முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / Airtel, Vodafone-ல் இருந்து ஜியோ நெட்வொர்க்குக்கு மாறுவது எப்படி?

Airtel, Vodafone-ல் இருந்து ஜியோ நெட்வொர்க்குக்கு மாறுவது எப்படி?

கட்டண விவரம்

கட்டண விவரம்

Jio | கடந்த காலங்களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏற்கனவே இருந்த நெட்வொர்க்கில் இருந்து ஜியோவுக்கு மாறியுள்ளனர். 

  • Last Updated :

நாட்டில் பல டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்கள் உண்டு என்றாலும், வாடிக்கையாளர்களிடம் அதிக நம்பிக்கையை பெற்றதாகவும், அதிக மக்களால் விரும்பப்படுவதாகவும் ரிலையன்ஸ் ஜியோ இருக்கிறது. அதன் நெட்வொர்க் கனெக்‌ஷன் என்பது வலுவானதாகவும், வேகமானதாகவும் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பல கோடி வாடிக்கையாளர்களை ஜியோ ஈர்த்துள்ளது.

கடந்த காலங்களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏற்கனவே இருந்த நெட்வொர்க்கில் இருந்து ஜியோவுக்கு மாறியுள்ளனர்.

அதேசமயம், இன்னும் பலர் தற்போது வரையிலும், பழைய நெட்வொர்க்கில் இருந்து ஜியோவுக்கு மாறுவது எப்படி என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். ஆகவே, இந்தச் செய்தியில், உங்கள் நம்பரை மாற்றிக் கொள்ளாமலேயே ஜியோ நெட்வொர்க்கிற்கு நீங்கள் மாறிக் கொள்வது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நெட்வொர்க் மாறுவது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்பாக சில விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் ஒரு போஸ்ட்பெய்டு பயனாளர் என்றால், நிலுவையில் உள்ள அனைத்து பில்களையும் நீங்கள் செலுத்தியிருக்க வேண்டும். அரசு ஒழுங்குமுறை விதிகளின்படி, ஒரே டெலிகாம் சர்க்கிளுக்குள் நீங்கள் நம்பரை மாற்றுகிறீர்கள் என்றால் அது 3 தினங்களில் நடந்து விடும்.

ALSO READ |   இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட PF Account திறந்துள்ளீர்களா - நீங்கள் பணத்தை இழக்க வேண்டியிருக்கும்

 இப்போது நீங்கள் இருக்கும் டெலிகாம் சர்க்கிளுக்கு வெளியே உங்கள் நம்பரை மாற்றுகிறீர்கள் என்றால், அதற்கு 5 நாட்கள் தேவைப்படும். நீங்கள் ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர் என்றால், மொபைல் நம்பரை மாற்றுவதற்கான உங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்கு 15 வேலை நாட்கள் வரை ஆகும். ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்கிற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் உங்கள் நம்பருக்கான சேவைகள் எதுவும் பாதிக்கப்படாது. புதிய நெட்வொர்க்கிற்கு மாறும் வரையிலும், பழைய நெட்வொர்க்கில் இருந்து ஃபோன் கால் செய்வது, வரும் அழைப்புகளை ஏற்பது, நெட் பயன்படுத்துவது போன்ற சேவைகளை பெற முடியும்.

உங்கள் நம்பரை ஜியோவுக்கு மாற்றுவது எப்படி?

நீங்கள் எந்த நம்பரை ஜியோவுக்கு மாற்ற வேண்டும் என நினைக்கிறீர்களோ, அந்த நம்பரில் இருந்து 1900 என்ற எண்ணுக்கு PORT என மெசேஜ் அனுப்ப வேண்டும்.

  • இப்போது உங்களுக்கு ஒரு யுபிசி கோடு மற்றும் காலவதி தேதி ஆகியவை வரும்.
  • இந்த யுபிசி கோடு எடுத்துக் கொண்டு, அருகாமையில் உள்ள ஜியோ ஸ்டோர் அல்லது ஜியோ ரிடைலரிடம் செல்லவும்.
  • எம்என்பி கோரிக்கையை முன்வைக்கும்போது, ஆதார் அட்டை அல்லது முகவரி சான்று ஆகியவற்றைக் கொண்டு செல்லவும்.
  • இது மட்டுமல்லாமல், தொடர்புடைய நெட்வொர்கின் சேவை பணியாளரை தொடர்பு கொண்டு, உங்கள் வீட்டுக்கு வரச் சொல்லி, தேவையான ஆவணங்களை நீங்கள் கொடுத்து அனுப்பலாம்.
  • குறிப்பிட்ட கால வரையறைக்குள் உங்கள் நம்பர் புதிய நெட்வொர்க்கிற்கு மாறி விடும்.

First published:

Tags: Airtel, Jio, Vodafone