Home /News /technology /

பழைய மொபைலில் உள்ள கான்டாக்ட்களை புது மொபைலில் எளிதாக மாற்றும் வழிமுறை!

பழைய மொபைலில் உள்ள கான்டாக்ட்களை புது மொபைலில் எளிதாக மாற்றும் வழிமுறை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

பழைய மொபைலில் உள்ள தரவுகளை புது மொபைலுக்கு மாற்ற வேண்டும் என்பது சவாலான ஒன்று.

ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் ஒரு முறைக்கு பலமுறை உங்கள் பட்ஜெட்டுக்குள் வரக்கூடிய சிறந்த மொபைலை தேர்ந்தெடுப்பீர்கள். புது மொபைல் வாங்குவது மிக பெரிய சவாலான விஷயம் என்றால், பழைய மொபைலில் உள்ள தரவுகளை புது மொபைலுக்கு மாற்ற வேண்டும் என்பது அதை விடவும் சவாலான ஒன்று. குறிப்பாக கான்டெக்ட் தரவுகளை தவற விடாமல் அப்படியே புது மொபைலுக்கு மாற்ற வேண்டும் என்று நாம் நினைப்போம். இதை எளிதாக செய்து முடித்திட சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

ஆண்ட்ராய்டு மொபைல்

புது மொபைல் வாங்கியவுடன் பழைய மொபைலில் உள்ள கான்டெக்ட் தரவுகளை புது மொபைலுக்கு மாற்றுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும். முதலில் இதற்கு உங்கள் மொபைலில் செட்டிங்ஸிற்கு சென்று அதில் contacts என்பதை தேர்வு செய்யவும். பிறகு Import/Export என்பதைத் தேர்ந்தெடுத்து, Export to SIM card என்கிற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், உங்களின் புது மொபைலில் Import from the SIM card என்பதை கவனமாக கிளிக் செய்து கான்டெக்ட் தரவுகளை புது மொபைலுக்கு மாற்றி கொள்ளுங்கள்.

இந்த முறையை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள கான்டெக்ட்களை ஒன்றில் இருந்து மற்றொன்றில் மாற்றி கொள்ளலாம். இதை மேலும் எளிமையாக மாற்ற, சாம்சங் மற்றும் ஹவாய் போன்ற சில ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் எளிதாக மற்றொரு மொபைலுக்கு கான்டெக்ட்களை மாற்றிட அல்லது தரவுகளை மீட்டெடுப்பதற்காக அதற்கென்றே தனியாக பயன்பாடுகளை அவர்களின் ஸ்மார்ட் போன்களிலேயே வழங்குகிறார்கள்.

நீங்கள் சிம் ஆபரேட்டரை மாற்றினால், உங்கள் புதிய சிம் கார்டுக்கு கான்டெக்ட் தரவுகளை மீண்டும் Export செய்வதற்கு முன், உங்கள் தொடர்புகளை Import செய்ய வேண்டும் அல்லது சேமிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் உங்கள் எல்லா தொடர்புகளையும் எப்போதும் உங்கள் கூகுள் கணக்கில் சேமிப்பதே சிறந்த வழியாகும். எனவே ஒவ்வொரு முறையும் உள்நுழையும் போதும் உங்கள் கூகுள் கணக்கில் தொடர்பைச் சேமிப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள். இதன்மூலம், நீங்கள் உள்நுழைந்துள்ள எந்த ஸ்மார்ட்போனில் இருந்தும் தானாகவே அவற்றை அணுகலாம்.

Also read... ஜிமெயில் டிப்ஸ்: கம்பியூட்டர், ஸ்மார்ட்போன் வழியாக ரகசியமாக இமெயில் அனுப்புவது எப்படி?

ஐபோன்

ஐபோனில் இருந்து கான்டெக்ட் தரவுகளை மற்றொரு ஐபோனிற்கு மாற்ற இதே போன்று எளிய வழி உள்ளது. இதற்கு, எல்லா கான்டெக்ட் தரவுகளையும் ஆன்லைனில் ஐகிளவுடில் (iCloud) சேமிப்பதே சிறந்த வழி. இதைச் செய்வதற்கு, Settings/Apple ID/iCloud ஆகியவற்றில் உள்ள ஆப்ஷனில் கான்டெக்ட்களை தேர்ந்தெடுக்கவும். இந்த வழியில், உங்கள் புதிய ஸ்மார்ட்போனில் (அல்லது ஐபேட்அல்லது மேக்) தானாக அவற்றை எப்போதும் மீட்டெடுத்து கொள்ளலாம்.

இம்முறையில் கான்டெக்ட் தரவுகளுக்கு மட்டுமன்றி, உங்கள் ஐபோனில் உள்ள எல்லா தரவிற்கும் இது பொருந்தும். ஐக்ளவுட் இணைய தளத்திலிருந்து நேரடியாக உங்கள் தொடர்புகளை நீங்கள் நிர்வகிக்கலாம் (சேர்க்கலாம், மாற்றலாம் அல்லது நீக்கலாம்). இந்த மாற்றங்கள் உங்கள் ஐபோனில் உள்ள கான்டெக்ட்களுக்கு உடனடியாக மாறி விடும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Android, IPhone

அடுத்த செய்தி