Home /News /technology /

கணினி அல்லது லேப்டாப் பிரவுசரில் வெப்-கேமராவை செயலிழக்கச் செய்வது எப்படி?

கணினி அல்லது லேப்டாப் பிரவுசரில் வெப்-கேமராவை செயலிழக்கச் செய்வது எப்படி?

 வெப்-கேமரா

வெப்-கேமரா

உங்கள் தகவல்களை திருடுவது உள்ளிட்ட மோசடி வேலைகளும் அதிகரித்துள்ளன. இதைத் தவிர்க்க, எப்படி வெப் கேமராவை எளிதாக செயலிழக்கச் செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தொழில்நுட்ப உலகில் தனிப்பட்ட முறையில் குடும்பம் மற்றும் நண்பர்களோடும், வேலை அல்லது வணிக காரணங்களுக்காகவும் மொபைல் மற்றும் லேப்டாப்பில் வெப்-கேமராவைப் பயன்படுத்துவது வழக்கம். இணையம் மற்றும் தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறியுள்ளதோ அதே அளவுக்கு இணையத் திருட்டு, ஹேக்கிங், வெப் கேமரா வழியாக உங்களை கண்காணிப்பது, உங்கள் தகவல்களை திருடுவது உள்ளிட்ட மோசடி வேலைகளும் அதிகரித்துள்ளன. இதைத் தவிர்க்க, எப்படி வெப் கேமராவை எளிதாக செயலிழக்கச் செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

கணினி அல்லது லேப்டாப் பிரவுசரில் வெப்-கேமராவை செயலிழக்கச் செய்வது எப்படி

லேப்டாப்பில் பிரவுஸ் செய்யும் போது, உங்களுக்குத் தெரியாமல்இணையத்தளங்கள் உங்கள் கேமராவை அக்சஸ் செய்கிறதா என்ற சந்தேகம் இருக்கும். நீங்கள் லேப்டாப் அல்லது கணினியில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய, பின்வரும் முறைகளை பின்பற்றி, வெப்-கேமராவை disable செய்யலாம்.

குரோம் பிரவுசர் பயன்படுத்தும் போது, பிரவுசரில் உள்ள செட்டிங்ஸ் தேர்வில், பிரைவசி மற்றும் செக்யூரிட்டி தேர்ந்தெடுத்து மற்றும் சைட் செட்டிங்ஸ் (Settings, Privacy and Security, Site Settings) என்பதைக் கிளிக் செய்யுங்கள். செட்டிங்ஸ் திரையில் ஸ்க்ரோல் செய்து, கேமரா என்பதைக் கிளிக் செய்து, டீஃபால்ட் தேர்வாக 'Don't allow sites to use your camera' (இணையத்தளங்களை கேமரா பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்) என்று அமைக்கவும்.

நீங்கள் ஏற்கனவே ஒரு இணையத்தளத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது, உங்கள் வெப்கேமராவை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அட்ரஸ் பாரில் இடது பக்கத்தில் இருக்கும் தளத்தின் padlock ஐக்கானை கிளிக் செய்து, 'Camera: not allowed' என்ற ஆப்ஷனை மாற்றி, ஆன் செய்யுங்கள். ஆனால், டீஃபால்ட் தேர்வாக எப்போதுமே உங்கள் பிரவுசரில் கேமரா அக்சஸ் அனுமதி அளிக்க வேண்டாம்.

https://cdn.mos.cms.futurecdn.net/2mVH3efeYS8fbu9aF5bhCA-970-80.jpg.webp

கம்ப்யூட்டர் செயலிகளில் கேமராவை செயலிழக்கச் செய்வது எப்படி

பிரவுசரில் கேமரா அக்சஸ் கட்டுப்படுத்துவது போலவே, உங்கள் கணினி / லேப்டால் செயலிகளிலும் கேமரா அக்சஸ் அனுமதிக்காமல் இருப்பது பாதுகாப்பை உறுதிபடுத்தும். டீஃபால்ட் கேமரா அனுமதியை ஆஃப் என்று அமைக்கவும். ஒவ்வொரு புரோகிராம் அல்லது செயலிக்கும் நீங்கள் அனுமதி அளித்தால் மட்டுமே கேமராவை அக்சஸ் செய்ய முடியும் என்று settings மாற்றி விடுங்கள்.

விண்டோஸ் இல், செட்டிங்சை லான்ச் செய்ய, Win+I பிரஸ் செய்து, பிரைவசி என்ற லிஸ்ட்டில், கேமராவைத் தேர்வு செய்யுங்கள்.

அந்த பட்டியளை ஸ்க்ரோல் செய்யும் போது, ஒரு குறிப்பிட்ட ஆப்ஸ்களுக்கு கேமரா அனுமதி மறுக்கும் சுவிட்சுகள் இருக்கும். கேமராவுக்கு ஆப்ஸ் அக்சஸ் செய்ய அனுமதி கொடுக்கவும் என்ற தேர்வை ஆஃப் செய்தால், உங்கள் கணின வெப்கேமராவை எந்த செயலிகளும் அக்சஸ் செய்ய முடியாது.

ALSO READ |  புதிய வாகனங்களுக்கான பாரத் சீரிஸ் பதிவு அடையாளம் அறிமுகம் - யார் பயன் பெறலாம்?

நீங்கள் முழுவதுமாக வெப்கேமராவை டிஸ்-ஏபில் செய்ய வேண்டும் என்றால், விண்டோஸ் இல், Start என்பதைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜர் என்று டைப் செய்த பின், Enter தட்டவும். உங்கள் திரையில் தோன்றும் பட்டியலில் கேமரா என்பதைத் தேர்வு செய்து, விரிவாக்கவ ரைட் கிளிக் செய்து disable என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் உங்கள் கேமரா அக்சஸ் முழுவதுமாக அனுமதி மறுக்கப்படும்.

மொபைல் சாதனங்களில் கேமரா அக்சஸ் ஆக்டிவேட் செய்வது அல்லது அனுமதி மறுப்பது சுலபம். தனித்தனியாக ஒவ்வொரு செயலிக்கோ அல்லது மொத்தமாக மொபைல் செட்டிங்சிலோ கேமரா அனுமதியை மறுக்கலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Computer

அடுத்த செய்தி