ஆப்பிள் நிறுவனம் கடந்த ஜூலை 15 முதல் M2 சிப்புடன் கூடிய தனது புதிய மேக்புக் ஏர் எம்2 விற்பனையை தொடங்கியுள்ளது. ஒரு புதிய மினிமலிஸ்ட் டிசைனுடன் வரும் இது MacBook Air M1-ஐ விட சிறப்பாக செயல்படுவதால் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது இந்த புதிய டிவைஸின் பேசிக் மாடல் (MacBook Air M2) விலையை ரூ.1,19,990 ஆக உயர்த்தி அறிமுகப்படுத்தி உள்ளது. இது இதற்கு முந்தைய டிவைஸ்களின் பேசிக் மாடலின் MRP-யான ரூ.92,900 என்ற விலையை விட கிட்டத்தட்ட 30% கூடுதலாகும். இதன்படி Apple macbook air M2 வின் 8 கோர் CPU, 8GB ரேம் மற்றும் 512GB SSD ஸ்டோரேஜ் அடங்கிய பேசிக் மாடல் ரூ.1,19,900 முதல் தொடங்குகிறது. அதே போல ஆப்பிள் MacBook Air M1-ன் MRP-யை ரூ.92,900-ல் இருந்து ரூ.99,900-ஆக உயர்த்தியது.
இந்த விலை உயர்வு காரணமாக புதிய MacBook Air M2 மாடலை வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக ஆப்பிள்நிறுவனம் மாணவர்களுக்காக புதிய கல்வி சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆஃபரின் அடிப்படையில் நீங்கள் புதிய MacBook Air M2-ஐ வெறும் ரூ.95,800 என்ற சலுகை விலையில் வாங்கலாம். ஆம், நீங்கள் படித்தது சரி தான். புதிய MacBook Air M2 மீது சுமார் ரூ.24,100 என்ற பெரும் பண தள்ளுபடியை நீங்கள் பெற முடியும். 2022 ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 மொபைலானது மிட்நைட், ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் ஸ்டார்லைட் உள்ளிட்ட4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Read More : முன்கூட்டியே அறிமுகமாகும் ஐஃபோன் 14 – ஆப்பிள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி.!
சுமார் ரூ.24,100 தள்ளுபடியுடன் ரூ.95,800-க்கு மேக்புக் ஏர் எம்2 வாங்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்.?
- UNiDAYS-ல் வெரிஃபை செய்து ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியா வெப்சைட்டில் ஸ்டூடன்ட் ப்ரொஃபைலை உருவாக்குங்கள். நீங்கள்viral இப்போது கல்லூரியில் படிக்கவில்லை என்றால் நீங்கள் வேறு யாரிடமாவது உதவி பெற்று நீங்கள் உதவி பெற்று ஸ்டூடன்ட் ஐடி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
மேற்கண்ட முதல்படியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள் என்றால் உங்கள் கார்ட்டில் MacBook Air M2-ஐ சேர்க்கவும். இந்த கட்டத்தில் இந்த டிவைஸின் விலை ரூ.1,09,900-ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் ஸ்டூடன்ட் டிஸ்கவுண்டுடன் சேர்த்து ரூ.14100 மதிப்புள்ள AirPods-களை Apple நிறுவனம் இலவசமாக இணைக்கிறது. எனவே இதை மனதில் கொண்டு, MacBook Air M2-ன் பயனுள்ள விலை இப்போது ரூ.95,800-ஆக உள்ளது. எப்படி என்றால் உங்களுக்கு வழங்கப்படும் புதிய ஜோடி AirPods-களை வைத்திருக்க வேண்டாம் என்று நீங்கள் கருதினால் அதை விற்பதன் மூலம் உங்களுக்கு கையில் பணமாக கிடைத்து விடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online shopping, Shopping malls, Technology, Viral