Home /News /technology /

வாட்ஸ் அப் வாய்ஸ் கால் பேசும்போது மொபைல் டேட்டா பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எப்படி?

வாட்ஸ் அப் வாய்ஸ் கால் பேசும்போது மொபைல் டேட்டா பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எப்படி?

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

WhatsApp voice calls : ஆண்ட்ராய்ட் ஆப்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், வாட்ஸ் அப் வாய்ஸ் கால்களை நீங்கள் ஒரு நிமிடம் பயன்படுத்தினால் 720 கேபி டேட்டா செலவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜிங் ஆப்களில் வாட்ஸ் அப்-பும் ஒன்று. வாட்ஸ் அப்-ஐ பெரும்பாலான மக்கள் மெசேஜ் அனுப்புவதற்காகத் தான் பயன்படுத்துகின்றனர் என்றாலும், இன்னும் சிலர் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் பேசுவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வாட்ஸ் அப்-பில் மிக எளிமையாக குரூப் கால் கனெக்ட் செய்ய முடியும் என்பதாலும், வாட்ஸ் அப்-பில் வரும் அழைப்புகளை ஏற்பது மிக எளிதானது என்பதாலும், இதை பயன்படுத்துகின்றனர். ஆனால், நீங்கள் மெசேஜ் அனுப்புவதைக் காட்டிலும் மிக அதிகமான டேட்டாவை வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வாட்ஸ் அப் எடுத்துக் கொள்ளும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்ட்ராய்ட் ஆப்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், வாட்ஸ் அப் வாய்ஸ் கால்களை நீங்கள் ஒரு நிமிடம் பயன்படுத்தினால் 720 கேபி டேட்டா செலவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல என தோன்றினாலும், மிக அதிகமான நேரத்திற்கு நீங்கள் வாய்ஸ் கால் பேச நேரிடும் போது, அன்றாடம் உங்களுக்கு வழங்கப்படும் டேட்டா லிமிட்டில் பெரும்பகுதி டேட்டா இதற்கு செலவாகி விடும்.

ALSO READ |  டெலிகிராமின் முக்கிய அம்சத்தை காப்பி அடிக்கப்போகும் வாட்ஸ் அப்
 இதுபோன்ற சமயங்களில், வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, மொபைல் டேட்டா பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வசதியை வாட்ஸ் அப் உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் ஆண்டிராய்ட் ஸ்மார்ட் ஃபோன்களில் இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.



  • உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் வாட்ஸ் அப் செயலியை ஓப்பன் செய்யுங்கள்.

  • ஸ்கிரீனுடைய வலது மேற்பக்க மூலையில் உள்ள 3 புள்ளிகள் மீது கிளிக் செய்யவும்.

  • அதில் உள்ள மெனுவில் செட்டிங்க்ஸ் மீது டேப் செய்யவும்.

  • ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா என்ற தேர்வின் மீது கிளிக் செய்யவும்.

  • இப்போது யூஸ் லெஸ் டேட்டா ஃபார் கால்ஸ் என்று டாகிள் செய்யவும்.


  • ALSO READ |  வாட்ஸ் அப்-பில் ஃபேக் நியூஸ் செக் செய்வது எப்படி - வந்தாச்சு புது வசதி
     

    ஆப்பிள் ஐஃபோன்களில் வாட்ஸ் அப் வாய்ஸ் கால் டேட்டா குறைப்பது எப்படி

    • உங்கள் ஐஃபோனில் வாட்ஸ் அப் ஓப்பன் செய்யவும்.

    • பாட்டம் ரைட் கார்னரில் உள்ள செட்டிங்ஸ் ஆப்சனை தேர்வு செய்யவும்.

    • இங்குள்ள மெனுவில், ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா என்பதை தேர்வு செய்யவும்.

    • இந்த நெட்வொர்க் செக்‌ஷன் கீழே, யூஸ் லெஸ் டேட்டா ஃபார் கால்ஸ் என்பதை டாகிள் செய்யவும்.


    • ஆடியோ கால்களில் டேட்டா கட்டுப்பாடு செய்ய வாய்ப்புகள் இருந்தாலும், வீடியோ கால்களில் இதை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை. 5ஜி டேட்டா கனெக்‌ஷன் வந்த பிறகு, இந்த வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று கருதப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: WhatsApp, Whatsapp Update

அடுத்த செய்தி