Home /News /technology /

உங்கள் இ-ஆதாரை டவுன்லோட் செய்ய வேண்டுமா? படிப்படியான வழிமுறை இதோ

உங்கள் இ-ஆதாரை டவுன்லோட் செய்ய வேண்டுமா? படிப்படியான வழிமுறை இதோ

ஆதார்

ஆதார்

How to Download E Aadhar | நம்முடைய ஒவ்வொரு ஆதார் கார்டிலும் ஆதார் எண் அல்லது யுஐடி (UID) எனப்படும் 12 டிஜிட் பிரத்யேக எண் உள்ளது, தேவைப்படும் போது உங்கள் ஸ்மார்ட் போனில் e-Aadhaar-ஐ டவுன்லோட் செய்ய விரும்பினால் இந்த 12 டிஜிட் நம்பரை  நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்.

மேலும் படிக்கவும் ...
ஆதார் கார்டு இந்தியாவில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அடையாள சான்று (identity proof) ஆகி விட்டது. நாட்டில் பரவலாக ஏற்று கொள்ளப்பட்டு உள்ள அடையாள சான்றுகளில் தற்போது ஆதார் முக்கியமான ஒன்றாகும். ஒரு புதிய பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய, புதிய சிம் கார்டை வாங்க அல்லது கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பரிசோதனைகளை செய்ய என இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகின்றனர்.

நம்முடைய ஒவ்வொரு ஆதார் கார்டிலும் ஆதார் எண் அல்லது யுஐடி (UID) எனப்படும் 12 டிஜிட் பிரத்யேக எண் உள்ளது, தேவைப்படும் போது உங்கள் ஸ்மார்ட் போனில் e-Aadhaar-ஐ டவுன்லோட் செய்ய விரும்பினால் இந்த 12 டிஜிட் நம்பரை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். அதே போல e-Aadhaar-ஐ டவுன்லோட் செய்வதற்கான மற்றொரு வழி, என்ரோல்மென்ட் ப்ராசஸின் போது வழங்கப்பட்ட 28 டிஜிட் குறியீடான என்ரோல்மென்ட் ஐடி (Enrolment ID)-யை பயன்படுத்து ஆகும். ஆனால் UID மற்றும் Enrolment ID ஆகிய இந்த இரண்டையும் நினைவில் வைத்து கொள்ளாமல் உங்கள் e-Aadhaar-ஐ டவுன்லோட் செய்ய நீங்கள் விரும்பினால் என்ன செய்வது.!!

அதை செய்வதற்கும் ஒரு வழி இருக்கிறது. e-Aadhaar டவுன்லோட் செய்ய உங்களிடம் UID அல்லது EID இருக்க வேண்டும். இந்த செய்தியில் உங்கள் தொலைந்த அல்லது நீங்கள் மறந்துவிட்ட Enrolment ID அல்லது ஆதார் நம்பரை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை பார்க்கலாம். பின் e-Aadhaar-ஐ டவுன்லோட் செய்ய அவற்றை பயன்படுத்தலாம்.

இதற்கான செயல்முறையை துவக்குவதற்கு முன் உங்கள் கைவசம் இருக்க வேண்டியவை:

* ஆதார் கார்டில் ஏற்கனவே நீங்கள் கொடுத்துள்ள படி உங்களது சரியான முழுப்பெயர்

* OTP, UID மற்றும் EID ஆகியவற்றை பெற ஆதார் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர்

ஆதார் நம்பர் அல்லது என்ரோல்மென்ட் நம்பரை கண்டறிவதற்கான படிகள்:

* உங்கள் ஸ்மார்ட் போன் அல்லது கணினியில் https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூரவ வெப்சைட்டை ஓபன் செய்யவும்

* கீழே ஸ்க்ரோல் செய்து 'Get Aadhaar' ஆப்ஷனை கிளிக் செய்யவும்

* இப்போது Retrieve EID/UID link என்பதை கிளிக் செய்யவும்

* அடுத்த பேஜில் ஆதார் நம்பர் அல்லது என்ரோல்மென்ட் ஐடி என்பதை தேர்ந்தெடுக்கவும்

* ஆதார் கார்டின்படி உங்களது முழு பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்சாவை என்டர் செய்யவும்

* பின் உங்கள் நம்பருக்கு வரும் otp-ஐ சப்மிட் செய்யவும்

இதற்கு பிறகு, ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் உங்கள் ஆதார் நம்பர் அல்லது என்ரோல்மென்ட் ஐடி-யை பெறுவீர்கள். இப்போது, இ-ஆதாரை டவுன்லோட் செய்ய ஆதார் நம்பர் அல்லது என்ரோல்மென்ட் ஐடி-யை நீங்கள் பயன்படுத்தலாம்.

உங்கள் e-Aadhaar டவுன்லோட் செய்வது எப்படி?

* UIDAI வெப்சைட்டின் ஹோம்பேஜிற்கு சென்று Download Aadhaar link-ஐ கிளிக் செய்யவும்

* Download Aadhaar ஆப்ஷனை கிளிக் செய்யவும்

* மீட்டெடுக்கப்பட்ட ஆதார் நம்பர் உங்களிடம் இருந்தால் Aadhaar number ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும், இல்லையெனில் என்ரோல்மென்ட் ஐடி-யை தேர்ந்தெடுக்கவும்

* இப்போது கேப்ட்சாவை ஃபில் செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்

* இ-ஆதாரை டவுன்லோட் செய்ய உங்கள் நம்பருக்கு வந்துள்ள OTP-ஐ என்டர் செய்யவும்

Also read... ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளேவிலிருந்து சத்தமின்றி இந்த 2 ஆப்ஸ்களை நீக்கிய இன்ஸ்டாகிராம்!

அதே போல டவுன்லோட் செய்யப்பட்ட இ-ஆதார் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும். பாஸ்வேர்ட் என்பது உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களை கேப்பிட்டல் லெட்டர்களிலும், பிறந்த ஆண்டை YYYY ஃபார்மெட்டை கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் பெயர் Akshay மற்றும் 1981-ல் பிறந்திருந்தால், உங்கள் இ-ஆதாரின் பாஸ்வேர்ட் AKSH1981 ஆக இருக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Aadhar

அடுத்த செய்தி