Home /News /technology /

உங்கள் iPhone-ல் இருந்து பிறருக்கு அனுப்பும் மெசேஜ்களை மறைப்பது எப்படி?

உங்கள் iPhone-ல் இருந்து பிறருக்கு அனுப்பும் மெசேஜ்களை மறைப்பது எப்படி?

iPhone

iPhone

இந்த டிஜிட்டல் யுகத்தில் எப்போது வேண்டுமானாலும் உங்கள் டேட்டா லீக் ஆகி விடுமோ என்ற பயம் உள்ளதா.

தற்போதைய காலத்தில் தனியுரிமை அதாவது ப்ரைவசி மிகவும் அவசியமான ஒன்றாக மாறி வருகிறது. ஏனென்றால் ஒருவருடைய தனிப்பட்ட தகவலை ஆதாயங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே நம்முடைய தனிப்பட்ட தகவல் என்பது அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்து வருகிறது. தனிப்பட்ட தகவல் (Personal information) என்பதில் நீங்கள் யாருக்கும் வெளிப்படுத்த விரும்பாத மெசேஜ்களும் அடங்கும். யூஸர்கள் தங்கள் ப்ரைவசி மற்றும் தனிப்பட்ட மெசேஜ்களை பாதுகாப்பாக வைத்திருக்க ஃபோன் உற்பத்தியாளர்கள் பல்வேறு முறைகளை வழங்குகிறார்கள்.

நீங்கள் ஐபோன் யூஸரா.? குறிப்பாக இந்த டிஜிட்டல் யுகத்தில் எப்போது வேண்டுமானாலும் உங்கள் டேட்டா லீக் ஆகி விடுமோ என்ற பயம் உள்ளதா. உங்கள் சோஷியல் மீடியா அக்கவுண்ட்டில் பல்வேறு நபர்களிடமிருந்து நீங்கள் பெறும் அல்லது அனுப்பும் மெசேஜ்களை யாராவது படித்துவிடுவார்கள் என்ற பயம் உங்களுக்கு இருக்கிறதா? இங்கே பிரபல ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் ஐபோனில் உங்கள் பர்சனல் மெசேஜ்களை எவ்வாறு மறைப்பது என்பது பற்றி பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் பல்வேறு டெக்னிக்ஸ்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி முக்கியமான சென்சிட்டிவ் தகவல்கள் வெளியாவதை தடுக்க முடியும்.

ஐமெசேஜ் (iMessage):

ஐபோன் யூஸர்களுக்காக Invisible Ink எனப்படும் ஒரு அம்சம் உள்ளது, இது டெக்ஸ்ட்டில் உள்ள தகவலை மறைக்கும் தனியுரிமை-மையப்படுத்தப்பட்ட ( privacy-centered) அம்சம் ஆகும். இதை நீங்கள் ஐபோன் யூஸராக இருப்பின் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..

முதலில் ஐபோனில் உள்ள மெசேஜிங் ஆப்-ஐ (messaging app) ஓபன் செய்து உரையாடலை (conversation) தேர்வு செய்து கொள்ளவும். நீங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்து விட்டு அந்த மெசேஜை அனுப்புவதற்கு முன் send பட்டனை லாங்-பிரஸ் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து டிஸ்ப்ளேவில் தோன்றும் Invisible Ink என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இப்போது உங்களது மெசேஜ்கள் மங்கலாகிவிடும், மேலும் நீங்கள் அனுப்பும் மெசேஜில் உள்ள தகவலைப் பார்க்க பெறுநர்,மங்கலான புள்ளியிடப்பட்ட அனிமேஷனின் மேல் ஸ்வைப் செய்ய வேண்டும். பெறுநர் ஸ்வைப் செய்த பிறகே நீங்கள் அனுப்பிய மெசேஜில் இருக்கும் டெக்ஸ்ட் அல்லது இமேஜ் அவருக்கு தெரியும். Invisible Ink அம்சத்துடன் மெசேஜ்களை அனுப்ப மற்றும் பார்க்க iOS 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஓஎஸ் தேவை என்பதை நினைவில் கொள்ளவும். iMessage ஐபோனில் மட்டுமே இயங்குகிறது மற்றும் பிற பிரைவேட் மெசேஜிங் ஆப்ஸ்களைப் போலல்லாமல், டிவைஸில் சேட்களைப் பாதுகாக்க ஆப்பிள் பல்வேறு அம்சங்களையும் கருவிகளையும் வழங்குகிறது.

ஃபேஸ் ஐடி (Face ID):

ஐபோன் யூஸர்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற பல்வேறு மெசேஜிங் பிளாட்ஃபார்ம்களுக்கு ஃபேஸ் ஐடி அம்சத்தை ஆக்டிவேட் செய்யலாம். அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது இப்போது பார்க்கலாம்.. வாட்ஸ்அப், டெலிகிராம் அல்லது சிக்னல் இதில் நீங்கள் விரும்பும் App-ஐ ஓபன் செய்யவும்.

வாட்ஸ்அப்:

முதலில் Go to Settings சென்று பின்னர் Account > Privacy இறுதியாக Screen Lock for WhatsApp-ஐ ஆக்டிவேட் செய்யவும்.

டெலிகிராம்:

முதலில் Settings சென்று பின் Privacy & Security ஆப்ஷனின் கீழ் இருக்கும் Passcode and Face ID for Telegram-ஐ பயன்படுத்தவும்.

Also read... 6 புதிய வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்தது யமஹா!

சிக்னல்:

Profile Icon சென்று அதில் Privacy-யின் கீழ் இருக்கும் Screen Lock for Signal.Notification Banner-ஐ இயக்கவும்.

இவை தவிர உங்கள் லாக் ஸ்கிரீன் அல்லது நோட்டிபிகேஷன் சென்டர் மூலம் ஒருவர் உங்கள் மெசேஜ்களை அணுகுவதை அல்லது படிப்பதையோ தடுக்க கீழே உள்ள முறையை பின்பற்றலாம்..

SettingsChoose Notifications என்பதற்கு சென்று ஸ்க்ரால் செய்து Messages App-ஐ கண்டறிந்து Alert section-ல் இருக்கும் லாக் ஸ்கிரீன், நோட்டிபிகேஷன் சென்டர் மற்றும் பேனர் ஆகியவற்றை அன்டிக் (Untick) செய்யவும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: IPhone

அடுத்த செய்தி