ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இனிமே ஈசியா டவுன்லோடு செய்யலாம்..!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இனிமே ஈசியா டவுன்லோடு செய்யலாம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பல கார்ப்பரேட் நிறுவனங்களும், வணிக நோக்கங்களோடு செயல்படும் நிறுவனங்களும் தங்களின் புதிய ப்ராடக்டுகளை மக்களிடையே ப்ரமோட் செய்யவும், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்பு வெகு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இன்ஸ்டாகிராம் செயலி தற்போது மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல பிரபலங்களும் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராமில் தற்போது மிகவும் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் தங்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் தங்களைப் பற்றிய மற்ற தகவல்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அதில் தற்போது முன்னிலை வகித்து வருவது ரீல்ஸ் எனப்படும் வசதியாகும். முன்னர் இருந்த டிக் டாக் எனப்படும் செயலியை அடிப்படையாக வைத்து இந்த ரீல்ஸ் எனப்படும் வசதி உருவாக்கப்பட்டது. 90 நொடிகள் வரை இருக்கும் இந்த வீடியோ தற்போது அதிக அளவு மக்களை சென்றடைகிறது.

Read More : UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா.. கவலை வேண்டாம்.. இதை செய்தால் போதும்

மேலும் பல கார்ப்பரேட் நிறுவனங்களும், வணிக நோக்கங்களோடு செயல்படும் நிறுவனங்களும் தங்களின் புதிய ப்ராடக்டுகளை மக்களிடையே ப்ரமோட் செய்யவும், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை விட இந்த ரிலீஸ் மூலம் அதிக பார்வைகள் கிடைப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கு முன் வரை அவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களையும் ரிலீஸ்களையும் டவுன்லோடு செய்யும் வசதியானது இன்ஸ்டாகிராமில் கிடையாது. ஆனால் தற்போது இன்ஸ்டாகிராம் செயலியானது உங்களுக்கு பிடித்த ரீல்சை டவுன்லோடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் அதற்கு நீங்கள் மூன்றாம் தரப்பு செயலி ஒன்றை டவுன்லோடு செய்து அதன் மூலம் மட்டுமே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

' isDesktop="true" id="855679" youtubeid="edLT6vrzV4k" category="technology">

இன்ஸ்டாகிராம் ரீல் இசை டவுன்லோடு செய்வதற்கான வழிமுறைகள்:

இன்ஸ்டாகிராமிற்கு சென்று நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் ரீல்ஸிற்கு செல்ல வேண்டும்.
பின்பு மூன்று புள்ளிகள் உடைய ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் லிங்க் என்ற பட்டனை தேர்வு செய்வதன் மூலம் அந்த ரீல்ஸினுடைய URL ஆனது காப்பி (copy) செய்யப்பட்டு விடும்.பிறகு பிரவுசருக்கு சென்றுcom என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு ஏற்கனவே காப்பி செய்த URL-ஐ பேஸ்ட் செய்து, பிறகு சர்ச் என்ற பட்டனை தேர்வு செய்ய வேண்டும்.தற்போது நீங்கள் தேர்ந்தெடுத்த ரிலீஸ்-ஐ டவுன்லோடு செய்ய இயலும்.
ஆனால் பப்ளிக் அக்கவுண்டுகளால் அப்லோடு செய்யப்பட்ட ரீல்ஸ் மட்டுமே உங்களால் டவுன்லோடு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு வேலை பிரவுசருக்கு பதிலாக ஏதேனும் செயலி மூலம் டவுன்லோடு செய்ய விரும்பினால் அதற்கான செயலிகள் பலவும் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அதில் உங்களுக்கு விருப்பமான செயலியை இன்ஸ்டால் செய்து நீங்கள் ரீல்ஸ் மட்டுமின்றி உங்களுக்கு பிடித்த இன்ஸ்டாகிராம் போஸ்டுகளை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
First published:

Tags: Instagram, Technology, Trending, Viral