நியூஸ் 18 தமிழ் செய்திகளை ஸ்மார்ட்ஃபோன் ஆப் வடிவில் பெறுவது எப்படி...?

நியூஸ் 18 செயலியை ஸ்மார்ட்ஃபோனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர் சென்று பதிவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் செய்திகளைப் பெற முடியும்.

நியூஸ் 18 தமிழ் செய்திகளை ஸ்மார்ட்ஃபோன் ஆப் வடிவில் பெறுவது எப்படி...?
நியூஸ்18
  • News18
  • Last Updated: March 24, 2019, 7:26 PM IST
  • Share this:
இந்தியாவின் மிகப்பெரிய செய்திக் குழுமமான நெட்வொர்க் 18 சார்பில் news18.com என்ற இணையதள செய்தி ஊடகம் இயங்கி வருகிறது news18.com என்ற முன்னணி இணையதளத்தின் தமிழ் வடிவமாக www.tamil.news18.com உள்ளது.

இந்த இணையதள செய்தி ஊடகம், நேயர்களையும் செய்தியாளர்களாக, செய்தி உருவாக்கத்தில் பங்கேற்கச் செய்வதோடு, நிகழ்வுகளை உண்மையாகவும், விரைந்தும் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேயர்கள் அனுப்பும் செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு பயன்படுத்தப்படும். இதன் மூலம் எங்கள் ஊடகத்தோடு மட்டுமல்லாமல், செய்தி ஆசிரியர்களுடனும், செய்தியாளர்களுடனும் மக்களை தொடர்புப்படுத்துகிறது நியூஸ்18 தமிழ்.


நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும், 24 மணி நேரமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் இதற்கான செய்திகளை வழங்குகிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் நெட்வொர்க்18 செய்தி நிறுவனங்கள் பல மிகப்பெரிய சம்பவங்களை வெளிக்கொண்டு வந்துள்ளன.

ஓக்கி புயல், மும்பை தீவிரவாதத் தாக்குதல், அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஒபாமா வருகை, இந்தியாவில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்கள், சர்வதேச கருத்தரங்குகள், குடியரசுத் தலைவர் தேர்தல், 2009 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2008-ம் ஆண்டில் பொருளாதார வீழ்ச்சி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர்கள், சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்ற எண்ணிலடங்கா நிகழ்வுகளை நேர்த்தியாகக் கையாண்டு மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது, நெட்வொர்க்18.வாட்ஸ் அப்பில் செய்திகளை பெறுங்கள்... மிக எளிதாக...!

சி.என்.என் மூலமாகச் சர்வதேச செய்திகளையும், நெட்வொர்க்18 மூலமாக இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் நடக்கும் நிகழ்வுகளையும் நியூஸ்18 தமிழ் வலுவாகவும், மிகத்தரமாகவும் மக்களிடம் எடுத்துச் செல்லும்.

இதற்கென்று உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் டெல்லியில் நெட்வொர்க்18 தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20 மையங்களில் உள்ள அனுபவம் வாய்ந்த செய்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் நெட்வொர்க்18-க்கே உரித்தான செய்தி சேகரிப்பு திறனுடன் தரமாக வழங்குகின்றனர்.

அதோடு உங்கள் நம்பிக்கையைப் பெற்ற நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் தமிழகத்தின் அரசியல், சமூக களநிலவரங்களை உடனுக்குடன் நியூஸ்18 தமிழ் இணையதளத்தின் வாயிலாகவும் பதிவு செய்கிறார்கள். இவ்வாய்ப்புகள் மூலமாகச் சர்வதேச செய்திகளையும், தேசிய அளவிலான செய்திகளையும், தமிழக செய்திகளையும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்குகிறது, நியூஸ்18 தமிழ்.

இப்படிப்பட்ட நியூஸ்18 தமிழ் செய்திகளை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் https://play.google.com/store/apps/details?id=com.divum.ibn என்ற இணைப்பிற்குச் செல்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

நியூஸ் 18 செயலியை ஸ்மார்ட்ஃபோனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர் சென்று பதிவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் செய்திகளைப் பெற முடியும்.

செயலியை நிறுவும் போது தங்களுக்குத் தேவையான மொழியையும் தேர்வு செய்து, தமிழ் உள்பட பிராந்திய மொழிகளிலும் செய்தியைப் பெற்று படித்து அறியலாம்.

மேலும் பார்க்க:
First published: March 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading