உலகளவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் பிளாட்ஃபார்ம் வாட்ஸ்அப். இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கின் ஸ்டேட்டஸ் அம்சம், வாட்ஸ்அப்பிலும் சேர்க்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, யூசர்கள் GIF, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்டேட்டசில் பகிரலாம். எதிர்பார்த்த அளவுக்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மிகவும் பிரபலமாக ஆகவில்லை என்றாலும், பலரும் தினசரி இந்த அம்சத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் புகைப்படம் அல்லது வீடியோவை பகிர்வது மிகவும் எளிது. நீங்கள் முதலில் செயலியின் ஸ்டேட்டஸ் பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் இருக்கும் கேமரா ஐகானைக் கிளிக் செய்து, புகைப்படத்தை அல்லது வீடியோவை படம் பிடித்து, அப்லோட் செய்யலாம். அல்லது, உங்கள் கேலரியில் இருந்து புகைப்படம் அல்லது வீடியோவை தேர்வு செய்து, அப்லோட் செய்யலாம். அப்லோட் ஆனவுடன், ‘send’ பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஸ்டேட்டஸ் பதிவு செய்யப்படும்.
நீங்கள் பதிவு செய்யும் ஸ்டேட்டஸ் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போல, உங்கள் இணைப்பில் இருக்கும் பலரும் பதிவு செய்வார்கள். இந்நிலையில், மற்றவர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ஸில் நீங்கள் பார்த்த, விரும்பிய ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோட் செய்ய விரும்பினால், அதற்கு என்ன செய்வது?
Must Read | Anjali Pichai: ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால்… கூகுள் சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் கதை!
ஸ்டேட்டஸ் புகைப்படங்களை மிகவும் எளிதாக, ஸ்க்ரீன்ஷாட் எடுத்து விடலாம். வீடியோவுக்கு என்ன செய்வது?
உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. உங்களுக்கு விருப்பமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவைப் பகிர்ந்த நபரிடமே, தனிப்பட்ட சாட்டில் வீடியோ அனுப்புமாறு கேட்கலாம். இல்லையெனில் நீங்களே டவுன்லோட் செய்யலாம். வேறு ஒருவர் வைத்திருக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோட் செய்யும் ப்ராசஸ் மிகவும் சுலபமானது. நீங்கள் செய்ய வேண்டியவை பின்வருமாறு.
ஸ்டெப் 1: உங்கள் ஆண்டிராய்டு ஸ்மார்ட்ஃபோனின் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து, Google Files-ஐ டவுன்லோட் செய்யவும்
ஸ்டெப் 2: டவுன்லோட் செய்த பிறகு, செயலின் இடது மேற்புறத்தில் இருக்கும் மெனு ஐக்கானைக் கிளிக் செய்யவும்
ஸ்டெப் 3: செட்டிங்க்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
ஸ்டெப் 4: மறைந்திருக்கும் பைல்களை காட்டவும் ‘show hidden files’ என்ற ஆப்ஷனை ஆன் செய்யவும்
ஸ்டெப் 5: உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஃபைல் மேனேஜர் (File Manager) பகுதிக்கு செல்லவும்
ஸ்டெப் 6: இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தேர்வு செய்து, பின்வரும் ஆர்டரில் கிளிக் செய்யவும் WhatsApp > Media > Statuses
ஸ்டெப் 7: மேற்கூறிய ஃபோல்டரில், வாட்ஸ்அப்பில் நீங்கள் பார்த்த ஸ்டேட்டஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அதிலே, நீங்கள் விரும்பிய வீடியோவைப் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஸ்டெப் 8: உங்களுக்கு விருப்பமான வீடியோவைத் தேர்வு செய்து, நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பினால், அந்த வீடியோவை லாங் பிரஸ் (long press) செய்து, உங்களுக்கு வசதியான ஃபோல்டரில் சேமிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Status, Technology, WhatsApp