Home /News /technology /

லைசென்ஸை எடுத்து செல்ல மறந்தாச்சா.? டிஜிட்டல் லைசென்ஸ் எடுத்துக்கலாம்…இதோ முழுவிபரம்!

லைசென்ஸை எடுத்து செல்ல மறந்தாச்சா.? டிஜிட்டல் லைசென்ஸ் எடுத்துக்கலாம்…இதோ முழுவிபரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Digital Driver's License | மொபைல் ஆப்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் ஒட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை இந்திய அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இன்றைக்கு டூவிலர் மற்றும் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஆர்வத்துடன் லைசென்ஸ் எடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் லைசென்ஸ் எடுப்பதற்கு எந்தளவிற்கு ஆர்வம் காட்டுகிறார்களோ? அந்தளவிற்கு வெளியில் செல்லும் போது ஓட்டுநர் உரிமத்தை உடன் எடுத்துச்செல்ல மறந்து விடுகின்றனர்.

இதனால் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்ற சூழ்நிலைகளில் சிக்கும் மக்களை காப்பற்றும் விதமாக இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மொபைல் இருந்தால் போதும்.. சுலபமாக டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை நாம் பெற முடியும்.



 

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள்:

1. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிமுகம் செய்துள்ள டிஜிலாக்கர்(digilocker app) என்ற செயலியை நீங்கள் முதலில் உங்களது மொபைலில் உள்ள பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யவும்.

2. மொபைல் ஆப்பை ஓபன் செய்த பிறகு, உங்களுக்குத் தேவைப்படக்கூடிய ஆவணங்கள் பகுதிக்கு செல்லவும்.

3. பின்னர் டிரைவிங் லைசென்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து "Ministry of Road and Transport Highways" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

4. இதில் உங்களது ஓட்டுநர் உரிம எண்ணை உள்ளிடவும். தொடர்ந்து ஆவணங்களை பெறு என்பதை தேர்ந்தெடுத்து உங்களது டிஜிட்டல் ஒட்டுநர் உரிமத்தை நீங்கள் PDF ஆக டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளலாம்.

இதனை நீங்கள் போக்குவரத்து காவல்அதிகாரிகளிடம் தேவைப்படும் பட்சத்தில் காண்பிக்கலாம்.. இது செல்லுப்படியாகும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Also Read : யாருக்கு எந்த ITR படிவம்? உங்களுக்கு எந்த படிவம்? விவரங்கள் இதோ..

டிஜிலாக்கர் இணையதளம் (Digilocker website) வழியாக ஓட்டுநர் உரிமம் பெறும் முறை:

நீங்கள் முதலில் டிஜிலாக்கர் இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் மேல் இடது மூலையில் உள்ள ஆவணங்களை தேடு என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் மெனுவில் உள்ள ஓட்டுநர் உரிமம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

தற்போது தொடர்ந்து "Ministry of Road and Transport Highways" என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

இதில் உங்களது ஓட்டுநர் உரிம எண்ணை உள்ளிடவும். தொடர்ந்து ஆவணங்களை பெறு என்பதை தேர்ந்தெடுத்து உங்களது டிஜிட்டல் ஒட்டுநர் உரிமத்தை நீங்கள் PDF ஆக டவுன்லோடு செய்து வைத்து கொள்ளலாம்.



Parivahan Sewa வழியாக ஓட்டுநர் உரிமம் பெறும் முறை:

முதலில், Parivahan Sewa என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

பின்னர் ஆன்லைன் சேவைகள் பிரிவுகளின் கீழ் ஓட்டுனர் உரிமம் தொடர்பான சேவைகள் என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் மெனுவிலிருந்து உங்களது மாநிலம் என்ன? என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொடர்ந்து டிரைவிங் லைசென்ஸ் பிரிவில், டிரைவிங் லைசென்ஸ் அச்சிடு (Print Driving licence) என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். இறுதியில் உங்களது ஓட்டுநர் உரிமத் தகவலை சமர்ப்பித்து சரியாக உள்ளதா? என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

Also Read : ஹோட்டல், ரெஸ்டாரண்ட் பில்லில் சேவை வரி இருந்தால் செலுத்த வேண்டாம் - மத்திய அரசு உத்தரவு

இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை நீங்கள் எளிதில் பெற்றுவிடலாம்.

குறிப்பாக இன்றைக்கு இணையத்தின் பரிமாண வளர்ச்சி மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் சில நொடிகளில் நம் கண்முன்னே கொண்டு சேர்க்கிறது இணையதளம். இவை இல்லாமல் நாம் இருக்கவே முடியாத என்ற சூழலுக்கு மாறியுள்ள நிலையில் தான், அரசும் மக்களுக்கான அடிப்படை தேவைகளை இணைய சேவைகளின் மூலம் பெறுவதற்காக இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Digital India, Driving License, India

அடுத்த செய்தி