• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ட்விட்டரில் ப்ளூ டிக் அம்சத்தை பெற என்ன செய்ய வேண்டும் ?

ட்விட்டரில் ப்ளூ டிக் அம்சத்தை பெற என்ன செய்ய வேண்டும் ?

ட்விட்டர்

ட்விட்டர்

சமூக வலைதளங்கள் பிரபலங்களின் கணக்குக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்களது பெயரில் டிக் குறியீடு அளித்தது

  • Share this:
    பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஒருவர் பெயரில் கணக்குத் துவங்கி, தவறான தகவல்களையும், அவதூறுகளையும் பரப்பும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக பிரபலங்கள் பெயரில் போலியான கணக்குகள் மூலம் அவதூறுகள் பரப்பப்பட்டு வந்தன. இதனையடுத்து சமூக வலைதளங்கள் பிரபலங்களின் கணக்குக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்களது பெயரில் டிக் குறியீடு அளித்தது. இதன் மூலம் அந்த பதிவிட்டது உண்மையான நபரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும். இதனால் தேவையில்லாமல் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டது.

    ஆனால் இன்னும் ஒரு சிலர் பிரபலங்களின் பெயரில் தவறான பதிவுகள் இட்டு அதன் மூலம் தேவையில்லாத சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. உதாரணமாக பிரபலங்களின் பெயர்களில் கலங்கம் விளைவிக்க அவர்கள் பெயரில் போலி ட்விட்டர் பக்கம் மூலம் தவறான பதிவகள் இட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பலருக்கு தங்கள் ப்ளூ டிக் எப்படி வாங்குவது என்று தெரியாமல் இருக்கிறது. ஒருவருக்கு ப்ளூ டிக் கொடுப்பதற்கு ட்விட்டர் பல்வேறு விதிமுறைகள் வைத்துள்ளது.

    ட்விட்டரில் ப்ளூ டிக் பெற ஒருவர் முக்கியமான, நம்பத்தகுந்த ஆளாக, ட்விட்டரை அதிகம் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். ஒருவர் முக்கிய நபர் என்பது அவர் பெரிய நிறுவனங்கள், அமைப்பு ஆகியவற்றை சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவரது ட்விட்டர் கணக்கிற்கு ப்ளூ டிக் கிடைக்கும். மேலும் சரியான புரொஃபைல் போட்டோ (Profile Photo), சரியான குறிப்புகள் (Bio) மற்ற இதர விவரங்கள் ஆகியவை உண்மையானவையாக இருக்க வேண்டும். அவர்கள் சரியான இமெயில் முகவரி, மற்றும் செல்போன் எண்ணை குறிப்பிட்டிருக்க வேண்டும். ட்விட்டர் நடைமுறைகளை சரியாக பின்பற்றியிருக்க வேண்டும்.

    ஒருவர் அரசு அதிகாரியாக, அலுவலராக செய்தி அமைப்பை சேர்ந்தவராக, பத்திரிக்கையாளராக, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், அமைப்பை சேர்ந்தவராக, பொழுதுபோக்கு துறையை சேர்ந்தவராக, விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவராக, மிகவும் கவனம் பெற்றவராக, அறிவியல் அறிஞராக, ஒரு மத தலைவராக இருந்தால் அவர் ட்விட்டரில் ப்ளூ டிக் பெற தகுதியானவர். மேலே சொல்லப்பட்ட தகுதிகள் இருந்தால் உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் செட்டிங்க்ஸில் வெரிஃபிகேஷன் ஆப்சன் (Verification option)வரும் வரை காத்திருக்கவும். அப்படி வெரிஃபிகேஷன் ஆப்சன் வந்தால், அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்ட ஏதொவொரு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

    பின்னர் ஒரு வாரத்தில் இருந்து 30 நாட்களுக்குள் ட்விட்டர் இமெயில் மூலம் பதிலளிக்கும். உங்கள் ட்விட்டர் கணக்கு வெரிஃபை செய்யப்பட்டிருந்தால், தானாக உங்கள் பெயரின் பின்னால் ப்ளூ டிக் வந்திருக்கும். ட்விட்டரில் வெரிஃபிகேஷன் பாலிசி இன்னும் வெளிப்படையாக இல்லை என்று கூறப்படுகிறது. எந்த நிறுவனத்தையும் சாராத, பத்திரிக்கையாளர்களும் தங்கள் ட்விட்டர் கணக்குக்கு ப்ளூ டிக் பெறலாம். ட்விட்டர் தங்களது பயனாளர்களுக்கு வெரிஃபிகேஷன் வழங்க ஒரு டீம் வைத்திருக்கிறது. இந்த டீம், வெரிஃபிகேஷன் பெற விண்ணப்பித்தவர்களின் கணக்கை ஆராய்ந்து முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: