முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / Gmail-லில் வரும் போலி மின்னஞ்சல்களை அடையாளம் காண்பது எப்படி?

Gmail-லில் வரும் போலி மின்னஞ்சல்களை அடையாளம் காண்பது எப்படி?

போலி மின்னஞ்சல் "ஹலோ" என்ற வார்த்தையுடன் தொடங்கும் என்பதால், அனுப்புநர் தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்த மாட்டார் என்பதை நீங்கள் கவனிக்கலாம். இதுவே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.

போலி மின்னஞ்சல் "ஹலோ" என்ற வார்த்தையுடன் தொடங்கும் என்பதால், அனுப்புநர் தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்த மாட்டார் என்பதை நீங்கள் கவனிக்கலாம். இதுவே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.

போலி மின்னஞ்சல் "ஹலோ" என்ற வார்த்தையுடன் தொடங்கும் என்பதால், அனுப்புநர் தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்த மாட்டார் என்பதை நீங்கள் கவனிக்கலாம். இதுவே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.

  • Last Updated :

சமீப காலமாக சைபர் கிரிமினல்கள் ஃபிஷிங் தாக்குதல்கள் மூலம் பணத்தை திருட மக்களுக்கு ஜிமெயிலில் பல மோசடி மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர். எனவே, இந்த பதிவில் போலி மின்னஞ்சலை எவ்வாறு கண்டறிவது என்பதை விரிவாக காணலாம்.

ஃபிஷிங் தாக்குதல்கள் அல்லது தூண்டில் தாக்குதல்கள் மூலம் அனைத்து வகையான மின்னஞ்சல் மோசடிகள் பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உங்கள் பணத்தைச் சேமிப்பதற்கான ஒரே வழி, சைபர் தாக்குதல்களுக்குப் பலியாவதைத் தவிர்க்கும் அதே வேளையில் அதனை பற்றி புகார் கொடுக்கும் செயலிலும் ஈடுபட வேண்டும்.

இருப்பினும், இதுபோன்ற மோசடிகளை கண்டுபிடிப்பது ஒன்றும் எளிதான விஷயமல்ல. இந்த சைபர் குற்றவாளிகள் ஜிமெயில் மற்றும் பிற மின்னஞ்சல் சேவைகளை கொண்ட மக்களை கவரும் புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டுபிடித்து, பின்னர் அவர்களிடம் இருந்து பணத்தைப் பறிப்பதற்காக அவர்களை ஏமாற்றுகிறார்கள்.

மேலும் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சர்வதேச நிகழ்வுகளால், இணையத்தில் யூசர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தங்க நகைகள் போன்ற பல ஆடம்பரமான பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் கூட தற்போது ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படுகின்றன. சமீபத்திய கருப்பு வெள்ளி விற்பனை சீசன் கூட இணைய பயன்பாட்டை மற்றொரு உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Also read:  டெஸ்லா, மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் வித்தியாசமான 7 புராடக்டுகள்!

இணைய மோசடி செய்பவர்கள் ஃபிஷிங் செய்திகள் மூலம் பணம் சம்பாதிக்க தற்போதைய காலகட்டம் மிகவும் ஏதுவானதாக பார்க்கப்படுகிறது. அது எப்படி என்றால் சமீபகாலமாக இணையத்தில் விலைமதிப்புமிக்க பொருட்களை ஆர்டர் செய்வோருக்கு பார்சல்களை வழங்குவதாக உறுதியளிக்கும் நன்கு அறியப்பட்ட கூரியர் நிறுவனங்களிடமிருந்து தவறான மின்னஞ்சல் செய்திகள் வருவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் கூட மின்னஞ்சல் பாதுகாப்பு தீர்வு வழங்குநரான Avanan கூறியிருப்பதாவது, நவம்பர் 2021 முதல், புதிய தகவல் சேகரிப்பு தாக்குதலைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. அதில் சைபர் அட்டாக் நடத்துபவர்கள் DHL அல்லது அதுபோன்ற நம்பகமான டெலிவரி பிராண்டுகளின் பேரில் இன்னும் டெலிவரி செய்யப்படாத பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டு, அவர்களின் லிங்கை கிளிக் செய்ய வைக்கிறார்கள். இதன் மூலம் யூசர்களின் பணம் பறிக்கப்படுவதற்கான வழிகளையும் ஹாக்கர்கள் வழிவகுத்து வைத்துள்ளனர்.

சரி, போலி அஞ்சல் எப்படி இருக்கும் ?

உதாரணத்திற்கு,DHL இலிருந்து "ஒரு பார்சல் விநியோகிக்கப்படவில்லை" எனக் கூறி மின்னஞ்சல் தொடங்குகிறது. பேக்கேஜ் சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில் வந்து சேருவதை உறுதிசெய்ய, முகவரி மற்றும் பிற தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு யூசர்களை அந்த மின்னஞ்சல் மேலும் வலியுறுத்துகிறது. ஆனால் உண்மையாகவே அப்படி ஒரு பார்சல் உங்களை வந்துசேர போவதில்லை.

Also read:   2-வது உற்பத்தி ஆலையையும் ஓசூரில் அமைக்க உள்ள ஏதெர் நிறுவனம்.. உற்பத்தியை 3 மடங்கு அதிகரிக்கிறது..

இந்த மின்னஞ்சல் தாக்குதலில், மோசடி செய்பவர்கள் பிராண்ட் ஆள்மாறாட்டத்தின் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். அதாவது மோசடிக்காரர்கள் DHL போன்ற நம்பகமான பிராண்டுகளின் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், DHL உலகம் முழுவதும் விநியோகம் செய்கிறது.

அதனால், இதுபோன்ற பிராண்டுகளை பயன்படுத்தி ஏமாற்று வித்தையை மேலும் நம்பக்கூடியதாக மோசடி செய்பவர்கள் மாற்றுகின்றனர். அதேபோல அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வைக்க, ஹேக்கர்கள் கிளாசிக் சமூக பொறியியல் உத்தியை பயன்படுத்துகின்றனர். இறுதிப் பயனர்கள் அதாவது சாமானிய மக்கள் தங்கள் தயாரிப்பு சரியான நேரத்தில் வழங்கப்படாதோ என்று பீதியடைந்து, அந்த மின்னஞ்சல் பற்றி மறுபரிசீலனை செய்யாமல் தங்கள் தகவலை கொடுத்துவிடுகின்றனர்.

போலி அஞ்சலை எவ்வாறு கண்டறிவது?

ஒவ்வொரு ஃபிஷிங் மின்னஞ்சல் அல்லது செய்தியிலும் தவறுகளை கண்டுபிடிக்கும் விதத்தில் ஒரு துப்பு இருக்கும். அதாவது, இதுபோன்ற மின்னஞ்சல் "ஹலோ" என்ற வார்த்தையுடன் தொடங்கும் என்பதால், அனுப்புநர் தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்த மாட்டார் என்பதை நீங்கள் கவனிக்கலாம். இதுவே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஏனெனில் இந்த செய்தி தனிப்பட்ட முறையில் உங்களுக்காக வந்தது அல்ல.

Also read: ஸ்மார்ட் ஃபோன் பேட்டரி வேகமாக காலியாகும் பிரச்சனையை சரிசெய்ய உதவும் டிப்ஸ்.!

ஆனால் பலருக்கும் அனுப்பப்பட்டது என்பதைக் குறிக்கிறது. கூடுதலாக, DHL தொகுப்பை வழங்கும் பிராந்தியத்தின் குறிப்பிட்ட குறிப்பை நீங்கள் காண முடியாது. எனவே பண்டிகைக் காலத்தில் டெலிவரி அல்லது இ-ரீடெய்ல் இணையதளங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்களை உன்னிப்பாக கவனிக்கவும். டெலிவரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீங்கள் முன்பு கிளிக் செய்த மற்ற URLகளைப் போல் இது தோன்றினால், அடுத்த வழிமுறைக்கு செல்லவும்.

top videos

    மேலும், உங்கள் தயாரிப்புக்கான தொகுப்பு எண் குறிப்பிடப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். இது பேக்கேஜின் டெலிவரி பற்றிய உண்மையான தகவலைக் காண்பிக்கும். எப்போதும் விழிப்புடன் இருங்கள் மற்றும் இணையக் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க மோசடி மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளில் கவனம் செலுத்துங்கள்.

    First published:

    Tags: Cyber attack