• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இன்ஸ்டாகிராமில் இருந்து போட்டோஸ், வீடியோக்களை எளிதாக டவுன்லோடு செய்யலாம்!

இன்ஸ்டாகிராமில் இருந்து போட்டோஸ், வீடியோக்களை எளிதாக டவுன்லோடு செய்யலாம்!

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

டவுன்லோடு செய்வதற்கு அதன் ஓனரின் அனுமதியைப் பெற்று, பொது கணக்குகளிலிருந்து மட்டுமே பதிவுகளை டவுன்லோடு செய்வதை உறுதிப்படுத்தவும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்த கொரோனா பாதிப்பு பலருக்கும் பலவித அனுபவங்களை கொடுத்துள்ளது. சிலர் கொரோனா பாதிப்பில் சிக்கிக்கொள்ளாமல் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக சமூக ஊடகங்களை மாற்றியும், சிலர் தங்களது மனக்கவலைகளை இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி குறைத்து வருகின்றனர். அதில் சிலர் பிரபலமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் இடுகைகளை டவுன்லோட் செய்ய விரும்பினால், நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதிலும் உள்ள ஆப்ஸ்களில் மிகவும் பிரபலமான ஒன்று. இது வீடியோக்கள், புகைப்படங்கள், மீம்ஸ்கள் மற்றும் செல்ப் பிராண்டிங் ஆகியவற்றை பகிர்வதற்கான தளமாக மாறியுள்ளது.

நீங்கள் ஒரு இன்ஸ்டாகிராம் பயனராக இருந்தால், வீடியோக்கள் அல்லது எவ்வாறு உங்கள் நண்பர்களின் பதிவுகளை வுன்லோடு செய்யவது எப்படி? என்பதை அறிய விரும்பினால், நீங்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம் போட்டோக்கள், வீடியோக்கள் அல்லது இடுகைகளை டவுன்லோடு செய்வதற்கு முன் நீங்கள் இரண்டு விஷயங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

- டவுன்லோடு செய்வதற்கு அதன் ஓனரின் அனுமதியைப் பெற்று, பொது கணக்குகளிலிருந்து மட்டுமே பதிவுகளை டவுன்லோடு செய்வதை உறுதிப்படுத்தவும்.

- இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் கணக்குகளை Publicல் வைக்க அனுமதிக்கிறதா? இல்லையா? என்பதை காண வேண்டும். மேலும் இன்ஸ்டாகிராமில் உங்கள் கணக்கை நீங்கள் பிரைவேட் கணக்காக மாற்ற வேண்டும். இப்போது நீங்கள் இன்ஸ்டாகிராம் இடுகைகளை டவுன்லோடு செய்ய விரும்பினால், நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் அதை காண்போம்.,

படி 1 : உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் இன்ஸ்டாகிராமை திறந்து, டவுன்லோடு செய்ய விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவை தேர்வுசெய்யவும். இப்போது பதிவின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் ஐகானைத் தட்டவும்> Copy லிங்கை தட்டவும்.

படி 2 : அடுத்து உங்கள் போன் அல்லது கணினியில் ஏதேனும் ஒரு பிரௌசரை திறந்து www.downloadgram.comஐ திறக்கவும்.

படி 3 : வலைத்தளத்தில், Copy செய்த லிங்கை Search Barல் பேஸ்ட் செய்வும், பிறகு டவுன்லோடை அழுத்தவும்.

படி 4 : டவுன்லோடு படம் / வீடியோ பொத்தான், இப்போது டவுன்லோடு பொத்தானுக்கு கீழே தோன்றும். உங்கள் போன் அல்லது கணினியில் பைல்ஸில் அதை சேமிக்க அழுத்தவும்.

படி 5 : மாற்றாக, www.instadownloader.co அல்லது www.gramsave.com ஆகிய இரண்டு வலைத்தளங்களை பார்வையிடலாம்.

Also read... ஆண்ட்ராய்டு போனில் விருப்பம் இல்லாத நம்பரை பிளாக் செய்ய வேண்டுமா?.. இதோ எளிய வழிகள்!



இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை டவுன்லோடு செய்தவர்களுக்கு...

படி 1 : உங்கள் போன் அல்லது கணினியில் www.storiesig.com திறந்து, நீங்கள் ஸ்டோரியை டவுன்லோடு செய்ய விரும்பும் இடத்திலிருந்து Profileன் Instagram Usernameஐ Enter செய்யவும்.

படி 2 : Search Bar-ன் கீழே செயலில் உள்ள ஸ்டோரியின் பட்டியலை இப்போது காண்பீர்கள். சேமித்த பழைய ஸ்டோரியை டவுன்லோடு
செய்ய விரும்பினால் கீழே Scroll செய்யலாம்.

படி 3 : இப்போது, Stories > Scroll down என்பதைக் கிளிக் செய்து, டவுன்லோடு செய்ய நீங்கள் விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்> டவுன்லோடு செய்யவும்.

படி 4 : உங்கள் டவுன்லோடு முடிந்ததும், உங்கள் பைல் தானாகவே சாதனத்தில் சேவ் ஆகிவிடும்.

படி 5 : இந்த எளிய வழிமுறைகளை பயன்படுத்தி, இப்போது இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், ஸ்டோரிக்கள் மற்றும் புகைப்படங்களை எளிமையாக டவுன்லோடு செய்யலாம்.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதில் நல்லவைகளை மட்டும் பிறருக்கு பரப்பி நீங்களும் நன்மை அடைவதே அனைவரின் விருப்பம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: