Home /News /technology /

வாட்ஸ் அப்பில் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் அம்சத்தை இயக்குவதும், முடக்குவதும் எப்படி?

வாட்ஸ் அப்பில் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் அம்சத்தை இயக்குவதும், முடக்குவதும் எப்படி?

WhatsApp 2-Step verification | ஒருவேளை நீங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்காமல், உங்கள் பின்னை மறந்துவிட்டால், உங்கள் பின்னை மீட்டமைப்பதற்கு 7 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் அதன் டெஸ்க்டாப் ஆப் மற்றும் வெப் வெர்ஷன் ஆகிய இரண்டிலும் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் (two-step verification) திறனை கொண்டு வரும் முனைப்பின் கீழ் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் பரிசோதனை செய்யப்படும் அம்சங்களை பற்றி துல்லியமான தகவல்களை பகிரும் வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி, வாட்ஸ்அப் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் அம்சத்தை டெஸ்க்டாப் மற்றும் வெப் வெர்ஷன்களின் எதிர்கால அப்டேட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் ஆனது, வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷனில் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் அம்சத்தை இயக்கும் மற்றும் முடக்கும் விருப்பத்தை காண முடிகிறது.

இந்த 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் அம்சம் வாட்ஸ்அப் மொபைல் ஆப் வெர்ஷனில் ஏற்கனவே உள்ளது. ஒருவேளை நீங்கள் இன்னும் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை செய்யவில்லை என்றால், பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

Also Read : Gmail, YouTube மற்றும் GPay-யில் சிக்கலா? கூகுள் சப்போர்ட்டை தொடர்பு கொள்வது எப்படி.?

2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை இயக்குவது எப்படி.?

- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்கவும்
- பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் நுழையவும்.
- இப்போது அக்கவுண்ட் > 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் > எனேபிள் என்பதை கிளிக் செய்யவும்
- பிறகு உங்களுக்கு விருப்பமான ஆறு இலக்க 'பின்'னை (PIN) உள்ளிட்டு அதை உறுதிப்படுத்தவும்.
- பின் அணுகக்கூடிய ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்கவும்; ஒருவேளை மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் 'ஸ்கிப்' என்பதை கிளிக் செய்யவும்.

வாட்ஸ்அப் வெப்

இந்த இடத்தில் முடிந்தவரை மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்குமாறு பரிந்துரைக்கிறோம், ஏனெனில் இது 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை மீட்டமைக்க விரும்பும் போது உங்களுக்கு உதவும், இது உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டிற்கு மேலதிக பாதுகாப்பை உறுதி செய்யும்.

- இப்போது நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்யவும்.
- மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்து 'சேவ்' அல்லது 'டன்' என்பதை தேர்வு செய்யவும்

Also Read : வாட்ஸ்அப்பில் அட்டகாசமான 5 அப்டேட்கள்....

ஒருவேளை நீங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்காமல், உங்கள் பின்னை மறந்துவிட்டால், உங்கள் பின்னை மீட்டமைப்பதற்கு 7 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில் மின்னஞ்சல் முகவரியை அதன் உறுதித்தன்மையை வாட்ஸ்அப் சரிபார்த்து இருக்காது என்பதால், ரீசெட் செய்வதில் தாமதம் ஏற்படும். எனவே சரியான மின்னஞ்சல் முகவரியை வழங்குவதையும் உறுதி செய்து கொள்ளவும்.

Image : DenPhotos / Shutterstock.com

வாட்ஸ்அப் வழியாக எப்படி 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை இயக்க முடியுமோ, அதே போல 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை முடக்கவும் முடியும் மற்றும் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனுக்கான பின்-ஐ மாற்றவும் முடியும். அதெப்படி என்கிற எளிய வழிமுறைகளை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை டிசேபிள் செய்வது எப்படி.?

- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்கவும்
- பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் நுழையவும்.
- இப்போது அக்கவுண்ட் > 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் > டிசேபிள் என்பதை கிளிக் செய்யவும்

Also Read : உங்கள் மொபைலின் செயல்திறனை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை

2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் பின்-ஐ மாற்றுவது எப்படி?

- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்கவும்
- பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் நுழையவும்.
- இப்போது அக்கவுண்ட் > 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் > சேன்ஜ் பின் என்பதை கிளிக் செய்து விருப்பத்திற்கு ஏற்ப பின்-ஐ மாற்றிக் கொள்ளவும்.
Published by:Selvi M
First published:

Tags: Technology, WhatsApp

அடுத்த செய்தி