ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஸ்மார்ட்போனில் செயலிகளை மறைத்து பயன்படுத்தனுமா? இதை செய்தாலே போதும்!

ஸ்மார்ட்போனில் செயலிகளை மறைத்து பயன்படுத்தனுமா? இதை செய்தாலே போதும்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் என்பது நமது அந்தரங்க டைரி போன்றது. அதில் நமக்கும் பிரைவசி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான செய்தி தான் இது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு வந்த பிறகு உலகமே நமது கைகளுக்குள் வந்துவிட்டது. ஸ்மார்ட் போன் வருகைக்கு முன்பு 100 தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பவர்களுக்குக் கூட இப்போது தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் எண்கள் கூட மனப்பாடமாக தெரியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன்கள் நம்மை சோம்பேறிகளாக்கி இருக்கிறது. அதிலும் எதெற்காடுத்தாலும் ‘ஆப்’ என்ற நிலை தான் இன்னும் நம்மை பாடாய் படுத்துகிறது.

‘ஆப்’ இல்லாமல் நமக்கு அசைவே இல்லை எனலாம். அதனால் தான் நம் மொபைல் போன் ஸ்கிரீன் முழுவதும் ஆப் நிரம்பிக் கிடக்கிறது. அதே நேரம் எல்லோராலும், எல்லா நேரமும் எல்லா ஆப்களும் வெளிப்படையாக பயன்படுத்த முடியாது. அது சங்கடத்தைதான் உருவாக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர் அல்லது சக பணியாளர் என்று மற்றவர்களுடன் அடிக்கடி உங்கள் போனை பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால், உங்களுக்கு தேவைப்படும் சேவை தான் இது. நம் ஸ்மார்ட் போனில் உள்ள ஆப்களை மறைத்து வைத்து பயன்படுத்த முடியுமா? என்று கேட்கிறீர்களா. முடியும்… எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

மொபைல் ஆப்ஸ்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் ஹோம் ஸ்கிரீன் டிஸ்பிளே (Home screen Display), ஆப் டிராயர் (App Drawer) அல்லது ஆப்ஸ் லாஞ்சர் ( Apps Launcher) போன்ற ஏதாவது ஒரு ஆப்சன் இருக்கும். இவை ஏதாவது ஒன்றின் மூலம் பயன்படுத்தும் செயலிகளையும் நாம் மறைத்துவைத்து பயன்படுத்த முடியும். இதற்கு ஒவ்வொரு போனிலும், ஒவ்வொரு ஓஎஸ்-சிலும் பல்வேறு முறைகள் உள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

16 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள்.. ஒரே இரவில் வெளியே அனுப்பிய கூகுள்!

ஆண்ட்ராய்டு போனின் வெர்ஷனை பொறுத்து அப்ஸ்களை மறைப்பதற்கு வெவ்வேறு வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் ஆண்ட்ராய்டு 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்றால் Hide Apps அம்சத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் சாம்சங், ஒன்பிளஸ், பிக்சல் என்று எந்த ஆண்ட்ராய்டு பிராண்ட் பயன்படுத்தினாலும், ஆப்ஸ்களை மறைக்க முடியும். இது இல்லை என்றால், ஆப்ஸ்களை மறைப்பதற்கான மாற்று முறை, போன் லாஞ்சர் ஆப்ஸ்-பயன்படுத்தலாம். சீக்ரெட் போல்டர் உருவாக்குவதன் மூலம் ஆப்ஸ்களை மறைக்க இவை உங்களை அனுமதிக்கின்றன.

பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்கள் ஹோம் ஸ்கிரீன் செட்டிங்ஸ் இலிருந்து ஆப்ஸ்களை மறைக்க அனுமதிக்கின்றன. செட்டிங்ஸ் மெனு ஓபன் செய்து Hide என்று டைப் செய்தால் போதும் எதையெல்லாம் ஹைடு செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்து மறைத்து வைத்துக் கொள்ளலாம். மற்றொரு வழி செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று கீழே ஸ்க்ரோல் செய்து ஹோம் ஸ்கிரீன் விருப்பத்தை தேர்வு செய்து பிறகு Hide apps என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் அம்சங்களை கிளிக் செய்யவும். மறைக்கப்பட்ட ஆப்ஸ்கள் ஹோம் ஸ்கிரீன் மெனுவில் தோன்றாது.

இப்படி உங்கள் போனில் உள்ள ஆப்ஸ்களை ஈஸியாக மறைத்து வைத்து பயன்படுத்தலாம். சில போன்களில் hide apps விருப்பம் security அல்லது utilities ஆப்ஷனின் கீழ் இருக்கும். இதேபோல், App Lock என்ற ஆப்சனும் சில போன்களில் இருக்கும். இதன் மூலம் உங்கள் செலிகளை மறைக்காமல், அதற்கு PIN நம்பர் செட் செய்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

செய்தியாளர்: ரொசாரியோ ராய்

First published:

Tags: Smartphone, Technology, Viral