ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்...!

உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்...!

 ஆக்டோ தீம்பொருள் ஒவ்வொரு நொடியும் புதுப்பிக்கப்படும் லைவ் ஸ்கிரீன் ஸ்ட்ரீமிங் மாட்யூல்

ஆக்டோ தீம்பொருள் ஒவ்வொரு நொடியும் புதுப்பிக்கப்படும் லைவ் ஸ்கிரீன் ஸ்ட்ரீமிங் மாட்யூல்

ஆண்ட்ராய்டு போன் செயல்பாடு மெதுவாக இருப்பதற்கு மற்றொரு காரணம் போன் முழுக்க ஆப்ஸ்கள் இருப்பது தான். இதுவும் மெமரியை பாதிக்கும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உங்கள் ஆண்ட்ராய்டு போன் ஸ்லோவாக இருக்கிறதா? ஸ்மார்ட்ஃபோன் ஸ்லோவாக இருப்பதற்கும், அடிக்கடி ஹேங் ஆவதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஸ்மார்ட்போன் வாங்கி சில வருடங்கள் ஆன பிறகு, அல்லது அதிகமாக பயன்படுத்தும் காரணத்தால் இயல்பாகவே போனின் செயல்பாடு குறையத்துவங்கும். ஆனால், ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருக்கும் பொழுது உடனடியாக புது போன் வாங்க வேண்டும் என்று பலரும் விரும்ப மாட்டார்கள். உங்கள் ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிப்பதற்கான டிப்ஸ் இங்கே.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் மெமரி :

உங்கள் ஆண்ட்ராய்டு போனின் வேகம் குறைவதற்கு முதல் காரணம், போதிய மெமரி அல்லது ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இல்லாதது தான். போனின் ஸ்டோரேஜ் முழுக்க முழுக்க புகைப்படங்கள், வீடியோக்கள் என்று நிரப்பி வைத்தால், போனின் வேகமும், செயல்பாடும் குறையத்துவங்கும். எனவே, உங்கள் மொபைலில் தேவையில்லாத மீடியா கோப்புகளை, ஆப்ஸ்களை, டவுன்லோடு செய்திருக்கும் தரவு உள்ளிட்டவற்றை நீக்கி போனின் மெமரி அல்லது ஸ்டோரேஜ் ஸ்பேசை அதிகரிக்கவும்.

Files ஆப்பில் உங்கள் மொபைலின் எல்லா வகையான கோப்புகளையும் காணலாம். அதில் தேவையில்லாதவற்றை நீக்கலாம். உங்களுக்கு தேவையான புகைப்படங்களை, வீடியோக்களை எல்லாம் நீங்கள் கிளவுட் டிரைவ்களில் சேமித்து வைக்கலாம்.

தேவையில்லாத அல்லது பயன்படுத்தாத செயலிகள் :

ஆண்ட்ராய்டு போன் செயல்பாடு மெதுவாக இருப்பதற்கு மற்றொரு காரணம் போன் முழுக்க ஆப்ஸ்கள் இருப்பது தான். இதுவும் மெமரியை பாதிக்கும். நீங்கள் போனில் உள்ள ஆப்ஸ்களை பயன்படுத்தவில்லை என்றாலும், போனின் பேக்கிரவுண்டில் அது இயங்கிக் கொண்டே இருக்கும். எனவே, உங்களுக்கு தேவையான செயலிகளை இயக்கும் போது, வீடியோ பார்க்கும் போது ஸ்மார்ட்போனின் வேகம் குறையும்.

மொபைல் போனின் ஹோம்ஸ்க்ரீன் :

நீங்கள் ஒவ்வொரு முறை போனை அன்லாக் செய்யும் போதும், உங்கள் மொபைலின் ஹோம்ஸ்க்ரீன் தான் தெரியும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகள் தவிர்த்து, மற்ற செயலிகளை ஹோம் ஸ்க்ரீனில் வைக்க வேண்டாம். அவசரமாக ஏதேனும் செயலியை பயன்படுத்த வேண்டும் என்னும் போது, முகப்புத்திரையில் எக்கச்சக்க செயலிகள் இருந்தால் உடனடியாக செயல்பட முடியாது.

Also read... புத்தாண்டை தனது க்யூட்டான டூடுலுடன் கொண்டாடும் கூகுள்...!

ஆண்ட்ராய்டு போனின் settings-ல் கொஞ்சம் மாறுதல் செய்யலாம் :

தற்போது ஆண்ட்ராய்டு போனில் ஆற்றலை மற்றும் வேகத்தை அதிகப்படுத்த பல்வேறு அப்டேட்கள் வந்துள்ளன. உதாரணமாக டார்க் மோடு ஆப்ஷனை செயல்படுத்துவதன் மூலமாக, உங்கள் போனின் சார்ஜ் விரைவில் தீர்ந்து போகாது.

Also read... 2021 ஆம் ஆண்டில் மக்களுக்கு கைகொடுத்த டாப் 10 ஆப்ஸ்!

சரியான சார்ஜரை பயன்படுத்தவும் மற்றும் போனை சுத்தம் செய்யவும் :

மொபைல் போன் வாங்கிய புதிதில், அதற்குரிய சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பு, போனில் சின்ன கீறல் கூட விழக்கூடாது என்று மிகவும் பத்திரமாக பாதுகாப்பது என்று போனை மிக மிக ஜாக்கிரதையாக கையாளுவோம். ஆனால், நாளாக நாளாக, அவ்வளவாக அக்கறை செலுத்த மாட்டோம். டிஸ்ப்ளே ஸ்க்ரீனை சுத்தம் செய்வது அல்லது மாற்றுவது, ஸ்மார்ட்போன் கவர் மாற்றுவது, என்று போனை சுத்தமாக வைக்கவும். டூப்ளிகேட் சார்ஜர் பயன்படுத்துவது கூட போனின் வேகத்தைக் குறைக்கும். எனவே, ஒரிஜினல் சார்ஜரைப் பயன்படுத்துங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Android