ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் போன் தொலைந்து விட்டால் Paytm மற்றும் Google Pay அக்கவுண்ட்டை பாதுகாப்பது எப்படி?

உங்கள் போன் தொலைந்து விட்டால் Paytm மற்றும் Google Pay அக்கவுண்ட்டை பாதுகாப்பது எப்படி?

உங்கள் Google Pay மற்றும் Paytm உள்ளிட்ட டிஜிட்டல் பேமெண்ட் அக்கவுண்ட்களை எப்படி ரிமூவ் அல்லது ப்ளாக் (block) செய்வது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மொபைல் ஃபோன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறைகள் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், திடீரென்று மொபைல் தொலைந்து விட்டால் கலக்கம் ஏற்படும் சூழல் தான் நம் அனைவருக்குமே இருக்கிறது. Google Pay, Paytm போன்ற பல பேமெண்ட் ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்திருப்போம்.

என்னதான் உங்கள் Google Pay அல்லது Paytm அக்கவுண்ட்டை லாக் செய்ய பாஸ்வேர்ட் அல்லது ஸ்கிரீன் லாக் செட் செய்திருந்தாலும், மொபைல் தொலைந்து விட்டால் உடனே அவற்றை யாரும் பயன்படுத்த முடியாத வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருவேளை துரதிருஷ்டவசமாக உங்கள் ஆண்ட்ராய்ட் ஃபோனை தொலைத்துவிட்டீர்களா..? பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் Google Pay மற்றும் Paytm உள்ளிட்ட டிஜிட்டல் பேமெண்ட் அக்கவுண்ட்களை எப்படி ரிமூவ் அல்லது ப்ளாக் (block) செய்வது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.,

உங்கள் Paytm அக்கவுண்ட்டை எப்படி log out செய்வது?

Paytm பயன்படுத்துவோர் எல்லா டிவைஸ்களிலிருந்தும் log out ஆகலாம் என்றாலும், அதற்கு தங்கள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்ட் மற்றும் ரிஜிஸ்டர்ட் மொபைல் நம்பரை நினைவில் வைத்திருக்க வேண்டும். வேறு ஏதேனும் டிவைஸில் முதலில் Paytm app-ஐ இன்ஸ்டால் செய்து log in செய்ய வேண்டும். ஸ்கிரினின் மேல் இடதுபுறத்தில் இருக்கும் ஹாம்பர்கர் மெனுவை டேப் செய்து Profile settings-ஐ க்ளிக் செய்ய வேண்டும். பின் “Security and Privacy"-க்கு சென்று Manage Accounts on All Devices என்ற ஆப்ஷனுக்குள் நுழைய வேண்டும். இப்போது ஸ்கிரீனில் if you are sure about logging out from all the devices என்ற மெசேஜ் தெரியும். உங்கள் விருப்பத்திற்கேற்ப ஆம் அல்லது இல்லை என்பதை அழுத்தலாம்.

இந்த வழி இல்லை என்றால் Paytm-ன் ஹெல்ப்லைன் நம்பர் “01204456456”-க்கு டயல் செய்து அதில் lost phone என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இதன் பின் வேறு எண்ணை உள்ளிடுவதற்கான ஆப்ஷனை தேர்வுசெய்து, உங்கள் தொலைந்த தொலைபேசி எண்ணை உள்ளிடவும். இதன் மூலம் நீங்கள் எல்லா டிவைஸ்களிலிருந்தும் log out ஆகலாம். இது தவிர உங்கள் Paytm அக்கவுண்ட்டை தற்காலிகமாக ப்ளாக் செய்யலாம். அது எப்படி என்பதை கீழே பாப்போம்..

Paytm அக்கவுண்ட்டை தற்காலிகமாக ப்ளாக் செய்வது எப்படி?

எல்லா டிவைஸ்களிலிருந்தும் logging out-ஆன பிறகு யூஸர்கள் Paytm வெப்சைட்டிற்கு சென்று '24×7 help'-ஐ தேர்வு செய்யலாம். பின் "Report a Fraud" என்பதைத் தேர்வு செய்து அதிலிருக்கும் விரும்பிய கேட்டகிரியை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது Message Us பட்டனை கிளிக் செய்து, அக்கவுண்ட் ஓனர்ஷிப்பிற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின் Paytm டபுள் செக் செய்து உங்கள் அக்கவுண்ட்டை ப்ளாக் செய்யும்.

தொலைந்து போன மொபைலில் இருக்கும் Google Pay-ஐ ரிமூவ் அல்லது ப்ளாக் செய்ய வேண்டுமா?

இதற்காக மற்றொரு டிவைஸிலிருந்து உங்கள் எல்லா டேட்டாவையும் நீக்குவதற்கான ஆப்ஷனை வழங்குகிறது கூகுள். உங்கள் மொபைல் தொலைந்து விட்டால் ஃபோன் டேட்டாவை தொலைவிலிருந்து கண்டுபிடிக்க, லாக் செய்ய அல்லது அழிக்க, “android.com/find” என்பதற்கு சென்று உங்கள் Google அக்கவுண்டில் sign செய்யவும். உள்நுழைந்ததும் Erase data-வை தேர்வு செய்யலாம். இது தவிர ஒரு யூஸர் கஸ்டமர் கேர் உதவியையும் நாடலாம்.

Google Pay யூஸர்கள் 18004190157 என்ற எண்ணை டயல் செய்து "other issues" ஆப்ஷனுக்கு செல்லலாம். பின் இப்போது ஒருவர் தனது Google Pay அக்கவுண்ட்டை ப்ளாக் செய்ய உதவும் நிபுணரிடம் பேசுவதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இதற்கு முன் யூஸர்கள் ரிஜிஸ்டர்ட் கூகுள் அக்கவுண்டின் மொபைல் நம்பரை சரிபார்க்கும்படி கேட்கப்படுவார்கள்.

First published:

Tags: Google pay, Paytm