முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட டிக் டாக் செயலியை எப்படி டவுன்லோடு செய்வது? கூகுளில் தேடும் இந்தியர்கள்!

ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட டிக் டாக் செயலியை எப்படி டவுன்லோடு செய்வது? கூகுளில் தேடும் இந்தியர்கள்!

டிக் டாக் செயலி

டிக் டாக் செயலி

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலிகள் தளங்களிலிருந்து டிக் டாக் செயலியை நீக்குமாறு கூறியது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் டிக் டாக் செயலிக்குச் செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் டிக் டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?  என்று கூகுளில் தேடுவது அதிகரித்துள்ளது என்றும் கூகுள் டிரெண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலி இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாகவும், பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது.

எனவே டிக் டாக் செயலியை இந்தியாவிலிருந்து தடை செய்ய வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் ஏப்ரல் 3-ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

மதுரை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை திங்கட்கிழமை (15/16/2019) விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்தது.

இதனை தொடர்ந்து இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலிகள் தளங்களிலிருந்து டிக் டாக் செயலியை நீக்குமாறு கூறியது.

இதனை அடுத்து, இந்திய கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் டிக் டாக் செயலி செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டது. ஆனால், இந்தத் தடைக்குப் பிறகாக டிக் டாக் செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது என்று கூகுளில் தேடுவது அதிகரித்துள்ளது.

டிக் டாக்

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கான, டெல்லி மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் டிக் டாக் செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது என்று கூகுளில் தேடுவது அதிகரித்துள்ளது என்று கூகுள் டிரெண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க:


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Tik Tok