முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / உங்கள் பழைய ஆண்டிராய்டு ஃபோனில் உள்ள அனைத்து விவரங்களையும் எளிய முறையில் எப்படி அழிப்பது?

உங்கள் பழைய ஆண்டிராய்டு ஃபோனில் உள்ள அனைத்து விவரங்களையும் எளிய முறையில் எப்படி அழிப்பது?

காட்சி படம்

காட்சி படம்

உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இருக்கும் அனைத்து டேட்டாவை மொத்தமாக டெலீட் செய்வது எப்படி?

வெறுமனே கால் செய்வது அல்லது மெசேஜ் அனுப்புவது என்ற வரையறையோடு ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாடு முடிந்து விடுவதில்லை. நம் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அது மாறிவிட்டது. முக்கியமான ஃபோட்டோ, வீடியோ, டாக்குமெண்ட்ஸ் உள்ளிட்ட டேட்டா, கான்டாக்ட்ஸ் மற்றும் இதர முக்கிய தகவல்கள் ஃபோனில் சேமிக்கப்படுகின்றன.

இத்தகைய சூழலில், பழைய ஃபோனில் இருந்து புதிய ஃபோனுக்கு மாறுவது சற்று சிக்கல் நிறைந்த காரியமாக உள்ளது. அதாவது பழைய ஃபோனில் உள்ள டேட்டா அனைத்தையும் புதிய ஃபோனுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமல்லாமல் புதிய ஃபோனில் நமக்கு தேவையான ஆப்களை இன்ஸ்டால் செய்து, ஒவ்வொன்றிலும் லாகின் செய்ய வேண்டும். இது எல்லாவற்றையும் விட முக்கியமானது டேட்டா டிரான்ஸ்பருக்கு பிறகு பழைய ஃபோனில் உள்ள அனைத்து விவரங்களையும் அழிக்க வேண்டும் என்பது.

உங்கள் பழைய ஃபோனை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்து கடையில் மாற்றிக் கொண்டாலும் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் என யாரிடம் வழங்கினாலும் அதில் உள்ள பெர்சனல் டேட்டா அனைத்தையும் டெலீட் செய்வது கட்டாயம் ஆகும். ஆனால், ஒவ்வொரு டேட்டா-வாக நீங்கள் டெலீட் செய்து கொண்டிருப்பது கொஞ்சம் சிரமமான காரியம். ஆகவே, எளிமையாக ஃபேக்டரி ரீசெட் செய்து விடலாம்.

ஃபேக்டரி ரீசெட் செய்வதால் என்ன பலன்

உங்கள் ஃபோனை நீங்கள் ஃபேக்டரி ரீசெட் செய்யும்போது அதில் உள்ள அனைத்து ஃபைல்களும் ஒரே மூச்சில் டெலீட் ஆகிவிடும். குறிப்பாக, நீங்கள் லாகின் செய்த ஆப்கள், ஃபோட்டோக்கள் மற்றும் உங்கள் மெசேஜ்கள் உள்ளிட்ட அனைத்தும் டெலீட் செய்யப்படும்.

also read : எலான் மஸ்க் ட்விட்டரில் மாற்ற விரும்பும் 5 விஷயங்கள் இவைதான்..

அதே சமயம் ஃபேக்டரி ரீசெட் செய்வதற்கு முன்னால் உங்கள் பழைய ஃபோனில் உள்ள டேட்டா அனைத்தும் ஆப்லைன் பேக்அப் எடுத்து வைக்கப்பட்டுள்ளதா அல்லது ஆன்லைன் கிளவுட் ஸ்டோரேஜில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

also read : மொபைல் பேட்டரிகள் எதனால் தீப்பிடிக்கிறது ? 5 பொதுவான காரணங்கள் இங்கே..

உங்கள் ஆண்டிராய்டு ஃபோனை ரீசெட் செய்வது எப்படி?

  • ஃபோனில் செட்டிங்க்ஸ் ஆப் ஓப்பன் செய்து கொள்ளவும் அல்லது ‘About Phone’ என்ற டேப்-ஐ ஓப்பன் செய்யவும்.
  • ஃபேக்டரி ரீசெட் அல்லது சிம்பிளி ரீசெட் என்ற ஆப்சன் அங்கு இருக்கும்.
  • இந்த ஆப்சனில் கடைசியாக உள்ள எரேஸ் ஆல் டேட்டா என்ற பட்டனை டேப் செய்யவும்.
  • அதில் வழிமுறைகளை படித்து, அனைத்து டேட்டாவை அழிக்க அக்ரீ என்று கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் ஃபோனின் அன்லாக் கோடு அல்லது பின் கோடு அல்லது பாஸ்கோடு என ஏதேனும் ஒன்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • ஸ்கிரீனில் தென்படும் வார்னிங் மெசேஜை படித்து, எரேஸ் ஆல் டேட்டா என கொடுக்கவும். இப்போது எல்லாம் அழிக்கப்பட்டு விடும்.

First published:

Tags: Smartphone