• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • செல்போன், கணிணிகளில் Hidden Files-ஐ கண்டுபிடிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

செல்போன், கணிணிகளில் Hidden Files-ஐ கண்டுபிடிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

மாதிரி படம்

மாதிரி படம்

பைல் எக்ஸ்புளோரலில் ஆப்ரேட்டிங் சிஸ்டம் பைல்கள், பொதுவாக பார்வைக்கு தெரியாமல் கூட இருக்கும். அதனை search பாக்ஸில் தேடி கண்டுபிடிக்கலாம்.

  • Share this:
கணிணிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் மட்டுமே இருக்கிறது என நினைக்க வேண்டாம். உங்களுக்கு தெரியாமலேயே சில பைல்கள் உங்கள் மடிக்கணிணிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் இருக்கும். போன், கம்யூட்டர்களில் இருக்கும் செயலிகள் மற்றும் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களின் துணையால், அந்த பைல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த பைல்கள் நீக்கப்படும்போது அல்லது திருத்தப்படும்போது உங்கள் சிஸ்டம் சீரான இயக்கத்தைக் கொண்டிருக்கும். யூசர் செட்டிங்ஸ் மற்றும் app configurations உள்ளிட்டவை பொதுவாக மறைக்கப்பட்ட பைல்களாக சேமிக்கப்படும். புரோகிராம்கள் இயங்குவதற்கு இந்த பைல்கள் தேவை என்றாலும், யூசர்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமிருக்காது. அதனால், Hidden File - கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்களில் இருப்பது சாதாரணமானது என்றாலும், அவற்றை எச்சரிக்கையாக நீக்க வேண்டும்.

ஒவ்வொரு சாதனத்திலும் Hidden Files-ஐ நீக்குவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

விண்டோஸ் :

பைல் எகஸ்புளோரை திறந்து ரிப்பன் பாரில் (ribbon bar) கிளிக் செய்தால், Hidden items box என்ற ஆப்சன் காண்பிக்கும். அதனை கிளிக் செய்தால் hidden files -ஐக் காணலாம். அங்கு நீங்கு தேர்ந்தெடுக்கும் ஆப்சனை, பைல் எக்ஸ்புளோரர் அல்லது ரிபூட் செய்யும்பட்சத்தில் விண்டோஸ் நினைவில் வைத்துக்கொள்ளும். நீங்கள் விரும்பும் பைல்கள் மறைக்கவும், மறைக்காலும் கூட வைக்கலாம்.

பைல் எக்ஸ்புளோரலில் ஆப்ரேட்டிங் சிஸ்டம் பைல்கள், பொதுவாக பார்வைக்கு தெரியாமல் கூட இருக்கும். அதனை search பாக்ஸில் தேடி கண்டுபிடிக்கலாம். அவற்றில் தேவையான மாற்றங்களை செய்ய விரும்பினாலும், நீங்கள் செய்து கொள்ள முடியும்.

மேகோஸ் (MacOS) :

Finder பயன்பாட்டைப் பயன்படுத்தி, MacOS கணிணிகளில் மறைந்திருக்கும் பைல்களை உடனடியாக கண்டுகொள்ளலாம். பின்னர், Cmd+Shift+ ஷார்ட் கட் ஆப்சனை பயன்படுத்தி, மறைந்திருக்கும் பைல்களை பார்க்கும் நீங்கள், சில பைல்கள் மறைக்கவும், வியூவில் வைக்கவும் முடியும். சாதாரண கோப்புகள் சாம்பல் நிற வண்ணத்தில் இருக்கும். பைல்களின் நிலையை மாற்ற கட்டாயம் டெர்மினல் பயன்பாட்டைத் ஓபன் செய்ய வேண்டும். MacOS -ல் Library ஆப்சனும் உள்ளது. அங்கு அனைத்து வகையான பைல்களையும் நீங்கள் எளிதாக கையாள முடியும்.

Also read... உங்கள் கணினியில் வைரஸ் உள்ளதா? எளிதாக கணினியை ஸ்கேன் செய்யலாம்!

ஆண்ட்ராய்டு சாதனம் :

ஆன்டிராய்டு போன்களில் மறைக்கப்பட்ட பைல்களைத் தேடுகிறீர்கள் என்றால், பைல்ஸ் ஆப் (Files App) தான் சரியான தேர்வாக இருக்கும். இந்த செட்டிங்ஸில் அனைத்து வகையான பைல்களும், அதன் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும். அங்கும் நீங்கள் தேடும் பைல்கள் இல்லையென்றால் மெனுவை கிளிக் செய்யுங்கள். அப்போது, வலது கார்னரில் இருக்கும் மூன்று புள்ளிகளை தேர்ந்தெடுத்தால் அதில் மறைக்கப்பட்ட பைல்களுக்கான ஆப்சன் இருக்கும். அதனை தேர்ந்தெடுத்து, மறைந்திருக்கும் பைல்களை பார்த்துக்கொள்ளுங்கள்.

iOS :

மற்ற ஆப்ரேடிங் சிஸ்டம்களைக் காட்டிலும், ஆப்பிளின் இயக்க முறைமைகள் முற்றிலும் மாறானது. ஐ.ஓ.எஸ் இயக்கமுறையை கொண்ட ஆப்பிள் மறைக்கப்பட்ட பைல்களை பார்க்க உங்களை அனுமதிக்காது. அப்போது, பைல் செட்டிங்ஸை நீங்கள் ஓபன் செய்ய வேண்டும். அதில் மை ஐபோன் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால், தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பைல்களும் காண்பிக்கும். போட்டோ, வீடியோ என அவற்றின் வகையின் அடிப்படையில் இருக்கும் பைல்களை நீங்கள் திறந்து பார்த்து, தேவையானது மற்றும் தேவையில்லாததை டெலிட் செய்து கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: