• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • நொடிப்பொழுதில் மின் கட்டணம் செலுத்த வேண்டுமா? BHIM, Paytm மற்றும் PhonePe யூஸ் பண்ணுவது எப்படி?

நொடிப்பொழுதில் மின் கட்டணம் செலுத்த வேண்டுமா? BHIM, Paytm மற்றும் PhonePe யூஸ் பண்ணுவது எப்படி?

TNEB Bill online

TNEB Bill online

BHIM, Paytm மற்றும் PhonePe வழியாக மின் கட்டண பில்களை செலுத்துவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

  • Share this:
பல்வேறு செயலிகள் இப்போது பயன்பாட்டுக்கு வந்திருப்பதால், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. இதனால் டி,டி. எச் கட்டணம் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் மற்றும் சிலிண்டர்கள் வரை எளிதாக புக் செய்துவிடலாம். அதேபோல், உங்களின் மின் கட்டணம் குறித்த விவரங்களை நீங்கள், இந்த செயலிகளில் பதிவு செய்திருந்தால் நொடிப்பொழுதில் மின்கட்டணத்தையும் செலுத்திவிட முடியும். ஆனால், பில்களை செலுத்துவதில் ஆப்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் மாறும் என்பதால், BHIM, Paytm மற்றும் PhonePe வழியாக மின் கட்டண பில்களை செலுத்துவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

BHIM செயலி :

BHIM செயலியை முதலில் நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ளுங்கள். பின்னர், அதில் இருக்கும் Pay Bills என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அப்போது, மின் கட்டணம் முதல் ரீச்சார்ஜ் வரை என பல்வேறு ஆப்சன்கள் திரையில் தோன்றும். அதில், நீங்கள் எலக்டிரிக் பில் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து, அதில் காட்டப்படும் தொகைக்கு ஓகே கொடுக்க வேண்டும். பின்னர் UPI லிங்கை உள்ளீடு செய்யும்போது, நொடிப்பொழுதில் உங்கள் பில் கட்டணம் செலுத்தப்பட்டுவிடும்.

Also read:  ஃபிளிப்கார்ட் தீபாவளி சலுகை: ஆஃபரில் ரூ.15,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

Paytm செயலி :

Paytm செயலியை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், முதலில் செயலிக்குள் செல்லுங்கள். செயலியின் முகப்பு பக்கத்தில் இருக்கும் ரீச்சார்ஜ் மற்றும் பில் பேமெண்ட்ஸ் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், இரண்டாவதாக மின்சாரக் கட்டணம் என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, கட்டணம் செலுத்துவபவரின் விவரத்தை உள்ளீடு செய்ய வேண்டும். கடைசியாக, Continue என்ற ஆப்சனை கிளிக் செய்து, பில்லை செலுத்துங்கள்.

PhonePe செயலி :

PhonePe செயலியிலும், BHIM மற்றும் Paytm போன்று எளிதாக மின் கட்டணத்தை செலுத்தலாம். போன்பே செயலிக்குள் சென்று ரீச்சார்ஜ் மற்றும் கட்டணங்கள் என்ற விருப்பதை தேர்ந்தெடுங்கள். மூன்றாவது ஆப்சனாக வரும் எலக்டிரிக் பில் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அடுத்து, பில் செலுத்துபவரின் விவரத்தை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த விவரங்களை பதிவு செய்தவுடன் கட்டண விவரம் திரையில் தெரியும். கடைசியாக UPI பின்னை கொடுத்து கட்டணத்தை செலுத்தலாம்.

Also read:   பெட்டில் படுத்துக்கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்தால் ரூ.25 லட்சம் சம்பளம்!

கூகுள் பே (Google Pay) போன்ற மற்ற UPI பயன்பாடுகள் மூலம் செயலிகளில் மின் கட்டணத்தை இதே முறையில் செலுத்திவிடலாம். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதை விட, செயலிகள் வழியாக கட்டணம் செலுத்துவது மிக மிக எளிதான வழி. அதேநேரத்தில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: