Home /News /technology /

Oneplus மொபைல் வைத்திருப்பவரா நீங்கள்? இந்த ஆப்சன் உங்களுக்கு தான்

Oneplus மொபைல் வைத்திருப்பவரா நீங்கள்? இந்த ஆப்சன் உங்களுக்கு தான்

ஒன்பிளஸ் மொபைல் பயன்படுத்தும் பலருக்கு ஒரு விஷயம் மட்டும் பல நாட்களாக பிடிக்காத ஒன்றாக இருந்து வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    எப்படி ஐபோனுக்கு தனித்துவமான பிரியர்கள் உள்ளார்களோ, அதே போன்று ஒன் பிளஸ் மொபைல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. சிறந்த செயல்திறன், நீடித்து உழைக்கும் தன்மை, அட்டகாசமான கேமிரா வசதி, சூப்பர் பேட்டரி பேக் அப் போன்ற சிறப்பம்சங்களை கொண்டிருப்பதால் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை அதிக பேர் வாங்க விரும்புகின்றனர். ஆனால் தற்போது ஒன்பிளஸ் மொபைல் பயன்படுத்தும் பலருக்கு ஒரு விஷயம் மட்டும் பல நாட்களாக பிடிக்காத ஒன்றாக இருந்து வருகிறது.

    ஒன்பிளஸ் மொபைலில் யாருக்காவது கால் செய்யும்போது "இந்த அழைப்பு ரெக்கார்ட் செய்யப்படுகிறது" (“This call is now being recorded”) என்கிற எச்சரிக்கையை ஆங்கிலத்தில் கூறும். இது பல ஒன்பிளஸ் யூசர்களுக்கு எரிச்சலை தரும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. ஒன்பிளஸ் 8T, ஒன்பிளஸ் நார்டு, ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9R மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ போன்ற எல்லா ஒன்பிளஸ் மொபைல்களிலும் கூகுள் டயலர் வசதி உண்டு. இதுதான் கால் செய்யும்போது 'இந்த அழைப்பு ரெக்கார்ட் செய்யப்படுகிறது' என்கிற எச்சரிக்கை மெசேஜை நமக்கு அளிக்கிறது. '

    இந்த வசதியை நிறுத்தி வைக்க, ஒன்பிளஸ் டயலர் பயன்படுத்தினால் போதும். மேலும் உங்களுக்கு தேவையான நேரத்தில் மட்டும் ஒன்பிளஸ் டயலர் மூலம் உங்கள் கால்களை ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். இதற்கு கூகுள் டயலரை டிஸ்ஏபில் (disable) செய்தாக வேண்டும். கீழுள்ள வழிகளின் மூலம் இதை உங்கள் மொபைலில் செய்யலாம்.

    Also Read : மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் சீரிஸின் உற்பத்தியை நிறுத்தும் சாம்சங்! காரணம் என்ன?

    ஒன்பிளஸ் டயலர் இன்ஸ்டால் செய்க.,
    * முதலில் ஒன்பிளஸ் டயலர் ஆப்பை டவுன்லோடு செய்து, உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
    * இன்ஸ்டால் செய்யும்போது 'Apps from unknown sources' என்கிற அலெர்ட் வரக்கூடும். இப்படி வரும்போது இதற்கான அனுமதிகளை வழங்குங்கள்.

    டிஃபால்ட் டயலர்.,

    அடுத்து ஒன்பிளஸ் ஆப்பை திறந்து கொள்ளவும். இதை டிஃபால்ட் ஆப் ஆக தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
    * கீழே வலது பக்கத்தில், 'Default Phone App' என்பதை கிளிக் செய்யவும். இப்போது Set as Default என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
    * இந்த வழிமுறைக்கு பதிலாக மொபைலில் போன் செட்டிங்ஸ்க்குள் சென்று ஆப்ஸ் மற்றும் நோட்டிபிகேஷன்ஸ் என்பதை கிளிக் செய்யவும்.
    * இதில் Default Apps என்பதை தேர்வு செய்யுங்கள். பிறகு போன் ஆப் ஸ்கிரீனுக்கு சென்று, ஒன்பிளஸ் போன் என்பதை செலக்ட் செய்யவும்.

    Also Read : ரூ.10,000-க்கும் கீழ் விற்பனை செய்யப்படும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்!

    ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டிங்.,

    * உங்கள் மொபைலில் ஒன்பிளஸ் டயலரை திறந்து, அதில் வலது பக்கத்தில் 3 புள்ளிகளை கொண்ட மெனுவை கிளிக் செய்து செட்டிங்க்ஸை செலக்ட் செய்ய வேண்டும்.
    *பிறகு அங்குள்ள Call Recording என்பதை ஆக்டிவேட் செய்வதற்கு அதை டேப் செய்யவும்.
    * நீங்கள் உங்கள் அழைப்புகளை ஆட்டோ ரெக்கார்டிங் ஆப்ஷன் செலக்ட் செய்து ஆட்டோமேட்டிக்காக ரெக்கார்ட் செய்யலாம்.

    அவ்வளவு தான், இனி உங்களுக்கு கால் ரெக்கார்டிங் எச்சரிக்கை மெசேஜ் வராது. மேலும் உங்களுக்கு வேண்டுமானால் கூகுள் டயலரை நீங்கள் டிஸ்ஏபில் செய்து கொள்ளலாம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Oneplus

    அடுத்த செய்தி