ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் மொபைலை சேதமடையாமல் பாதுகாக்க உதவும் 5 டிப்ஸ்கள்..!

உங்கள் மொபைலை சேதமடையாமல் பாதுகாக்க உதவும் 5 டிப்ஸ்கள்..!

ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட் போன்

உங்கள் ஃபோனை சேதமடையாமல் பாதுகாக்க உதவும் சில டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்ஸ்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஹை-ஸ்பீட் ப்ராசஸர், குவாலிட்டியான கேமரா சென்ஸார்கள், நீண்ட பேட்டரி ஆயுள், ஸ்மார்ட் லுக் ஆகியவற்றை கொண்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட் ஃபோன்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து தான் ஒவ்வொரு முறையும் நாம் வாங்குகிறோம். குறைந்த அல்லது அதிக விலையில் தரமான ஃபோன்களை வாங்கி ஒரு சில மாதங்கள் தான் அதை நாம் கவனமாக கையாளுவோம்.

சில மாதங்கள் சென்ற பின் அதை மிக சாதாரணமாக கையாளும் பழக்கத்தால் டிவைஸிற்கு பல சேதங்கள் ஏற்படுகிறது. இந்த அலட்சிய போக்கு ஆசையாய் வாங்கிய டிவைஸை பயன்படுத்தும் அனுபவத்தை மோசமானதாக ஆக்கி விடுகிறது. ஸ்கிரீனில் ஏற்படும் சிறு விரிசல் அல்லது கீறல் கூட ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்தில் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது. உங்கள் ஃபோனை சேதமடையாமல் பாதுகாக்க உதவும் சில டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்ஸ்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

ஸ்கிரீன் கார்ட் (Screen guard) அவசியம்..

ஸ்மார்ட் ஃபோனின் ஸ்கிரீனானது சேதத்தின் அடிப்படையில் டிவைஸின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியாகும். கீறல்கள் அல்லது உடைப்புகளில் இருந்து எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டியவை மொபைல் ஸ்கிரீன். டிவைஸின் மிக முக்கியமான பகுதியான இது சிறிய கவனக்குறைவால் கடுமையாக சேதமடைய கூடியது. எனவே ஆபத்து மற்றும் சேதத்தில் இருந்து மொபைல் ஸ்கிரீனை பாதுகாக்க நல்ல தரமான 'ஸ்கிரீன் கார்டு' அல்லது 'டெம்பர்டு கிளாஸ்' கண்டிப்பாக பயன்படுத்துவது அவசியம். இது ஸ்கிரீனுக்கு சேதத்திலிருந்து பாதுகாப்பை வழங்க கூடுதல் அடுக்காக வேலை செய்யும்.

ALSO READ |  ஒரே ஸ்மார்ட்போனில் இரு whatsapp செயலியை பயன்படுத்த முடியுமா?

ஃபோன் கவர்:

ஃபோன் கவர் இல்லாமல் மொபைலை பயன்படுத்துவது ஒரு நல்லஅனுபவமாக தான் இருக்கும். ஆனால் ஃபோன் கவர்கள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன. நம் கைகளில் இருந்து அடிக்கடி நழுவி விழும் வாய்ப்பு இருப்பதால் மொபைல் முற்றிலும் சேதமடைய கூடும். அதுவே உங்கள் ஃபோனுக்கு ஃபோன் கவர் போட்டிருந்தீர்கள் என்றால் பெரும்பாலும் ஃபோன் சேதமடையாமல் தப்பிக்கும்.

பிரத்யேக பாக்கெட்

பெரும்பாலும் பேண்ட் அல்லது சட்டை பாக்கெட்டுகளில் நாணயங்கள் அல்லது பிற கடினமான பொருட்கள் போன்றவற்றுடன் சேர்த்தே மொபைலையும் வைத்திருக்கும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. இதனால் மொபைலின் மேற்புறம் அல்லது ஸ்கிரீனில் தேவையற்ற ஸ்க்ராச்சஸ் ஏற்படும். எனவே இதை தவிர்க்க ஸ்மார்ட் ஃபோனை வைக்கும் பாக்கெட்டில் வேறு பொருட்கள் ஏதும் இல்லாமல் காலியாக இருப்பதாய் உறுதி செய்து கொண்டு பிறகு அந்த பாக்கெட்டை பயன்படுத்துங்கள்.

ALSO READ |  நீங்கள் விரும்பும் ரிங்டோனை ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோடு செய்வது எப்படி?

உறுதியான பிடி..

எந்த நேரத்திலும் உங்கள் ஸ்மார்ட் ஃபோனை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். மிகவும் லூஸாக கைகளில் இருந்து எளிதில் நழுவி விழும்படி பயன்படுத்தினால் அது நிச்சயம் கடும் சேதத்தை சந்திக்கும். எனவே எப்போது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினாலும் நனறாக உறுதியாக பிடித்தபடி பயன்படுத்துங்கள். இதற்கென்று பிரத்யேகமாக கிடைக்கும் ஃபோன் பேக் ஹோல்டர்கள் (phone back holders) அதிக பாதுகாப்பை உறுதி செய்வதோடு, டிவைஸை ஈசியாக கையாள உதவுகின்றன.

உங்கள் கவனம்..

உங்கள் ஸ்மார்ட் ஃபோனுக்கு எப்போதும் உங்கள் கவனம் தேவை. பயன்படுத்துவதன் அடிப்படையில் அல்ல, பாதுகாப்பாக வைத்திருப்பதன் அடிப்படையில் உங்களது கவனம் மொபைலின் மீது இருந்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் அதை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் அல்லது டேபிளின் நுனியில் உங்கள் மொபைலை வைப்பதை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Mobile phone, Smart Phone