• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Windows 11: விண்டோஸ் 11 சாப்ட்வேரை பயன்படுத்த அவசரப்படாதீங்க - ஏன் தெரியுமா?

Windows 11: விண்டோஸ் 11 சாப்ட்வேரை பயன்படுத்த அவசரப்படாதீங்க - ஏன் தெரியுமா?

விண்டோஸ் 11

விண்டோஸ் 11

ஒரே நேரத்தில் மல்டி டாஸ்கிங்கில் ஈடுபடுவதற்குரிய வகையில் லே அவுட் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
விண்டோஸ் 11-ல் இன்னும் சில அம்சங்கள் மேம்படுத்த வேண்டியிருப்பதால் ரெகுலாக கம்யூட்டர் பயன்படுத்துபவர்கள் Preview இயங்குதளத்தை உபயோகிக்க வேண்டாம் என மைக்ரோசாப்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் விண்டோஸ் 11 ஓ.எஸ்-ஐ அறிமுகம் செய்தது. விண்டோஸ் 10-ம் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக இருப்பதால், இந்த ஆப்பரேடிங் சிஸ்டத்தை உபயோகப்படுத்த மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது. விண்டோஸ் 10ல் இருந்து பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன்படி புதிய விண்டோஸ் 11 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் ஸ்டார்ட் மெனு நடுப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு வெர்சன் செயலிகளை நேரடியாக விண்டோஸில் இருந்து பயன்படுத்த முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே நேரத்தில் மல்டி டாஸ்கிங்கில் ஈடுபடுவதற்குரிய வகையில் லே அவுட் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸில் இருக்கும் செயலிகளை நான்காக பிரித்து அதற்கேற்ப வகைப்படுத்திக்கொள்ளும் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 சந்தாதாரர்கள், தாங்கள் தேடும் கோப்புகளை ஸ்டார் மெனுவில் இருந்தே தேடி எடுத்துக்கொள்ளலாம். ஒன்றிற்கு மேற்பட்ட மானிட்டர்களை பயன்படுத்துவதற்கு விண்டோஸ் 11 ஏதுவாக இருக்கும் என பலரும் கூறுகின்றனர். வொர்க் ஸ்பீடு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கு ஏற்ப ஆப்ரேட்டிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிபுணர்களாக தெரிவிக்கின்றனர்.

வீடியோ அழைப்புகள், மீட்டிங் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். பிரத்யேக விஷூவல்களும், புதிய வைஜட்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குரல் வழி டைப்பிங் வசதி, எக்ஸ் பாக்ஸ் கேமிங் வசதியும் விண்டோஸ் 11ல் உள்ளது. விண்டோஸ் 11-ன் ப்ரிவியூ ஓ.எஸ் இப்போது யார்வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். விண்டோஸ் இன்சைடர் புரோகிராமில் இணைந்து, சிஸ்டமில் செட்டிங்ஸ், அப்டேட் மற்றும் விண்டோஸ் இன்சைடர் மூலம் ப்ரிவ்யூ ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால், நாள்தோறும் கம்பயூட்டரை பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் 11 அப்டேட்-ஐ பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Also read... Pinterest: எடை இழப்பு தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் படங்களையும் நீக்கிய Pinterest தளம்!

பல் அமசங்கள் மற்றும் செட்டிங்ஸ்கள் மேம்படுத்த வேண்டியிருப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ரிவ்யூ ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் தேவையற்ற வைரஸ், பக்ஸ் இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ப்ரிவ்யூ ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்திருப்பவர்களுக்கு டாஸ்க்பார் காண்பிக்கப்படவில்லை. மைக்ரோசாப்ட் ஸ்டோர் இன்ஸ்டால் பட்டன் வொர்க் ஆகவில்லை. ஆன்டிராய்டு செயலிகள் பயன்படுத்தும் வகையில் இன்னும் செட்டிங்ஸ் பணிகள் மேம்படுத்தபட்டுக்கொண்டிருக்கின்றன. இது குறித்து சமிக்கையும் பிரிவ்யூ டெஸ்க்டாப்பில் காண்பிக்கப்படுகிறது.

ஏற்கனவே விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்கள் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டாம். மைக்ரோசாப்ட் தற்போது பல செட்டிங்ஸ்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. முழுமையான மேம்படுத்தல் பணிகள் நிறைவடைந்தவுடன் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்றும், அதுவரை யூசர்கள் காத்திருக்க வேண்டும் எனவும் டெக் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒருவேளை உங்கள் சிஸ்டமில் புதிய ஓ.எஸ் வொர்க் ஆகவில்லை என்றால் மீண்டும் பழைய ஓ.எஸ்-ஐ மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டியிருக்கும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: