நாட்டில் உள்ள மாபெரும் டெலிகாம் நிறுவனங்கள் அன்லிமிடெட் டேட்டா திட்டங்களை வழங்கி வருகின்றன. அதே சமயம், ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற பல நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் தினசரி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பல்வேறு டேட்டா திட்டங்களை வழங்கி வருகின்றன. போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
எனினும், தினசரி டேட்டா பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு உண்டு. அந்த எல்லையை தாண்டி டேட்டா பயன்படுத்தும்போது வேகம் குறைந்து விடுகிறது. குறைவான வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்துவது மிகவும் வெறுப்புக்குரிய விஷயம் ஆகும். ஆகவே, இன்டர்நெட் டேட்டா பயன்பாட்டை முறையாக கண்காணித்து, தேவையற்ற பயன்பாடுகளை தவிர்ப்பதன் மூலமாக டேட்டாவை சேமிக்கலாம்.
ஆண்டிராய்டு ஃபோன்களில் டேட்டா லிமிட் செட் செய்வது எப்படி?
ஃபோனில் செட்டிங்க்ஸ் சென்று நெட்வொர்க் / சிம் / இன்டர்நெட் செல்லவும். இதன் சப்-மெனு கீழ் டேட்டா அல்லது டேட்டா சேவர் தேர்வு செய்யுங்கள்.
இன்டர்நெட் என்பதன் கீழ் செர்வீஸ் புரொவைடர் பெயருக்கு அருகாமையில் உள்ள செட்டிங்க்ஸ் தேர்வு செய்யவும்.
ஸ்குரோல் டவுன் செய்து டேட்டா வார்னிங் & லிமிட் தேர்வு செய்யவும்.
மொபைல் டேட்டா யூசேஜ் சைக்கிள் மீது டேப் செய்யவும். இதில் டேட்டா சைக்கிளுக்கான டூரேசன் (பயன்பாடு அளவு) தேர்வு செய்யுங்கள்.
செட் டேட்டா லிமிட் என்பதை டேப் செய்து டேட்டா லிமிட் கொடுக்கவும்.
ஆண்டிராய்டு ஃபோன்களில் டேட்டா சேவர் மோடு பயன்படுத்துவது எப்படி?
உங்கள் ஆண்டிராய்டு ஃபோனில் உள்ள ஆப்களில் ஃபேக்கிரவுண்டில் டேட்டா செண்டிங் அல்லது ரிசீவிங் சேவையை கட்டுப்படுத்த வேண்டும். எந்தெந்த ஆப்களில் இதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் மேனுவலாக தேர்வு செய்து கொள்ளலாம். டேட்டா சேவர் ஆன் செய்யப்பட்டிருக்கும் சமயத்திலும் நீங்கள் அன்-ரெஸ்டிரிக்டெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Also Read : 5ஜி அட்வான்ஸ்டு: இது 5ஜியில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 6ஜி-க்கு இதுதான் அடித்தளமா?
செட்டிங்க்ஸ் சென்று நெட்வொர்க் / சிம் / இன்டர்நெட் என்பதை தேர்வு செய்யவும்.
டேட்டா சேவர் என்பதை தேர்வு செய்து, அதை டாகிள் செய்யவும்.
டூயல் சானல் நெட்வொர்க் ஆக்சிலரேஷன் டர்ன் ஆஃப் செய்வது எப்படி
ஒன் பிளஸ் போன்ற சில ஃபோன்களில் டூயல் சானல் நெட்வொர்க் ஆக்சிலரேஷன் வசதி இருக்கிறது. இதன் மூலமாக நீங்கள் வை-பை மற்றும் மொபைல் டேட்டா ஆகிய இரண்டையும் பயன்படுத்தி டவுன்லோடுகளின் வேகத்தை அதிகரிக்க முடியும். இதில், மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைப்பதன் மூலமாக சிறிதளவு டேட்டாவை சேமிக்க முடியும்.
டேட்டா ஹங்கிரி ஆப்களை மாற்றவும்
சில ஆப்கள் லோடு செய்வதற்கு அதிக டேட்டா எடுத்துக் கொள்ளும். ஆனால், ஃபேஸ்புக் லைட் அல்லது இன்ஸ்டாகிராம் லைட் போன்ற ஆப்கள் குறைவான டேட்டாவில் இயங்கும். இதுபோல குறைவான டேட்டா பயன்பாடு ஆப்களில் அடிப்படையான சேவைகள் அனைத்தும் கிடைக்கும். ஆனால், அட்வான்ஸ்டு சேவைகள் கிடைக்காது. அதே சமயம், இந்த லைட் ஆப்களை பயன்படுத்தி டேட்டாவை சேமிக்க முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mobile Data, Smart Phone