ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

EB பில் இப்படியும் கட்டலாமா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

EB பில் இப்படியும் கட்டலாமா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

EB பில் இப்படியும் கட்டலாமா..

EB பில் இப்படியும் கட்டலாமா..

EB Bill Easy Payment | முன்பு எல்லாம் மின் கட்டணம் செலுத்த வேண்டுமென்றால் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது பேடிஎம், போன்பே, கூகுள்பே போன்ற UPI பேமெண்ட் மூலம் செலுத்தி விடலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாம் எதையும் வீட்டிலிருந்தே செய்து விட முடியும். வங்கியில் பணம் செலுத்துவது, சொத்து வரி, வீட்டு வரி என அனைத்து பண பரிவர்தனைகளும் மொபைல் மூலமாக எளிதில் செய்து விடலாம். அதில் ஒன்று தான் மின் கட்டணம் செலுத்துவதும்.

  முன்பு எல்லாம் மின் கட்டணம் செலுத்த வேண்டுமென்றால் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது பேடிஎம், போன்பே, கூகுள்பே போன்ற UPI பேமெண்ட் மூலம் செலுத்தி விடலாம். ஆனால் இதுப்போன்ற தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் தெரியாதவர்கள் மின்சார அலுவலகத்திற்கு சென்றே பணம் செலுத்தி வந்தனர்.

  அவர்களும் வரிசையில் நிற்காமல் மின்சார அலுவலகத்திற்கு செல்லாமல் EB பில் கட்ட முடியும். அது தொடர்பான வீடியோவை தான் TANGEDCO (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

  அந்த வீடியோவில் ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி? TANGEDCO ஆப்பில் பணம் செலுத்துவது எப்படி? மற்றும் UPI மூலம் பணம் செலுத்துவது எப்படி என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

  ' isDesktop="true" id="826850" youtubeid="97ABukMVQRI" category="technology">

  மேலும் இந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லா எளிய மக்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ், பொதுத்துறை வங்கிகள் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களில் தங்களது மின்சார கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். இதனால் இதுவரை மின்சார அலுவலகத்திற்கு சென்று வரிசையில் காத்திருந்தவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி எளிதாக கட்டணம் செலுத்தலாம்.

  Also Read : உஷார்.! உங்க அக்கவுண்ட் பணம் இப்படியும் திருடப்படும்.. பாதுகாப்பா இருக்க சில முக்கிய டிப்ஸ்!

  ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் முறை

  முதலில் நீங்கள் எந்த மண்டலம் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்
  நம்மோட மின் இணைப்பு எண்ணை டைப் செய்ய வேண்டும்
  சில விதிமுறைகளுக்கு உட்பட்டு யூசர் நேமும் பாஸ் வேர்டும் கொடுக்க வேண்டும்
  நம்மோட செல்போன் நம்பர், இமெயில் ஐடி, மின் இணைப்பைப் பயன்படுத்துபவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
  ஒவ்வொரு முறையும் கரண்ட் ரீடிங் முடிஞ்ச பிறகு, செலவான யூனிட் அளவு, மின்கட்டணம், செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய இமெயில் நமக்கு வரும்.
  அதில் வங்கி கணக்குடன் இணைத்து மின்சார கட்டணம் செலலுத்தலாம். மின் கட்டணம் செலுத்திய ரிசிப்ட் பெறுவதற்கான வசதியும் இணைய தளத்தில் உள்ளது.
  ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி அடுத்த மாத மின்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தவும் முடியும். ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின் இணைப்புகளுக்குக் கட்டணம் செலுத்தலாம்.
  Published by:Vijay R
  First published:

  Tags: EB Bill, TANGEDCO