பேடிஎம், கூகுள் பே மற்றும் இதர ஆப்-களின் வருகை காரணமாக ஒருவருக்கு பணம் செலுத்துவது, மற்றவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்வது போன்ற வங்கிப் பரிமாற்ற நடவடிக்கைகள் மிகவும் எளிமையாகியுள்ளன. பேடிஎம் தளத்தில் பணப் பரிமாற்றத்திற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. உடனடியாக பணம் சென்று சேர்ந்து விடுகிறது.
நீங்கள் பேடிஎம் ஆப் மூலமாக உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் குறித்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக பேடிஎம் ஆப்-பில் உங்களுடைய பல வங்கி அக்கவுண்ட்களை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக, அனைத்து அக்கவுண்ட்களின் பேலன்ஸ் தொகையையும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
இப்போது, பேடிஎம் தளத்தில் உங்கள் வங்கி பேலன்ஸ் தொகையை சரிபார்ப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம். உங்கள் பேடிஎம் ஆப்-பில் உள்ள செட்டிங்ஸ் மெனு மூலமாக உங்களது அக்கவுண்ட் பேலன்ஸ் தெரிந்து கொள்ள முடியும் அல்லது பாஸ்புக் பிரிவுக்கு செல்வதன் மூலமாகவும் நீங்கள் பேலன்ஸ் தெரிந்து கொள்ள இயலும். அக்கவுண்ட் பாதுகாப்பு கருதி உங்கள் யுபிஐ பின் நம்பரை நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
பேடிஎம் பாஸ்புக் வாயிலாக பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி
Also Read : Google chrome, Mozilla பயனர்களுக்கு ஆபத்து... மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை!
பேடிஎம் செட்டிங்ஸ் மூலமாக பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Paytm, Technology