• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வாட்ஸ் அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசெஜ், போட்டோக்ளை பார்ப்பது எப்படி?

வாட்ஸ் அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசெஜ், போட்டோக்ளை பார்ப்பது எப்படி?

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீண்டும் மீட்டெடுக்க யூசர்களை அனுமதிக்கும் Notisave என்ற செயலி Google Play ஸ்டோரில் கிடைக்கிறது

  • Share this:
சில மாதங்களுக்கு முன்பு டெலிட் மெசேஜ் என்ற ஆப்ஷனை வாட்ஸ்அப் நிறுவனம் அதன் யூசர்களுக்கு அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த அம்சம் வெளியானதில் இருந்து வாட்ஸ்அப் யூசர்களுக்கு மிகவும் வசதியானதாகவும் அதிகம் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. நாம் அனுப்பும் சில வாட்ஸ்அப் செய்திகளை டெலிட் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கும். சிலர் தவறுதலாக செய்திகளை பிறருக்கு அனுப்பியிருக்கலாம்.

இல்லையெனில், வேறு ஏதேனும் காரணத்தினால் செய்திகளை டெலிட் செய்து விடுவர். சில நேரங்களில், அந்த நீக்கப்பட்ட செய்திகளை அனைத்தையும் படிக்க நமக்கு ஆர்வம் ஏற்படும். எனவே, டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க விரும்புவோம். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ வழி ஒன்று இப்போது உள்ளது. ஆனால் Google Play ஸ்டோரில் மட்டுமே அதற்கான செயலிகள் உள்ளன. அவை டெலிட் செய்யப்பட்ட செய்திகளை மீட்டெடுக்கவும் அவற்றை மீண்டும் படிக்கவும் அனுமதிக்கின்றன.

Also Read : உஷார்...! உங்கள் மொபைலில் இந்த 5 செயலிகள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்

டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீண்டும் மீட்டெடுக்க யூசர்களை அனுமதிக்கும் Notisave என்ற செயலி Google Play ஸ்டோரில் கிடைக்கிறது. சுவாரஸ்யமாக இந்த செயலி வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க மட்டும் உதவாது. வாட்ஸ்அப்பில் டெலிட் ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் GIF களை மீட்டெடுக்கவும் உதவுகிறது. Notisave செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இதன் மூலம் டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளைப் மீண்டும் எவ்வாறு படிக்க முடியும் என்பதை பற்றியும் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு நீங்கள் செய்யக்கூடிய 5 முக்கிய வழிமுறைகள்:

* முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள Google Play ஸ்டோருக்கு செல்லுங்கள். அதில் Notisave என்ற செயலியை சர்ச் செய்து டவுன்லோட் செய்யவேண்டும். இந்த செயலி, iOS யூசர்களுக்கு கிடைக்காது.

* உங்கள் வாட்ஸ்அப் செயலி எந்த மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதோ அந்த ஸ்மார்ட்போனில் Notisave செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

* தேவையான விவரங்களுடன் செயலியில் உள்நுழைந்து, வாட்ஸ்அப் ஐகானைக் காட்டும் Notisave செயலியின் முகப்புத் திரைக்குச் செல்லவும்.

* அதில் வாட்ஸ்அப் ஐகானைத் தேர்ந்தெடுத்து, டெலிட் செய்யப்பட்ட அனைத்து செய்திகளையும் நீங்கள் காணலாம்.

* மேலும் ஒரு குறிப்பிட்ட காண்டாக்ட்டை மட்டும் காண Notisave செயலி அனுமதிக்கிறது. அதற்கு பில்டர் காண்டாக்ட் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

Also Read : நிர்வாண புகைப்படங்கள் கசிந்ததால் மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்கிய ஆப்பிள் நிறுவனம்

முக்கியமான விஷயம் என்னவென்றால் Notisave செயலி விளம்பரங்களுடன் வருகிறது மற்றும் இது பாதுகாப்பான பயன்பாடு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் செயலியை பயன்படுத்த விரும்பினால், அதன் அபாயங்களை அறிந்து கொண்டு உங்கள் சொந்த முயற்சியில் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற மூன்றாம் தரப்பு செயலிகளில் சில நேரங்களில் தீம்பொருள் உள்ளது, எனவே பயன்பாட்டிற்குள் காட்டப்படும் சீரற்ற இணைப்புகளில் செல்வதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: