முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / Jio Fiber மூலம் ஸ்மார்ட் டிவி-யில் உங்கள் மொபைலை பயன்படுத்தி வீடியோ கால் செய்வது எப்படி?

Jio Fiber மூலம் ஸ்மார்ட் டிவி-யில் உங்கள் மொபைலை பயன்படுத்தி வீடியோ கால் செய்வது எப்படி?

jio

jio

புதிய அம்சமானது ஜியோ ஃபைபர் வாய்ஸ் யூஸர்களுக்கு தடையற்ற ஹெச்டி வீடியோ கால்ஸ் மற்றும் கான்ஃப்ரன்ஸ் கால்ஸ்களுக்கு அவர்களின் ஸ்மார்ட் டிவி ஸ்கிரீனை பயன்படுத்த வைப்பதன் மூலம் யூஸர்கள் ஒரு தனி அனுபவத்தைப் பெற உதவுகிறது.

நாட்டின் சிறந்த டெலிகாம் பிராண்ட்டாக இருந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ, சமீபத்தில் தனது ஜியோ ஃபைபர் யூஸர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஜியோ ஃபைபர் யூஸர்கள் எக்ஸ்டெர்னல் கேமரா அல்லது வெப்கேம் பயன்படுத்தாமல் தாங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் டிவி-க்கள் மூலமே பெரிய ஸ்கிரீனில் வீடியோ கால்களை பேச முடியும். இந்த புதிய அம்சத்தை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களில் ஜியோ ஜாயின் ஆப் (JioJoin app) பயன்படுத்துவதன் மூலம் ஜியோ ஃபைபர் யூஸர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் சென்று அதிலிருந்து JioJoin app-ஐ ஜியோ ஃபைபர் யூஸர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். குறைந்தபட்சம் ஆண்ட்ராய்டு 6.0 அல்லது iOS 10.0-ல் இயங்கும் டிவைஸ்களில் JioJoin app இயங்குகிறது. மேலும் ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய அம்சமானது ஜியோ ஃபைபர் வாய்ஸ் யூஸர்களுக்கு தடையற்ற ஹெச்டி வீடியோ கால்ஸ் மற்றும் கான்ஃப்ரன்ஸ் கால்ஸ்களுக்கு அவர்களின் ஸ்மார்ட் டிவி ஸ்கிரீனை பயன்படுத்த வைப்பதன் மூலம் யூஸர்கள் ஒரு தனி அனுபவத்தைப் பெற உதவுகிறது.

Also Read:  ஆப்கன் அரசுப் படைகளை விட தலிபான்கள் எந்த வகையில் பலம் வாய்ந்தவர்கள்?

கேமரா ஆன் மொபைல் (camera on mobile) என்று இந்த புதிய அம்சம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனிடையே தங்களது புதிய அம்சம் பற்றி  தெரிவித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், கேமரா ஆன் மொபைல் அம்சம் கடந்த சில மாதங்களாக சோதனை நிலையில் இருந்தது.

jio

எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைத்ததால் தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் யூஸர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ள கேமரா ஆன் மொபைல் அம்சமானது பயனர்கள் ஜியோ ஃபைபர் யூஸர்கள் தங்களது ஸ்மார்ட் ஃபோன் தொலைபேசி கேமராவையே, வீடியோ கால்ஸ்களுக்கான இன்புட் டிவைஸாக மாற்ற அனுமதிக்கிறது.

Also read: அரசு உயர் அதிகாரி துன்புறுத்தியதாக கூறி முகத்தில் மண்ணை எறிந்த ஜூனியர் பெண் அதிகாரி.. வைரல் வீடியோ..

இந்த அம்சம் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையுடன் இணைக்கப்பட்ட, ஜியோஃபைபர்வாய்ஸ் மூலம் வீடியோ கால் அழைப்பை செயல்படுத்துகிறது. ஜியோ ஃபைபர் யூஸர்கள் தங்கள் ஸ்மார்ட் ஃபோன் கேமரா மூலம் தங்களது ஸ்மார்ட் டிவி-யில் வீடியோ கால்ஸ்களை செய்யும் வழிமுறைகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கி உள்ளது. முதலில் யூஸர்கள் தங்களது 10 டிஜிட் ஜியோ ஃபைபர் எண்ணை, JioJoin app-ல் கான்ஃபிகர் செய்து கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஸ்டெப் ஜியோ ஃபைபர் இணைப்பிற்கான சப்போர்ட்டிங் டிவைஸாக ஸ்மார்ட் ஃபோன் இருக்க யூஸர்களை அனுமதிக்கும். இதன் மூலம் பெரிய திரை டிவி காலிங் வசதியை யூஸர்கள் அனுபவிக்க முடியும். யூஸர்கள் இந்த கான்ஃபிகர் ஸ்டெப்பை முடித்தவுடன், அவர்கள் JioJoin app-ன் செட்டிங்க்ஸிற்கு சென்று கேமரா ஆன் மொபைல் வசதியை எனேபிள் செய்யலாம். 2.4GHz பேண்டில் இந்த அம்சத்தை செயல்படுத்த முடியும் என்றாலும், சிறந்த வீடியோ கால்ஸ் அனுபவம் மற்றும் எதிர்பார்க்கும் கிளாரிட்டியை பெற தங்கள் மோடம்களை 5GHz Wi-Fi பேண்டிற்கு மாற்றி கொள்ளுமாறு தனது யூஸர்களுக்கு ஜியோ பரிந்துரைத்துள்ளது.

First published:

Tags: Jio Fiber, News On Instagram, Reliance, Video calls