முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / உங்க whatsapp நம்பரில் ChatGPT-யை இணைத்து செயல்படுத்துவது எப்படி?

உங்க whatsapp நம்பரில் ChatGPT-யை இணைத்து செயல்படுத்துவது எப்படி?

ChatGPT-யை உங்க வாட்ஸ்அப் கணக்கில் எப்படி இணைப்பது என தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil |

இன்று உலக அளவில் பேசு பொருளாகி இருப்பது சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு பற்றிய விஷயம் தான். கிட்டத்தட்ட இந்த நுண்ணறிவுடன் நாம் பேசும்போது, ஒரு உயிருள்ள மனிதனிடம் பேசுவது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும், அளவிற்கு நாம் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பதில்களை அளித்து செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. சமீபத்தில் கிடைத்த தகவல்களின்படி இந்த செயற்கை நுண்ணறிவு பல தேர்வுகளில் கூட தேர்ச்சி பெற்று இருப்பதாக கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவை நீங்கள் உங்களது வாட்ஸ்அப் உடன் இணைத்து செயல்படுத்த முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் பலவித விஷயங்களை மிக எளிதாக செய்து முடிக்க முடியும். வாட்ஸ்அப் செயலியுடன் சாட் ஜிபிடியை எவ்வாறு இணைப்பது என்பதை பற்றி போது பார்ப்போம்.

சாட்ஜிபிடி-யை வாட்ஸ்அப்புடன் எவ்வாறு ஒருங்கிணைப்பது?

உண்மையில் சாட் ஜிபிடி-யுடன் வாட்ஸ்அப்பை ஒருங்கிணைக்க நேரடியான வழி எதுவும் இப்போதைக்கு கிடையாது. ஆனால் வேறு சில வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் இதனை செய்து முடிக்க முடியும். ஆனால், இதனை செய்வதற்கு உங்களுக்கு கணினி பற்றிய சில விஷயங்கள் தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்  முக்கியமாக வாட்ஸ் அப் சேட் பாட் (chat bot) என்பதை நீங்கள் இதற்கு முன் அறிந்திருக்கவில்லை எனில் இதை நீங்கள் செய்யாமல் இருப்பது நல்லது.

* முதலில் வாட்ஸ்அப் பாட்டை நீங்கள் கிரியேட் செய்ய வேண்டும். அதற்கு வாட்ஸ்அப் பிசினஸ் ஏபிஐ-இல் பதிவு செய்ய வேண்டும்.

* இதன் பிறகு உங்களுக்கு வாட்ஸ்அப் சாட் பாட்டை உருவாக்குவதற்கான கருவிகளை பயன்படுத்த ஆக்சஸ் அளிக்கப்படும்.

* அதன் பிறகு அந்த கருவிகளை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய வகையில் குறிப்பிட்ட வசதிகளை உள்ளடக்கிய ஃப்ளோ சார்ட்டை உருவாக்க வேண்டும்.

* வாட்ஸ்அப் பாட்டை வெற்றிகரமாக சோதனை செய்த பிறகு அதனை நீங்க உங்களது போனிருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்.

* இப்போது ஓபன் ஏஐ ஏபிஐ(OpenAi API)-ல் உங்களுக்கான கணக்கு ஒன்றை உருவாக்க வேண்டும். பிறகு ஏபிஐ கீ பேஜ் என்ற பக்கத்திற்கு சென்று உங்களுக்கான ரகசியபாஸ்வேர்டை உருவாக்க வேண்டும்.

* இதன்பின் உங்களால் ஓபன் ஏஐ ஆக்சஸ் செய்ய முடியும்.

* இப்போது வாட்ஸ்அப் பிசினஸ் ஏபிஐ-க்கு சென்று அதனுடைய சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் கிட் அல்லது எபிஐ கிளைன்ட்லைப்ரரி என்பது தேர்வு செய்ய வேண்டும்.

* இந்தப் பகுதியில் இரண்டையும் ஒருங்கிணைப்பதற்கான தேர்வு ஒன்று இருக்கும்.

* இப்போது இரண்டையும் ஒருங்கிணைத்து உங்களது சாட் பாட் சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதனை செய்து கொள்ளவும்.

* ஒரு வேலையில் ஏதாவது பிரச்சனை இருக்கும் பட்சத்தில் நீங்கள் மீண்டும் ஒரு புதிய சாட் பாட்டை உருவாக்கிய பிறகு மீண்டும் ஒருமுறை இதனை செய்து பார்க்கலாம்.

First published:

Tags: Technology