முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / உங்க போனில் தானாக டவுன்லோடாகும் ஆபத்தான APP.. உடனே இதை செய்யுங்க!

உங்க போனில் தானாக டவுன்லோடாகும் ஆபத்தான APP.. உடனே இதை செய்யுங்க!

android tips and tricks

android tips and tricks

ஆபத்தான செயலிகள் மொபைலில் தானாக டவுன்லோடு ஆகும். அவற்றை எப்படி கண்டறிவது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் உபயோகிக்கும் அலைப்பேசி கத்திமுனையை போன்றது. அதில், நல்ல விஷயங்களும் உள்ளது, கேட்ட விஷயங்களும் உள்ளது. ஸ்மார்ட்போன் உபயோகம் அதிகரிப்பதை போலவே மோசடிகளும் அதிகரித்துவிட்டது. நம்மை அறியாமலேயே நமது போனில் சில சமயங்களில் சில செயலிகள் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். அந்த ஆப்ஸ் சில சமயங்களில் போனில் ஹிட்டன் செய்யப்பட்டிருக்கும்.

இதன் மூலம் பண மோசடி, தனிநபர் விவரங்கள் என பல மோசடி விஷயங்கள் நடைபெறும். அப்படி, உங்கள் போனில் மறைந்திருக்கும் அப்ளிகேஷன்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நீங்கள் ஸ்மார்ட்போன் பயனர்களாக இருந்தால், உங்கள் தொலைபேசியில் உள்ள ஹிட்டன் ஆப்ஸ் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். நாங்கள் கூறும் இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

முறை 1 : உங்கள் தொலைபேசியின் செட்டிங் பகுதிக்கு செல்லவும். அதில், ஆப்ஸ் அண்ட் நோட்டிபிகேஷன் பகுதியில் நீங்க உபயோகிக்கக்கூடிய செயலிகளின் முழுமையான பட்டியல் இருக்கும். இப்போது, See All Apps என்பதை தேர்வு செய்யவும். இங்கே நீங்கள் Installed Apps, Disabled Apps, Hidden Apps என அனைத்து விருப்பங்களும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும்.

இப்போது, Disable apps என்பதற்குள் செல்லவும். இதில், உங்கள் மொபைலில் எந்தெந்த ஆப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். நீங்கள் Installed செய்யப்படாத செயலிகள் ஏதாவது இருந்தால், அதை உடனே டெலிட் செய்யவும்.

ஹிட்டன் செயலியை எப்படி கண்டு பிடிப்பது? : உங்கள் மொபைல் செட்டிங்ஸ் சென்று ஆப்ஸ் -க்குள் செல்லவும். இங்கே Special App Access கிடைக்கும். அதை கிளிக் செய்யவும். பின்னர், உங்களுக்கு All Files Access கிடைக்கும். அதை கிளிக் செய்யவும். இப்போது, உங்கள் தொலைபேசியில் இருக்கும் செயலிகளை பற்றிய தகவலைப் பெறுவீர்கள். இங்கே நீங்கள் மறைக்கப்பட்ட செயலிகளை தெளிவாக காணலாம்.

First published:

Tags: Android Apps, Apps, Technology