுக்கு மிகவும் எளிதான ஒரு இலக்காகும்.
லேப்டாப் அல்லது பிசியை பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேண்டும் அதே சமயம் ஏதேனும் வைரஸ் அட்டாக் சிக்கல்கள் ஏற்பட்டால், ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேருக்காக எந்த செலவும் செய்யாமல் அதை சரி செய்யவும் வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்று கேட்டால் - ஆம், நிச்சயமாக இருக்கிறது! அதாவது உங்கள் லேப்டாப் அல்லது பிசியில் ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர் இல்லாவிட்டாலும் கூட அதில் இருந்து வைரஸை அகற்ற ஒரு வழி இருக்கிறது. அதெப்படி என்கிற எளிமையாக வழிமுறைகளை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.
முதலில் உங்கள் லேப்டாப்பில் / பிசியில் வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறிவது அவசியம்; அதெப்படி?
* அங்கீகரிக்கப்படாத ப்ரோகிராம்கள் தானாகவே லான்ச் ஆகின்றதா?
* டிவைஸின் வேகம் மிகவும் மோசமான அளவிற்கு குறைந்து விட்டதா?
* சீரற்ற பாப்-அப் மெசேஜ்கள் வந்துகொண்டே இருக்கின்றதா?
மேற்கண்ட கேள்விகளுக்கு "ஆம்" என்கிற பதில்கள் அதிகமாக இருந்தால், துரதிர்ஷ்டவசமாக உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு உள்ளதென்று அர்த்தம்.
ஒரு ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர் இல்லாமல் வைரஸை அகற்றுவது எப்படி?
வைரஸை அகற்றுவதற்கான முதல் படி, அதை கண்டறிந்து அதன் பாதிப்புகளை நிறுத்துவதே ஆகும். இதை செய்ய, Ctrl + Alt + Delete ஐ அழுத்தி, டாஸ்க் மேனஜர்-ஐ (Task Manager) திறக்கவும். பின்னர், 'ப்ராசஸ்' (Processes) என்பதற்கு சென்று, ஏதேனும் அறிமுகமில்லாத புரோகிராம்கள் அங்கே இயங்குகிறதா என்பதை சரிபார்க்கவும். அப்படி ஏதேனும் ஒன்றை கண்டறிந்தால், அது வைரஸ் தானா என்பதை உறுதிப்படுத்த, அதை ஆன்லைனில் சேர்ச் (Search) செய்யவும். அது வைரஸ் தான் என்பதை உறுதிப்படுத்தியதும், அதை 'ஹைலைட்' செய்து 'எண்ட் ப்ராசஸ்' (End Process) என்பதை கிளிக் செய்யவும். பின்னர், அதை முழுவதுமாக அகற்ற கீழ்வரும் படிகளைப் பின்பற்றவும்.
Also Read : 5ஜி அட்வான்ஸ்டு: இது 5ஜியில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 6ஜி-க்கு இதுதான் அடித்தளமா?
* விண்டோஸ் டிஃபென்டர் ஃபயர்வாலை (Windows Defender Firewall) 'ஆன்' செய்வதன் மூலம் உங்கள் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். இது வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும். கண்ட்ரோல் பேனலைத் திறந்து விண்டோஸ் டிஃபென்டர் ஃபயர்வால்-ஐ கிளிக் செய்யவும் பின்னர் அதை 'ஆன்' செய்யவும்
* வைரஸை அகற்ற, வைரஸ் & த்ரெட் ப்ரொடெக்ஷன் (Virus & Threat Protection) அம்சத்தைப் பயன்படுத்தவும். இது ஒரு இன்பில்ட் விண்டோஸ் அம்சமாகும், இது வைரஸ்களை எளிதாக அகற்ற உதவும். இதைச் செய்ய, முதலில் செட்டிங்ஸ் சென்று அப்டேட் அண்ட் செக்யூரிட்டி (Update and Security) என்பதை கிளிக் செய்யவும்.
* - இப்போது விண்டோஸ் செக்யூரிட்டி செக்ஷனில் (Windows Security) 'ஓப்பன் விண்டோஸ் டிஃபென்டர் செக்யூரிட்டி சென்டர்' (Open Windows Defender Security Center) என்பதை கிளிக் செய்யவும். அங்கிருந்து, வைரஸ் & த்ரெட் ப்ரொடெக்ஷன் செட்டிங்ஸ்-க்கு செல்லவும். அங்கு, இந்த மூன்று விருப்பங்களை நீங்கள் 'ஆன்' செய்ய வேண்டும் - அது ரியல் டைம் ப்ரொடெக்ஷன், க்ளவுட்-டெலிவர்டு ப்ரொடெக்ஷன் மற்றும் ஆட்டோட்டிக் சாம்பிள் சப்மிஷன் (Real-time protection, Cloud-delivered protection, and Automatic sample submission) ஆகியவைகள் ஆகும்.
* அது முடிந்ததும், வைரஸ் & த்ரெட் ப்ரொடெக்ஷன் மெனுவில் உள்ள 'த்ரெ ட்ஹிஸ்டரி' க்கு செல்லவும். உங்கள் லேப்டாப் அல்லது பிசியை ஸ்கேன் செய்ய 'ஸ்கேன் நௌவ்' (Scan Now) என்பதை கிளிக் செய்யவும்.
* இதை செய்ய, விண்டோஸ் டிஃபென்டர் அனைத்து வைரஸ்களையும் சுத்தம் செய்யும், வேலை முடிந்தவுடன் உங்கள் டிவைஸை 'ரீஸ்டார்ட்' (Restart) செய்து எந்த கவலையும் இல்லாமல் பயன்படுத்தவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.