COVID vaccine certificate: கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் பெறுவது எப்படி?

கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி சான்றிதழ் என்பது ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக அரசு கொடுக்கும் சான்றிதழ் ஆகும்.

  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டு அலைகள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இன்னும் ஒரு சில வாரங்களில் 3வது அலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் 3வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய பிரதமர் மோடியும், 3வது அலையில் இருந்து தற்காத்துக்கொள்ள 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி மட்டுமே கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழியாக இருப்பதால், தவறான தகவல்களை நம்பி மக்கள் அதனை தவிர்க்க வேண்டாம் என நிபுணர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், தடுப்பூசி தட்டுப்பாடுகளை போக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனை சரியாக செய்தால் மட்டுமே 3வது அலை பாதிப்பில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற முடியும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது இந்தியாவில் மூன்று விதமான தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிட்ஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஒருமுறை நீங்கள் தடுப்பூசி செலுத்துக்கொண்டால், மத்திய அரசு சார்பில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி சான்றிதழ் என்றால் என்ன?

தடுப்பூசி சான்றிதழ் என்பது ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக அரசு கொடுக்கும் சான்றிதழ் ஆகும். இதில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவரின் பெயர், ஆதார் எண், தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேதி, தடுப்பூசியின் பெயர், அடுத்த தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டிய தேதி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட இடம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

தடுப்பூசி சான்றிதழ்களை பெறுவது எப்படி?

நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை கோவின் (CoWIN), உமாங் (UMANG) டிஜி லாக்கர் (Digi-locker) ஆரோக்கிய சேது (Aarogya Setu) ஆகிய செயலிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CoWIN தளத்தில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

* https://www.cowin.gov.in/ என்ற இணையதள பக்கத்துக்கு செல்ல வேண்டும்
*In/Register ஐகானை கிளிக் செய்ய வேண்டும்
*பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும்
*உங்கள் மொபைலுக்கு OTP எண் வந்திருக்கும்
* நீங்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தால், உங்கள் பெயருக்கு கீழே சான்றிதழ் இருக்கும்
* டவுன்லோடு பட்டனை கிளிக் செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Aarogya Setu செயலியில் பதவிறக்கம் செய்வது எப்படி?

* உங்கள் மொபைல் எண்ணில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
* பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து Sign In செய்ய வேண்டும்
* CoWin ஐகான் மீது கிளிக் செய்யுங்கள்
* அதில் இருக்கும் தடுப்பூசி சான்றிதழ் (Vaccination Certificate) ஐகானை கிளிக் செய்யுங்கள்
* உங்களிடம் இருக்கும் 13 இலக்க பயனாளர் எண்ணை பதிவு செய்ய வேண்டும்
* இப்போது டவுன்லோடு ஐகானை கிளிக் செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Also read... Google Doodle: கோவிட்-19 தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தும் புதிய அனிமேஷன் டூடுலை அறிமுகம் செய்த கூகுள்!

Digilocker app செயலியில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

* உங்கள் மொபைலில் டிஜி லாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
* உங்கள் பெயர், மொபைல் எண், ஆதார் தகவல்களை பதிவிட வேண்டும்
* பின்னர் ஹெல்த் பிரிவை(Health section) தேர்தெடுக்க வேண்டும்
* அதில் Health and Family Welfare ஐகானை தேர்தெடுங்கள்
* உங்களிடம் இருக்கும் 13 இலக்க பயனாளர் எண்ணை பதிவிடுங்கள்
* தற்போது உங்களுடைய தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Umang app -ல் பதிவிறக்கம் செய்வது எப்படி?

Umang app -ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்
CoWIN ஐகானில் இருக்கும் What's New section -ஐ தேர்தெடுங்கள்
Download Vaccination Certificate ஐகானை கிளிக் செய்ய வேண்டும்
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிடவும்
உங்களுக்கு கிடைக்கும் OTP -ஐ பதிவிடுங்கள்
தற்போது உங்களுடைய தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: