Home /News /technology /

உங்கள் IPhone-ல் வாட்ஸ் அப் சாட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

உங்கள் IPhone-ல் வாட்ஸ் அப் சாட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

Whatsapp | நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவுகள் அல்லது அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் என பல தரப்பு மக்களிடமும் வாட்ஸ் அப் மூலமாக நாம் உரையாடி வருகிறோம்.

நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவுகள் அல்லது அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் என பல தரப்பு மக்களிடமும் வாட்ஸ் அப் மூலமாக நாம் உரையாடி வருகிறோம். தனிப்பட்ட தகவல்கள், மிக முக்கியமான தகவல்கள் இத்தகைய சாட்களில் கண்டிப்பாக இருக்கும். உளவு பார்க்க நினைக்கும் கண்களிடம் இருந்து இதை நீங்கள் நிச்சயமாக காப்பாற்றியாக வேண்டும்.

வாட்ஸ் அப் ஆப்-ஐ நிர்வகித்து வரும் மெடா நிறுவனம், யூஸர்களின் தனியுரிமை பாதுகாப்பு கருதி எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன், எண்டு- டூ- எணு என்கிரிப்ஷன், சாட்களை அர்சிவ் செய்யும் வசதி மற்றும் 7 நாட்களில் மெசேஜ்களை தானாக மறையச் செய்யும் டிஸ்-அப்பியரிங் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் அமலில் உள்ளன.

ஆனால், இதையெல்லாம் தாண்டி, உங்கள் சாட் விவரங்களை பார்த்து விட துடிக்கும் மனங்கள் இருக்கத் தான் செய்யும். அதற்காக தான் பிரதான பாதுகாப்பு வழிமுறை ஒன்றை ஐஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் வழங்குகிறது. அது என்ன பாதுகாப்பு, எப்படிச் செயல்படுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

வாட்ஸ் அப் லாக்:

உங்கள் ஸ்மார்ட்ஃபோனை உங்களுக்குத் தெரியாமல் யாரேனும் எடுத்துப் பயன்படுத்தினாலும் கூட, அவர்கள் வாட்ஸ் அப்-ஐ ஓப்பன் செய்வதைத் தடுக்க வாட்ஸ் அப் லாக் பயன்படுகிறது. பொதுவாக உங்கள் வாட்ஸ் அப்-ஐ நீங்கள் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் அல்லது ஃபேசியல் ரெக்கனைசேஷன் மூலமாக பாதுகாத்துக் கொள்ளலாம்.

also read : இனி மெசேஜ்களை எல்லாருக்கும் ஃபார்வர்ட் செய்ய முடியாது – WhatsApp-ன் புதிய அப்டேட்.!

நீங்கள் ஆண்டிராய்டு ஃபோன் பயன்படுத்துபவராக இருந்தாலும் அல்லது ஆப்பிள் ஐஃபோன் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் வாட்ஸ் அப்-பிற்கான மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சமாக இதுவாகத் தான் இருக்கும். அதே சமயம், வாட்ஸ் அப் லாக் செயல்பாட்டில் இருந்தாலும் கூட, நீங்கள் அனுமதி கொடுத்தால், லாக் நிலையில் இருக்கும்போதே வாட்ஸ் அப் கால்களுக்கு பதில் அளிக்கவும், நோட்டிஃபிகேஷன் ஸ்கிரீனில் இருந்து மெசேஜ்களுக்கு பதில் அளிக்கவும் முடியும்.

வாட்ஸ் அப் லாக் எனேபிள் செய்வது எப்படி :

உங்கள் ஃபோனில் வாட்ஸ் அப் லாக் எனேபிள் செய்வதற்கு முன்பு, முதலில் உங்கள் வாட்ஸ் அப்-பில் உள்ள செட்டிங்ஸ் செல்லவும்.

அங்கு அக்கவுண்ட் என்பதன் மீது டேப் செய்து, பிரைவேஸி மீது கிளிக் செய்யவும்.

இப்போது ‘ஸ்கிரீன் லாக்’ செட்டிங்க்ஸ் பார்க்கவும்.

இப்போது டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி என இரண்டு ஆப்சன்களை பயன்படுத்தி உங்கள் வாட்ஸ் அப் லாக் எனேபிள் செய்யலாம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்.

டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி கேட்கப்படுவதற்கு முன்பு, எவ்வளவு நேரம் உங்கள் வாட்ஸ் அப் ஸ்டாண்ட் பை-யில் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுங்கள்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Apple iphone, WhatsApp

அடுத்த செய்தி