Home /News /technology /

ஸ்மார்ட் ஃபோன் பேட்டரி வேகமாக காலியாகும் பிரச்சனையை சரிசெய்ய உதவும் டிப்ஸ்.!

ஸ்மார்ட் ஃபோன் பேட்டரி வேகமாக காலியாகும் பிரச்சனையை சரிசெய்ய உதவும் டிப்ஸ்.!

ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட் போன்

தவிர்க்க முடியாத நேரங்களில் ஃபோனை வைப்ரேஷன் மோடில் வைக்கலாம். ஆனால் எப்போதுமே வைப்ரேஷனில் வைப்பது பேட்டரி லைஃபை வெகுவாக பாதிக்கும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஸ்மார்ட் ஃபோன்கள் இன்றி நம்மால் ஒருநாள் கூட இருக்க முடிவதில்லை. லேட்டஸ்ட் ப்ராசஸர், நல்ல ஹெச்டி கேமரா, சிறப்பான சவுண்ட், நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி என பார்த்து பார்த்து ஃபோன்களை வாங்குகிறோம். ஆனால் இதில் பேட்டரி லைஃப் மட்டுமே பல நேரங்களில் கேள்விக்குறியாகி விடுகிறது. ஃபோன் வாங்கி சுமார் 6 -7 மாதங்கள் நீடித்து உழைக்கும் பேட்டரியின் செயல்திறன் படிப்படியாக குறைவது நம்மை ஏமாற்றமடைய செய்கிறது. சிறந்த பேட்டரி ஆப்ஷனுடன் கூடிய ஃபோனை வாங்கியும் கூட அதன் பேட்டரி மிக வேகமாக தீர்ந்துவிடும் பிரச்சனையை பலரும் எதிர்கொள்கின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் பேட்டரி லைஃப் உட்பட எல்லாவற்றிலும் ஸ்மார்ட் போன் டெக்னலாஜி நீண்ட தூரம் முன்னேறி இருந்தாலும் இன்னமும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பேட்டரி வேகமாக காலியாகும் சிக்கல் நீடிக்கிறது. பெரிய ஸ்கிரீன் டிஸ்ப்ளே, சென்சார்கள் மற்றும் ப்ராசஸர்களின் ஹயர் வெர்ஷன் உள்ளிட்ட பல காரணிகள் ஃபோன் பேட்டரியை பாதிக்கின்றன. உங்கள் ஸ்மார்ட் போனின் ஃபேட்டரி லைஃபை அதிகரிக்க, போன் ஃபேட்டரி வேகமாக காலியாகும் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில ட்ரிக்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

வைப்ரேஷன்..

தவிர்க்க முடியாத நேரங்களில் ஃபோனை வைப்ரேஷன் மோடில் வைக்கலாம். ஆனால் எப்போதுமே வைப்ரேஷனில் வைப்பது பேட்டரி லைஃபை வெகுவாக பாதிக்கும். சாதாரணமாக ரிங் டோனை விட வைப்ரேஷன் அதிக பேட்டரி பவரை எடுக்கும். டைப் செய்யும் போது, கால்ஸ் அல்லது மெசேஜிற்கு நீங்கள் வைப்ரேஷன் செட் செய்பவராக இருப்பின் அதனை இனி தவிர்த்து கொள்ளுங்கள். பெரும்பாலும் வைப்ரேஷனை தவிர்ப்பது உங்கள் ஸ்மார்ட் ஃபோனின் பேட்டரி ஆயுளை பெரிதும் அதிகரிக்க உதவும்.

ALSO READ |  மோட்டோ G51 ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி அறிவிப்பு - இதன் விலை, சிறப்பம்சங்கள்!

பேட்டரி சேவராக இருக்கும் பிளாக் கலர்..

ஆச்சரியப்படும் விதமாக பிளாக் கலர் வால்பேப்பர் உங்கள் ஸ்மார்ட் ஃபோன் பேட்டரி ஆயுளை சேவ் செய்யும். உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் AMOLED டிஸ்ப்ளே இருந்தால், டார்க் வால்பேப்பர்களை பயன்படுத்துவதன் மூலம் பேட்டரி லைஃபை Save செய்ய முடியும். ஏனென்றால் AMOLED டிஸ்ப்ளேக்களில் உள்ள பிக்சல்கள் பிரகாசமான வண்ணங்களை ஒளிரச் செய்ய பேட்டரி பவரை மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் பிளாக் கலரை காட்ட அவ்வளவாக பேட்டரி பவர் பயன்படாது.

பயன்படுத்தாத போது ஆஃப்..

ப்ளூடூத், ஜிபிஎஸ், வைஃபை, மொபைல் டேட்டா, ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட ஸ்மார்ட் ஃபோனின் முக்கிய அம்சங்கள் அதிக பேட்டரி பவரை எடுக்கும் என்பது தெரிந்ததே. எனவே அலட்சியம் காட்டாமல் பயன்படுத்தாத போது இவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டும். அதே போல பேட்டரி குறைவாக இருக்கும் போது battery save mode அல்லது Airplane mode-ஐ பயன்படுத்தலாம்.

ALSO READ |  ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் 2 கோடி பதிவுகளை நீக்கிய மெடா!

Auto sync-ஐ ஆஃபில் வைக்கவும்..

ஜிமெயில், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல ஆப்ஸ்கள் யூஸர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்களை வழங்க அவற்றைத் தொடர்ந்து புதுப்பிக்க டேட்டாவை தானாக Auto sync செய்கிறது. Auto sync-ன் பின்னணியில் back end work நிறைய நடக்கும், இதனால் பேட்டரி பவர் சீக்கிரம் தீரும். எனவே செட்டிங்ஸ் மற்றும் கூகுள் அக்கவுண்ட்டிற்கு சென்று, எல்லா நேரங்களிலிருந்தும் தகவல்களை பெற தேவையில்லா ஆப்ஸ்களுக்கு Auto sync-ஐ turn off செய்வது சிறந்த பலனை தரும்.

ஆன்-ஸ்கிரீன் விட்ஜெட்ஸ்..

widgets உங்களுக்கு பிடித்த அம்சங்களில் ஒன்றாக இருந்தாலும் ஸ்மார்ட் ஃபோன் பேட்டரியை அதிகமாக சாப்பிடுகிறது. எனவே பேட்டரி ஆயுளை சேமிக்க தேவையில்லாத விட்ஜெட்ஸ்களை நீக்கி விடுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Smart Phone

அடுத்த செய்தி