உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அதிகமாக சூடாவதைத் தவிர்க்க சில டிப்ஸ்!

பலரும் இரவு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். இது முற்றிலும் தவறு. இதனால் ஃபோன் சூடாவது மட்டுமன்றி பேட்டரியின் ஆயுட் காலமும் நீடிக்காது.

news18
Updated: April 6, 2019, 7:46 PM IST
உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அதிகமாக சூடாவதைத் தவிர்க்க சில டிப்ஸ்!
செல்ஃபோன் சூடாகிறதா ?
news18
Updated: April 6, 2019, 7:46 PM IST
ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பலரது குற்றச்சாட்டு அதிகமாக சூடாகிறது என்பதுதான். குறிப்பாக வெயில் நாட்களில் இன்னும் அதிகமாக செல்ஃபோன்கள் சூடாகும்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு பொதுக்காரணங்களை நிறுவனங்கள் பட்டியலிடுகின்றன. அதில் சார்ஜ் ஏற்றும்போதும், கேம் விளையாடும்போதும், அதிகமான வீடியோஸ் பார்க்கும்போதும் செல்ஃபோன் சூடாகும் என்கிறது.

இதைத் தவிர்க்கவே பல செல்ஃபோன் நிறுவனங்கள் பேட்டரியின் திறனை 4000mAh மேல் உயர்த்தி வெளியிடுகின்றன. சில சமயங்களில் அதன் ஹார்ட்வேர் பிரச்னைகளாலும் பேட்டரி சூடாகும்.


இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க சில யோசனைகள் இருக்கின்றன. அவற்றை சரியான முறையில் பின்பற்றி பேட்டரி சூடாவதைத் தவிர்க்கலாம்.சூரிய வெப்பத்தில் நேரடியாக வைக்காதீர்கள்

Loading...

ஸ்மார்ட் ஃபோன்களை அதிக நேரம் சூரிய ஒளியில் வைப்பதைத் தவிருங்கள். இதனால் ஃபோன் எளிதில் வெப்பமடையும். அதேசமயம் உங்கள் செல்ஃபோனின் டச் ஸ்கிரீனும் சரியாக வேலை செய்யாமல் போகும். முடிந்தவரை உங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.சோஃபா, கட்டில் மேல் ஜார்ஜ் ஏற்றுவதைத் தவிறுங்கள்

செல்ஃபோன் சார்ஜ் ஏறும்போது வெப்பத்தை வெளியேற்றும். வெளியேறும் வெப்பமானது காற்றில் கலக்க ஏதுவாக கடினமான பொருட்கள் மீது வையுங்கள். கட்டில், சோஃபா போன்ற குஷன் பொருட்கள் மீது வைத்து சார்ஜ் ஏற்றினால் வெப்பம் வெளியேறாது. மாறாக வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

செல்ஃபோன் பேக் கேஸ்ஸை அகற்றுங்கள்

பேக் கேஸ்ஸும் செல்ஃபோன் சூடாவதற்கு ஒரு காரணம். இதனால் செல்ஃபோன் சார்ஜ் செய்யும் போது பேக் கேஸை எடுத்துவிடுங்கள். கடினமான பேக் கேஸுகள் பயன்படுத்துவதை தவிறுங்கள்.

செல்ஃபோன் சூடானாலும் வெப்பம் வெளியேற கடினமான பேக் கேஸுகள் தடையாக இருக்கும். ஃபோன் அதிகமாக சூடாகியிருந்தாலும் உடனே பேக் கேஸை நீக்கிவிட்டு வெப்பத்தை வெளியேறச் செய்யுங்கள்.செல்ஃபோனை இரவு முழுவதும் சார்ஜ் போடாதீர்கள்

பலரும் இரவு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். இது முற்றிலும் தவறு. இதனால் ஃபோன் சூடாவது மட்டுமன்றி  பேட்டரியின் ஆயுட் காலமும் நீடிக்காது.

தேவையற்ற ஆப்ஸை நீக்குங்கள்

சில ஆப்ஸ் பயன்படுத்தாவிட்டாலும் இயங்கிக் கொண்டிருக்கும். அதுபோன்ற ஆப்ஸை அன்இன்ஸ்டால் செய்துவிடுங்கள். அது கட்டாயமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில் செல்ஃபோன் இண்டர்நெட்டை அனைத்துவிடுங்கள். தேவையான போது ஆன் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அவை செல்ஃபோன் சூட்டை ஏற்படுத்தி அதிகரிக்கச் செய்யும்.மற்ற சார்ஜர்களைப் பயன்படுத்தாதீர்கள்

முடிந்தால் மற்ற நிறுவனங்களின் சார்ஜர், கம்மி விலைக்குக் கிடைக்கும் சார்ஜர்களைப் பயன்படுத்துவதைத் தவிறுங்கள். அவை பேட்டரியை அதிகமாக சூடாக்கும். பேட்டரியை பாழாக்கவும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் நிறுவன சார்ஜர் , கம்பெனி சார்ஜர்களைப் பயன்படுத்துங்கள்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...